வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் இன்று 08.12.2013 ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்றுறை தொகுதிக்குட்பட்ட வேலணை, புங்குடுதீவு பகுதிகளுக்கு விஜயம் செய்து தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு தனது நன்றியினைத்தெரிவித்துக்கொண்டதுடன், மக்களின் தேவைகள்,பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார். மாகாணசபை உறுப்பினருடன் வலி.தெற்கு பிரதேசசபை தலைவர் தி.பிரகாஷ், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சி.ஹரிகரன், இலங்கைத்தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞரணிச்செயலாளர் ப.தர்சானந் ஆகியோர் கலந்துகொண்டனர்.
-
9 டிச., 2013
தமிழ்நாடு முழுவதும் டிச.02-ம் தேதி முதல் அடுத்த மாதம் 26-ம் தேதி வரை "இல்லம் தோறும் தாமரை, உள்ளம் தோறும் மோடி' என்கிற பிரச்சார யாத்திரையை பா.ஜ.க. நடத்து கிறது. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான மோடியின் அருமை பெருமைகளை விளக்கும் இந்த யாத்திரையின் உச்சகட்டமாக நரேந்திர மோடியின் செல்போன் எண்ணை கிராமத்தில் உள்ள விவசாயியிடம் கொடுத்து நேரடியாக மோடியுடன் பேச வைக்கின்றனர்.
8 டிச., 2013
யாழ் ஈபிடிபி தலைமையகத்தில் கைத்துப்பாக்கியா? நாட்டின் ஜனநாயகம்: சபையில் அரியநேத்திரன் காட்டம்
நாட்டின் ஜனநாயகம் இன்று கைத்துப்பாக்கியாகிவிட்டதுடன், யாழில் ஈபிடிபி அரசியற் கட்சி காரியாலயத்தில் கைத்துப்பாக்கி என்பதுடன் யுத்தமில்லாத காலத்தில் 500 பேர் கொலை என்றால் நாட்டில் நடப்பது என்ன என்று சபையில் அரியநேத்திரன் பா.உ காட்டம்.
ஆம் ஆத்மியின் சாதனை ஆச்சரியப்படுத்துகிறது: பெரிய கட்சிகளுக்கு எச்சரிக்கை: காங்கிரஸ் கருத்து
முதன் முறையாக டெல்லி சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் அக்கட்சி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
மோடி அலையே வெற்றிக்கு காரணம்: வசுந்தரா ராஜே
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தில்லி, சட்டீஸ்கர் உட்பட நான்கு மாநிலங்களில் பாஜக அமோ வெற்றி பெற்றதற்கு மோடியின் அலையே காரணம் என்று ராஜஸ்தான் பாஜக தலைவரும் அங்கு முதல்வராக பொறுப்பேற்க விருக்கும் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றததையடுதது பாஜகவினர் பட்டாசுவெடித்து கொண்டாடிவருகின்றனர்,
ராஜஸ்தானில்(199) பாஜக 128இடங்களில் வெற்றி 31 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 18இடங்களில்வெற்றி பெற்று 7இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் 7இடங்களில் வெற்றி பெற்று 8 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
டெல்லி: 21 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார் அரவிந்த் கேஜ்ரிவால்
டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. பாஜக, ஆம் அத்மி கட்சி முன்னிலை பெற்றிருந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக!
மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 116 இடங்களை கைப்பற்றினால் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலையில், பாஜக 157 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 60 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 2005 மற்றும் 2009 சட்டமன்ற தேர்தல்களில் ஆட்சியை பிடித்த பாஜக தற்போது 2013 சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்கிறது.
ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக: முதல் அமைச்சராக பதவியேற்கிறார் வசுந்தரா ராஜே சிந்தியா
199 தொகுதிகளில் நடந்த தேர்தல்களில் 109 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. 57 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்று, 11 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியை பாஜக பிடிப்பது உறுதியானது.
மத்தியப்பிரதேசம்: பாஜக 103 தொகுதிகளில் முன்னிலை
மத்தியப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக 103 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 47 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
ராஜஸ்தான்: 119 தொகுதிகளில் பாஜக முன்னிலை
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக 119 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 21 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 6 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்
1) பி.சரோஜா - அதிமுக.
2) மாறன் - திமுக.
3 )பழனி - சுயேட்சை
4) எம்.பழனிசாமி - சுயே
5) கே.பழனிவேல் - சுயே
6) கே.பூபாலன் - சுயே
7) ஈ.பொன்னுசாமி - சுயே.
8) சி.மணிகண்டன் - சுயே
9) கே.மதியழகன் - சுயே
10) ஏ.ராஜாக்கண்ணு - சுயே.
11) ஏ.ராஜேந்திரன் - சுயே.
12) நோட்டா (மேலே உள்ள யாவருக்கும் இல்லை)
மொத்தம் பதிவான வாக்குகள் 2,14,434
ஆண்கள் 1,05,610
பெண்கள் 1,08,820
திருநங்கைகள் 4
ஆண்கள் 1,05,610
பெண்கள் 1,08,820
திருநங்கைகள் 4
ஏற்காடு: 21.336 வாக்குகளில் அதிமுக முன்னிலை
ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் 4வது சுற்று முடிவில் அதிமுக 21336 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. திமுக 11788 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. 9 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலையில் உள்ளது.
ஏற்காடு தொகுதியில் இதுவரை 912 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்
டெல்லியில் தொடர்ச்சியாக 3 முறை ஆட்சி புரிந்த ஷீலா தீட்சித் கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார்
டெல்லி மாநிலத்தில் தொடர்ச்சியாக மூன்று முறை ஆட்சி புரிந்த முதல்வர் ஷீலா தீட்சித் இம்முறை கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார். அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் கணக்குக
ஷீலா தீட்சித்தை பின்னுக்குத் தள்ளிய கேஜ்ரிவால்
டில்லி சட்டசபைத் தேர்தலில் முதல்வர் ஷீலா தீட்சித்தை எதிர்த்துப் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலையில் உள்ளார். டில்லி சட்டப் பேரவைத் தொகுதியில், சற்று முன்னர் வரை ஷீலா தீட்சித் முன்னிலை பெற்றிருந்தார். பின்னர் அவரைப் பின்னுக்குத் தள்ளி அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலை பெற்றுள்ளார்.
ராஜஸ்தான்: பாஜக 76 தொகுதிகளில் முன்னிலை
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி பாஜக 76 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுயில் முன்னிலையில் உள்ளது.
7 டிச., 2013
புறக்கோட்டையில் தீ! 50 கடைகள் எரிந்து சாம்பராகின! பலகோடி ரூபா சொத்துக்கள் நாசம்!
கொழும்பு - புறக்கோட்டை போதிராஜ மாவத்தையின் அரச மரத்தடிக்கு அருகில் அமையப்பெற்றுள்ள விகாரைக்கு பின்புறமாக அமைந்திருந்த (அங்காடி) பல்பொருள் விற்பனை சந்தைக் கடைத் தொகுதி நேற்று வெள்ளிக்கிழமை மாலை முற்றாக எரிந்து சாம்பரானது.
2009க்கு முன்னர் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற கொலைகளுடன் கமலுக்கு தொடர்பு உள்ளதா? பொலிஸார் ஆய்வு
2009 ம் ஆண்டுக்கு முன்னர் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற படுகொலைகளுடன் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமலுக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றி பயங்கரவாத மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை முன்னெடுக்கக் கூடும் என்று காங்கேசன்துறைப்
தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் பிரித்தானியா எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் சந்திப்பு
பிரித்தானியா எதிர்க்கட்சி தலைவர் எட் மிலிபெண்ட் அவர்களை கடந்த வெள்ளிக்கிழமை தமிழர் பேரவை உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.எதிர்வரும் மார்ச் மாதம் ஐநா வில் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் மகாநாடு மற்றும் இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுநலவாய
புலிகளின் தலைவர் பற்றி சிதம்பரத்தின் உள்ளக ரகசியம் அம்பலம்..
சமீபத்தில் சென்னையில் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அக் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேசிய பேச்சு, அந்த நேரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அது அத்துடன் முடிந்து போகும் என்று பார்த்தால்,
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சிரஞ்சீவி
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியிலிருந்து சிரஞ்சீவி ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அனுப்பியுள்ளார். தெலுங்கானா மாநிலம் அமைப்பதை கண்டித்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். தனது ராஜினாமா பற்றி ராஜ்யசபாவில் அவர் அறிவிப்பார் என கூறப்படுகிறது.
மூதூர் படுகொலை தொடர்பில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை நடாத்த முயற்சி!- இராணுவம்
ஏ.சீ.எப் தன்னார்வ தொண்டர் படுகொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை நடாத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
கமலேந்திரன் வட மாகாண எதிர்க்கட்சித்தலைவர் பதவியை துறக்க வேண்டும்: அமைச்சர் டக்ளஸ்
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சியன் கொலை தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கட்சியை சேர்ந்த கே.கமலேந்திரனை வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்குமாறு கேட்டுள்ளதாக ஈபிடிபி கட்சியின் தலைவரும் அமைச்சருமான
6 டிச., 2013
தொடரும் உள்ளூராட்சி சபைகளின் வரவு செலவுத் திட்டங்களின் தோல்வி: அதிர்ச்சியில் மஹிந்த அரசாங்கம்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்ளூராட்சி சபைகளில், தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டங்கள் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளமை அரசாங்கத்திற்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத் தடையை மீறி வலி.வடக்கிற்குச் செல்வேன்! அந்த மண்ணில் உயிர் பிரிவது பாக்கியம்: விக்னேஸ்வரன் சவால்
அதிகாரத்தைப் பகிர்வதாக சர்வதேசத்திற்கு 13வது திருத்தச் சட்டத்தை காண்பித்துவிட்டு அதனை நடைமுறைப்படுத்தாது விடுவதே, அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது. வடக்கு மாகாணசபைக்கு மத்திய அரசாங்கம் போடும் முட்டுக் கட்டைகள் இதனையே காட்டுகின்றன
சம்போ சங்கரா!
வேலைக்கு போகும் பெண்கள் எல்லாரும் விபச்சாரிகள் என்று சொன்ன சங்கராச்சாரி யோக்கியதை தெரியுமா? காஞ்சி காம கோடி ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என பிராமணர்களால் அழைக்கப்படும் ஜெயந்திரனின் வண்டவாளங்கள், தில்லுமுல்லுகள் சங்கர ராமன் கொலை விழக்கை விசாரிக்கும் போது தெரியவந்தது. சங்கர ராமன் கொலை வழக்கு விசாரணையின் போது சங்கராச்சாரியின் காம லீலைகள் வெளியாயின. சங்கராச்சாரியின் பாலியல்
இன்று உதைபந்தாட்ட உலககிண்ண போட்டிக்கான குழுக்கள் தெரிவாகவுள்ளன
இன்றைய இந்த விழாவில் விருந்தினர்களாக பின்வரும் முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்குபற்றுகிறார்கள் .இவர்கள் முன்னாள் உலக கிண்ணத்தை வென்றா நாடுகளின் வீரர்கள் என்ற கௌரவிப்பில் இடம் பெறுகிறார்கள் Uruguay legend Alcides Ghiggia, Englishman Geoff Hurst, form
இன்றைய இந்த விழாவில் விருந்தினர்களாக பின்வரும் முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்குபற்றுகிறார்கள் .இவர்கள் முன்னாள் உலக கிண்ணத்தை வென்றா நாடுகளின் வீரர்கள் என்ற கௌரவிப்பில் இடம் பெறுகிறார்கள் Uruguay legend Alcides Ghiggia, Englishman Geoff Hurst, form
5 டிச., 2013
ஏற்காடு இடைத்தேர்தல்: 89.24 % வாக்குப்பதிவு
- சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட துக்கியாம்பாளையத்தில் வாக்களிக்கக் காத்திருந்த வாக்காளர்கள்.
ஏற்காடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதில் 89.24 சதவீத வாக்குகள் பதிவாகின. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 8 மணிக்குத் தொடங்கி,
மாணவர் வீசாவில் மாலைதீவு யுவதிகளை இலங்கைக்கு அழைத்து வந்து விபச்சாரத் தொழில்!
மாணவர் வீசாவில் மாலைதீவு யுவதிகளை இலங்கைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க நகரங்களில் மாலைதீவு யுவதிகள் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மாகாணசபையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் முடிவுகளை மீறி செயற்பட்டமைக்கு கூட்டமைப்பு ஆட்சேபம்
கிழக்கு மாகாண சபையில் கடந்த இரண்டு நாட்களாக வரவு செலவுத்திட்ட விவாதம் நடந்து வரும் நிலையில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீறி இன்றைய தினம் சபையை நடத்தியமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்பேசம் தெரிவித்துள்ளது.
4 டிச., 2013
போர்க்குற்ற விசாரணையில் முன்னேற்றம் இல்லாவிட்டால், சர்வதேச நாடுகளின் பொறுமை குறைந்து விடும்!- அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை
போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை நடத்தும் சர்வதேச நாடுகளின் வேண்டுகோள்களை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்து வருகின்ற நிலையில், இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது
புலிகளின் நாணயத்தின் மறுபக்கமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது: சபையில் கெஹலிய
தமிழர் தாயகக் கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் கைவிடவில்லை. அது தொடர்ந்தவண்ணமே இருக்கின்றது. அந்த வகையில் புலிகளின் நாணயத்தின் மறுபக்கமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுவருகின்றது என்று அமைச் சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நேற்று சபையில் தெரிவித்தார்.
ஈ.பி.டி.பி கட்சியைச்சேர்ந்த நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியேல் றெக்ஷியன் (ரஜீப்) படுகொலை வழக்கில், ஈ.பி.டி.பி கட்சியைச்சேர்ந்த வடமாகாணசபை எதிர்க்கட்சித்தலைவர் க.கமலேந்திரன் (கமல்) கொழும்பில் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதேநேரம் தானியல் றெக்சியனுடைய மனைவி மற்றும் வேலணையை சேர்ந்த இளைஞர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம் தானியல் றெக்சியனுடைய மனைவி மற்றும் வேலணையை சேர்ந்த இளைஞர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 டிச., 2013
புலிகளுக்கு 10 ரஷ்யர்கள் சிறப்பு கொமாண்டோ பயிற்சி அளித்தனர்!- நீதிமன்றில் முன்னாள் போராளி சாட்சியம்
தமக்கும் வேறு சிலருக்கும் பத்து ரஷ்யர்கள் சிறப்பு கொமாண்டோ பயிற்சி அளித்ததாக, அனுராதபுர விமானப்படைத் தளம் மீதான தாக்குதலில் தொடர்புடையவரென குற்றம் சாட்டப்பட்டுள்ள, முன்னாள் விடுதலைப் புலிப் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் தமிழரசுக் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் அமரதாச ஆனந்தன் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் அமரதாச ஆனந்தன். இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமெரிக்காவில் கூடுகின்றது
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்தின் முதலாவது அரசவை இவ்வாரம் கூடுகின்றது.எதிர்வரும் டிச 6ம், 7ம், 8ம் திகதிகளில் கூடுகின்ற அரசவையின் பிரதான அமர்வானது, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் அமைகின்றது. தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக
சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தால் பொட்டு அம்மானுடன் நெருங்கியவர் எனப்பட்ட வங்கி முகாமையாளர் வாதத்தால் விடுதலை
புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான பொட்டு அம்மானுடன் தொடர்பு உள்ளதாக பயங்கரவாதத் தடைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பிரபல தனியார் வங்கியின் சிரேஸ்ட முகாமையாளர், சட்டத்தரணி கே.வி தவராசாவின் வாதத்தையடுத்து
என்னை பதவியிலிருந்து நீக்க, நாமல் ராஜபக்ச, வீரவன்ஸவிற்கு பின்னால் செல்ல வேண்டிய அவசியமில்லை!- பி.பீ. ஜெயசுந்தர
நிதியமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்க வேண்டும் என்றால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அமைச்சர் விமல் வீரவன்ஸவிற்கு பின்னால் செல்ல வேண்டிய அவசியமில்லை என நிதியமைச்சின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் பணம் இலங்கைக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது: ஜீ.எல்.பீரிஸ்
சொந்த நாடுகளில் கொடுக்கப்படும் அழுத்தங்கள் காரணமாக தமது இருப்பை கருதி சர்வதேச நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களை கொடுத்து வருவதாககவும் இதற்கு பதிலாக இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக அந்த நாடுகளின் மதிப்பீடு நியாயமாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கம்
பிந்திய செய்தி
இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து பொருளாதார தடை?
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை கொண்டு வர இங்கிலாந்து முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் வேலையில் இங்கிலாந்து ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2014ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என இங்கிலாந்தில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு பிரதமர் கேமரூனிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், வரும் மார்ச் மாதம் இலங்கை அரசு போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக போதுமான விசாரணைகளை நடத்தவில்லை என தெரிவித்து இங்கிலாந்து பொருளாதார தடைவிதிக்கும் திட்டம் இருப்பதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியுள்ளது. இதன் மூலமாக சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு இலங்கையை உட்படுத்துவதே இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய நாடுகளின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.
சிங்களவர்கள் எதிர்ப்பு இதனிடையே, இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கைக்கு எதிராக அங்கு நடந்து கொண்டமைக்கு அதிருப்தி தெரிவித்து இங்கிலாந்தில் உள்ள இலங்கை அரசின் ஆதரவு அமைப்பான ‘இங்கிலாந்து இலங்கையர் ஒன்றியம்’ என்ற அமைப்பு நேற்று மனு வழங்கியது. அதில், பிரதமர் டேவிட் கேமரூன், புலம்பெயர் புலிகளுக்கு ஆதரவாக வெளியிட்ட கருத்துக்கள் இங்கிலாந்தில் சிங்களவர்கள் மற்றும் புலிகளுக்கு எதிரான தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும், இங்கிலாந்தில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் இருவர் தனித் தனியாக கருத்துக்களை முன்வைத்து இரண்டு கடிதங்களை இணைத்துள்ளதாக தெரிகிறது.
இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து பொருளாதார தடை?
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை கொண்டு வர இங்கிலாந்து முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் வேலையில் இங்கிலாந்து ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2014ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என இங்கிலாந்தில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு பிரதமர் கேமரூனிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், வரும் மார்ச் மாதம் இலங்கை அரசு போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக போதுமான விசாரணைகளை நடத்தவில்லை என தெரிவித்து இங்கிலாந்து பொருளாதார தடைவிதிக்கும் திட்டம் இருப்பதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியுள்ளது. இதன் மூலமாக சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு இலங்கையை உட்படுத்துவதே இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய நாடுகளின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.
சிங்களவர்கள் எதிர்ப்பு இதனிடையே, இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கைக்கு எதிராக அங்கு நடந்து கொண்டமைக்கு அதிருப்தி தெரிவித்து இங்கிலாந்தில் உள்ள இலங்கை அரசின் ஆதரவு அமைப்பான ‘இங்கிலாந்து இலங்கையர் ஒன்றியம்’ என்ற அமைப்பு நேற்று மனு வழங்கியது. அதில், பிரதமர் டேவிட் கேமரூன், புலம்பெயர் புலிகளுக்கு ஆதரவாக வெளியிட்ட கருத்துக்கள் இங்கிலாந்தில் சிங்களவர்கள் மற்றும் புலிகளுக்கு எதிரான தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும், இங்கிலாந்தில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் இருவர் தனித் தனியாக கருத்துக்களை முன்வைத்து இரண்டு கடிதங்களை இணைத்துள்ளதாக தெரிகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)