மாவீரர் மேஜர் கணேஷ்சின் மனைவி கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் புலனாய்வுத்துறையினரால் கைது
தமிழ் நாட்டின் திருச்சியில் பயத்தின் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக தனது இரண்டு பிள்ளைகளுடன் கோவர்ஜன் 10, நிதுர்சன் 7
-
1 மே, 2013
30 ஏப்., 2013
விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்று கைது செய்யப்பட்ட ராமதாஸ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கூடுதல்(ஐ.பி.சி 143), காவல்துறையின் உத்தரவை உதாசீனப்படுத்துதல்(ஐபிசி 188), பொதுமக்களுக்கு இடையூறு செய்தல்(ஐ.பி.சி. 151) ஆகிய பிரிவுகளுடன் வன்முறையை
இலங்கை இனப்படுகொலையை நடத்திய மஹிந்த இலங்கை ஜனாதிபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மாணவர்கள் போராட்டம் மீண்டும் தொடங்குகிறது.
தமிழகத்தில் ஈழத் தமிழர் பிரச்சனையை ஒரு புதிய பரிமாணத்துக்கு கொண்டு சேர்த்தவர்கள் மாணவர்கள். அரசியல் கட்சிகளின் எந்த ஒரு ஆதரவும் இன்றி தனித்தே போராடி வருகின்றனர் மாணவர்கள்.
ராமதாஸ் கைது எதிரொலி : கிருஷ்ணகிரியில் பஸ் எரிப்பு
பாமக நிறுவனர் ராமதாஸ் கைதை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகாமையில் அரசு பேருந்தை வழிமறித்து பயணிகளை இறக்கிவிட்டு, தீ வைத்து கொளுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் அரசு பேருந்து முழுமையாக எரிந்தது. பேருந்துக்கு தீ வைத்தவர்களை பிடிக்க இன்ஸ் பெக்டர் சிவலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பாமக கொடிகள் சேதம்- சாலைமறியல் செய்தவர்களிடம்
டி.எஸ்.பி சமாதானம் ( படங்கள் )
டி.எஸ்.பி சமாதானம் ( படங்கள் )
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பாதிரி கிராம கூட்ரோட்டில் உள்ள பாமக கொடி கம்பத்தில் இருந்த கொடியில் அசிங்கம் ஏற்படுத்தியதாக கூறி காஞ்சிபுரம் சாலையில் அக்கிராம பாமகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
அதேபோல் மும்முனி கிராமத்தில் பாமக கொடியை சேதப்படுத்தியதை கண்டித்து செய்யாறு பைபாஸ் சாலையிலும் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் வந்தவாசி பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாமகவினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் வந்தவாசி சுற்றுவட்டாரப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் எஸ்பி முத்தரசி தலைமையில் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காடுவெட்டி சென்னையில் கைது
பாமக சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ஜெ.குரு சென்னையில் கைது செய்யப்பட்டார். திருவல்லிக் கேணியில் உள்ள சட்டமன்ற விடுதியில் ஜெ.குருவை கைது செய்தது போலீஸ்.
மாமல்லபுரம் வன்னிய சித்திரை முழுநாள் இரவு விழாவில் அனுமதித்த நேரத்திற்கு மேலாக பேசியதன் புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
ராமதாசுக்கு 15 நாள் சிறை : கைதுக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டார்
மரக்காணம் கலவரம் தொடர்பாக விசாரனை கோரி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார் ராமதாஸ். காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
மரக்காணம் கலவரம் தொடர்பாக விசாரனை கோரி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார் ராமதாஸ். காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் விழுப்புரத்தில் ஒரு மண்டபத்தில் தங்கவைக்ப்பட்டார். இந்நிலையில் அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்படுகிறார்.
இதையடுத்து ராமசாசிடம் விழுப்புரம் போலீசார், நீதிமன்ற கைதுக்கான ஆவணங்களில் கையெழுத்து வாங் கிக்கொண்டுள்ளனர்.
ராமதாஸ் கைது எதிரொலி : செஞ்சியில் 5 பேருந்துகள் உடைப்பு - சாலைமறியல்
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்கப்படுகிறார். காவல்துறையின் தடையை மீறி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து பாமகவினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். செஞ்சியில் 5 பேருந்துகளை அடித்து உடைத்துள்ளனர். மேலும் செஞ்சியில் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் 500க்கும் அதிகமான பாமகவினர் கைது
திருப்பத்தூர், நாட்டராம்பள்ளி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, அணைக்கட்டு, வேலூர், ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம் போன்ற பகுதிகளில் பாமக நிறுவனர் ராமதாஸ் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக் கப்பட்டுள்ளனர்.
ராமதாசை எந்த சிறைக்கு கொண்டு செல்வது? :
காவல்துறை திணறல்
காவல்துறை திணறல்
மரக்காணம் கலவரம் தொடர்பாக விசாரனை கோரி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார் ராமதாஸ். காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் விழுப்புரத்தில் ஒரு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்படுகிறார்.
இதையடுத்து ராமசாசிடம் விழுப்புரம் போலீசார், நீதிமன்ற கைதுக்கான ஆவணங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள அவரை எந்த சிறைக்கு கொன்டு செல்வது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. வட தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்காணோர் கைதாகி யுள்ளனர். இதனால் வடதமிழகத்தில் பதட்டம் நீடிக்கிறது.
இந்த நிலையில் ராமதாசை எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் எந்த சிறைக்கு கொண்டு செல்வது என்பதில் போலீசார் திணறி வருகின்றனர்.
மதுரை சிறையில் ராமதாசை அடைக்க திட்டம் ?
காவல்துறையின் தடையை மீறி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்படுகிறார்.
காவல்துறையின் தடையை மீறி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்படுகிறார்.
வடமாவட்டங்களில் வன்னியர்கள் அதிகமாக இருப்பதால் தென்மாவட்டத்தில் குறிப்பாக மதுரை சிறையில் அடைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் தெரிகிறது.
தென்மாவட்டத்தில் அடைத்தால் பதட்டம் குறையும் என்று முடிவெடுத்து மதுரை சிறையில் அடைக்க விருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் இருந்து கசிகிறது.
ராமதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு - விபரம்!
பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு 15 நாள் சிறையில் வைக்கப்படுகிறார். அவர் கைது செய்யப்பட்டதற்கான வழக்கு விபரம் :
143, 188,சி.எல்.ஏ.7(1) (a) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை பொதுமக்களுக்கு தொந்தரவு தருதல், சட்டவிரோதமாக கூட்டம் நடத்துதல், காவல்துறை தடையை மீறுதல் போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர்கள் மூன்று நாட்களுக்கு பின் ஜாமீனில் வெளிவர வாய்ப்பு உள்ளது என குறிப்பிடுகின்றனர். நாளை மே -1 என்பதால் அரசு விடுமுறை. அதனால் நாளை ஜாமீன் வாங்க முடியாது. நாளை மறுதினம் தான் பாமக வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தடைமீறு - பாமகவினருக்கு ராமதாஸ் உத்தரவு
கடந்த 25 ந்தேதி பாமக மாமல்லபுரத்தில் சித்திரை நாள் குடும்ப விழா கூட்டம் நடத்தியது. இதில் கலந்துக்கொள்ள பாமகவினர் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் போது மரக்காணத்தில் பாமகவினருக்கும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈழப்பிரச்சினைக்கு ஆதரவாக மக்கள் நேரடியாக களம் இறங்கினால் சோவியத் ரஷ்யா போன்று இந்தியா துண்டு, துண்டாகத்தான் உடைந்து போகும் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கடந்த 16ம் திகதி பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு வரை நடைபயணத்தை மதிமுக., பொது செயலாளர் வைகோ தொடங்கினார்.
உண்மையை உலகுக்கு உரத்துச் சொன்ன
தமிழக முதல்வருக்கு நன்றி! : திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’மரக்காணம் வன்முறை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இவ்விவாதத்தில் கலந்துகொண்டு தேமுதிக சார்பில் பண்ருட்டி இராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட்
29 ஏப்., 2013
LTTEக்கு ஆசிய மற்றும் இரு ஆபிரிக்க நாடுகள் பாதுகாப்பு வழங்க இருந்தன! திருக்கிடும் தகவல் – கே.பி
இரண்டு ஆபிரிக்க நாடுகளும், ஒரு ஆசிய நாடும் இவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு பாதுகாப்பு வழங்க முன்வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த நாடுகள் என்று அவர் பெயர் குறிப்பிட்டுக் கூறவில்லை. அக் கேள்வியையும் அவர் தவிர்த்துகொண்டுள்ளார். இருப்பினும் போர் நடைபெற்ற காலப்பகுதியான 2008ம் ஆண்டிலேயே இது நடைபெற்றதாக அவர் மேலும் விபரித்துள்ளார். அத்துடன் தாம் 2008ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை யுத்த நிறுத்தம் குறித்து வலியுறுத்தி வந்த போதும், அவர் இதனை கருத்தில் கொள்ளவில்லை என்றும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதன் பின்னர், யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வது தொடர்பில் புலிகள் தன்னிடம் ஆலோசித்ததாகவும் இருப்பினும் அப்போது காலம் கடந்துவிட்டது என்றும் கே.பி மேலும் குறிப்பிட்டுள்ளார். அதாவது இவர் குறிப்பிடும் 2008ம் ஆண்டு போர் நிறுத்தமானது கோட்டபாயவால் நெறிப்படுத்தப்பட்டது ஆகும். விடுதலைப் புலிகள் எந்த ஒரு கோரிக்கையையும் முன்வைக்காது, தமது ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையவேண்டும் என்பதே அப்போதைய இலங்கை அரசின் போர் நிறுத்தமாக அறிவிக்கப்பட்டது. அப்படி என்றால் நிபந்தனை அற்ற சரணடைவையே அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் அதற்கு அடிபணியவில்லையே ! அவர்கள் இறுதிவரை போராடினார்கள். தற்போது வந்து 3 நாடுகள் உதவ இருந்தது 2 நாடுகள் உதவியது என்று கூறுவது எல்லாம் தன்னை நியாயப்படுத்த அவர் கூறும் கூற்றாக அல்லவா இருக்கிற
LTTEக்கு ஆசிய மற்றும் இரு ஆபிரிக்க நாடுகள் பாதுகாப்பு வழங்க இருந்தன! திருக்கிடும் தகவல் – கே.பி
ஆபாசத் தளங்களைவிட மோசமான செய்தித் தளங்கள்!
செய்தித் தளங்கள் என்ற பெயரில் வலம் வரும் சில இணையத் தளங்கள் இன்று ஆபாசம் நிறைந்த காமத் தளங்களை விடக் கேவலமாக மாறி வருவது வேதனையளிக்கிறது. அரசியல், நாட்டு நடப்புகள், சமூக முன்னேற்றக் கட்டுரைகள், வரலாறுகள்,
டக்ளஸ் தேவானந்தாவுக்கு பகிரங்க மடல்
300 வரையான உள்ளுர் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பில் உள்ள யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி உணவகம் (கன்ரீன்) என்ன நிலையில் நடக்கிறது என்று தெரியுமா? 12 சமையல் பணியாளர்கள் நியமனம் செய்யக்கூடிய இடத்தில்
28 ஏப்., 2013
தமிழரசுக் கட்சியை புறந்தள்ளி ஏனைய கட்சிகள் இணைந்து கூட்டமைப்பை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்: ரெலோ மாநாட்டில் தீர்மானம்
தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளோட், ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒ |
27 ஏப்., 2013
சிறுமி மீது துஸ்பிரயோகம்! பருத்தித்துறையில் ஒருவர் கைது!
15 வயது நிரம்பிய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடுவீதியில் துப்பாக்கி வெறியாட்டம்!! பொது மக்கள் படுகொலை!!! (காணொளி)
இச் சம்பவமானது வியாழக்கிழமை 14h00 மயியளவில் Berre நீர்க்கரையிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நடந்துள்ளது. இதில் வீட்டு முன்பகுதியில் நின்று வேலை கொண்டிருந்த 35 மற்றும் நாற்பது வயதுடைய இரு ஆண்களை இந்த Istres ஐச் சேர்ந்த 19 வயது இளைஞன்
தமிழ்நாடு கரூரில் ஆழதுனைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுமியை காப்பாற்றும் முயற்சி நேரடி ஒளிபரப்பை புதியதலைமுறை தொலைக்காட்சியில் காணலாம்
www.puthiyathalaimurai.tv
www.puthiyathalaimurai.tv
வீரத்தமிழன் மேதகு பிரபாகரன் அவர்களிடம் இருந்த 56 படைத்துறைகளின் தொகுப்பு
1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17-வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார்.தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத்
ஈழத்தமிழர்களின் நிலங்களை இராணுவம் ஆக்கிரமிப்புச் செய்வதை தடுக்குமாறு கருணாநிதி கோரிக்கை
இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த அவர்களுக்குச் சொந்தமான நிலப் பகுதிகளையெல்லாம் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து கைப்பற்றுகின்ற முயற்சிகளை இந்திய அரசும் உலக நாடுகளும் தலையிட்டு நிறுத்துமாறு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
26 ஏப்., 2013
வட மாகாணசபை தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி! – தயாமாஸ்டர்
இது தொடர்பில் அவர் கூறுகையில்,வடக்கு மாகாண சபைத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும் ஊடகவியலாளருமான தயா மாஸ்டர் என்று அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி போட்டியிடவுள்ளார்.
நடக்கவிருக்கும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி. இதற்காக இரு கட்சிகள் என்னை வேட்பாளராக நிறுத்துவதற்கு அணுகியிருந்தன. இலங்கையில் உள்ள முக்கிய தேசியக் கட்சியொன்றும் வடக்கில் உள்ள அரசியல் கட்சியொன்றும் இவ்வாறு என்னைக் கேட்டுள்ளன. நான் எந்தக் கட்சியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றார். இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த போது அவருடன் இது தொடர்பான சந்திப்பொன்றை நடத்தியதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - 2013 நிர்வாக உறுப்பினர்கள் .
Canada - Old Students’ Association of Pungudutivu
கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - 2013
கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 2013வது ஆண்டிற்கான பொதுக்கூட்டம் மார்ச் 31, 2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. மேற்படி பொதுக்கூட்டத்தில் நடப்பாண்டு நிர்வாகிகளாக அருண் குலசிங்கம்(தலைவர்), எஸ்.எம். தனபாலன்(செயலாளர்;), கதிர் மகாத்மன்(பொருளாளர்), மற்றும்; ஜம்போதரநாதன் விஸ்வலிங்கம்(உபதலைவர்), கைலையநாதன் கோபாலபிள்ளை(உபசெயலாளர்), மணிக்கவாசகர் தம்பிப்பிள்ளை(நாதன்)(உபபொருளாளர்), மற்றும் உறுப்பினர்களாக கருணாகரன் ஸ்ரீஸ்கந்தராசா, ரகுராம் சோமசுந்தரம், மார்க்கண்டு சுகுணேஸ்வரன், குமார மனேகரன், பிரபா நல்லதம்பி, விஜய் கார்த்திகேசு, சோமசுந்தரம் பசுபதிப்பிள்ளை(விசு), திருநாவுக்கரசு கருணாகரன், வடிவேல் நிமலகாந்தன், கணேசபிள்ளை கணேசலிங்கம் (தாசன்), சங்கரலிங்கம் சதானந்தலிங்கம், மயில்வாகனம் ஜெயகாந்தன், அனுராகரன் குலசேகரம்பிள்ளை, துரை ரவிந்திரன், கந்தையா மதியழகன், மற்றும் போசகர்களாக நல்லையா தர்மபாலன், சண் சதாசிவம், ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 2013ம் ஆண்டிற்கான வருடாந்த ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் மோர்னிங்சைட் பார்க்கில் ஆகஸ்ட் 04இ2013 (யுரபரளவ 04இ2013) ஞாயிற்றுக்கிழமையன்று சங்கத்தின் முன்னாள் போசகர் அமரர் இராமலிங்கம் இராசையா அவர்களின் ஞாபகார்த்த திடலில் நடைபெறவுள்ளது. ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்களுக்கான அன்பளிப்புகள், மற்றும் புங்குடுதீவில் கல்விகற்கும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கான நிதியுதவிகளை வழங்க விரும்புவோர் இவ்வாண்டிற்கான நிர்வாகசபை உறுப்பினர்களிடம் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.
கனடா- புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்.
தலைவர் செயலாளர் பொருளாளர்
அருண் குலசிங்கம் ளு.ஆ. தனபாலன் கதிர் மகாத்மன்
மேலதிக தொடர்புகளுக்கு:- 416-357-2847 647-290-5856 647-465-3720
25 ஏப்., 2013
தனுஷ் படப்பிடிப்பில் விபரீதம் :
2 துணை நடிகைகள் பலி
2 துணை நடிகைகள் பலி
நடிகர் தனுஷ் நடிக்கும் நையாண்டி படத்தை வாகை சூடவா படத்தை இயக்கிய எ.சற்குணம் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பின்போது விபரீதம் ஏற்பட்டுள்ளது. இடமலையில் குளத்தில் மூழ்கி விஜி,சரசு என்ற 2 துணை நடிகைகள் உயிரிழந்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)