""ஹலோ தலைவரே...…மா.செக்களுக்கு கல்தா, கிளைக்கழகங்கள் கலைப்புன்னு கலைஞ ரோட அதிரடி ஆக்ஷன் பற்றி முன்கூட்டியே சொன்னது நம்ம நக்கீரன்தான். முதல்கட்ட ஆபரேஷன் ஆரம்பமாயிடிச்சே...''
-
26 ஜூன், 2014
மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு தீவிரவாதிகள் கடல் வழியாக புகுந்து நடத்திய தாக்குதலில், நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். மேலும், 9 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராக்கிங் கொடுமையால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதிலும் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அதிகாரிகள் மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக அரங்கேறும் கொடுமைகளை தடுக்க சட்டத்தில் பல வழிகள் இருந்தும் அதை சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தக் கொடுமையின் உச்சக்கட்டத்தில் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக அரங்கேறும் கொடுமைகளை தடுக்க சட்டத்தில் பல வழிகள் இருந்தும் அதை சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தக் கொடுமையின் உச்சக்கட்டத்தில் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
சென்னை, எழும்பூரில் உள்ள கல்லூரியில் படித்த மாணவி சரிகாஷா ராக்கிங் கொடுமையால் கடந்த 1998ல் இறந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் பிறகு ராக்கிங் கொடுமையை தடுக்க கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டனர். ஒவ்வொரு கல்லூரிகளிலும் ராக்கிங்கை தடுக்க குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து நடைபெறும் ராக்கிங் சம்பவங்கள் அந்தக் குழுக்கள் பெயரளவுக்கே செயல்படுவதை உறுதிப்படுத்துகின்றன.
அம்மா மருந்தகம் தொடகுகிறார் ஜெயலலிதா
தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களை அரசு தொடங்கியுள்ளது. குறைந்த விலையில் தரமான உணவை வழங்கும் இந்த உணவகங்கள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் அம்மா குடிநீர், அம்மா உப்பு ஆகியவை இடம் பிடித்துள்ளன.
25 ஜூன், 2014
நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து அக்கட்சிக்குள் களை எடுக்கும் படலம் நடந்து வருகிறது. முதல் கட்டமாக விவசாய பிரிவு அணி செயலாளர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் எம்.பி, தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்பட 30க்கும் மேற்பட்டவர்களை கட்சியில் இருந்து |
தமிழர்களுக்கான நிரந்தரதீர்வைப் பெற அழுத்தம் கொடுங்கள்; சுவிஸ் தூதுவரிடம் அவைத்தலைவர் வேண்டுகோள்
தமிழ் மக்களுக்கு ஒரு நிலையான தீர்வை வழங்குவதற்கு சுவிட்சர்லாந்து இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வடக்கு மாகாண அவைத்த
சென்னையில் பெண்ணை கட்டிப்போட்டு கொலை செய்து கொள்ளை: பெண் வேடமிட்டு மர்ம நபர்கள் துணிகரம்
இதனை நம்பி அவர் மர்ம நபர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மெகருன்னிசாவை கட்டிப்போட்டு கொலை செய்த நபர்கள், வீட்டில் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூபாய் 2 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
வீடு திரும்பிய சையது அலி, சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவர் கொடுத்த தகவலின் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
சென்னையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு 101..5 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி இணக்கம்
இலங்கையின் இளைஞர்களின் ஆளுமை அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து அவர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் ஆளுமை வாய்ந்த ஊழியர்
அகதிகளை மீளவும் இலங்கைக்கு திருப்பியனுப்புவது ஆபத்தானது:ஆஸி.மனித உரிமை ஆணைக்குழு
இலங்கையில் இருந்து வரும் அகதிகளை திருப்பியனுப்பும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் செயற்பாடு ஆபத்தானவை என்று அவுஸ்திரேலியாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .
நாங்கள் கிண்ணத்திற்கு தகுதியற்றவர்கள்: விரக்தியில் ரொனால்டோ
நாங்கள் எப்போதும் உலகக்கிண்ணத்தை வெல்லும் அணியாக திகழ முடியாது என போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ கூறியுள்ளார்.
உலக சாதனைகளை சமநிலைப்படுத்திய சங்கா, ஜெயவர்த்தனே
இலங்கை அணியின் ஜாம்பவான்கள் சங்கக்கரா ஜெயவர்த்தனே இருவரும் டெஸ்ட் தரவரிசையில் சமநிலையான ஓட்டங்களை பெற்றுள்ளனர்.
ரெக்சியன் கொலை ; கமல் உள்ளிட்ட மூவருக்கும் மறியல் நீடிப்பு

நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
24 ஜூன், 2014
மாநிலங்களவை இடைத் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் திங்கள்கிழமையுட
அதிமுக வேட்பாளர் நவநீதிகிருஷ்ணனைத் தவிர, பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் மனுதாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
மாநிலங்களவை திமுக வேட்பாளராக இருந்த டி.எம்.செல்வகணபதி, தகுதி இழப்புக்கு உள்ளானதால் அவர் தனது எம்.பி.
முல்லையில் மீனவர்களின் வாழ்வாதாரம் முடக்கம்; அரசியல் ஆதிக்கங்களுடன் அரங்கேற்றம்
வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்துகிறோம் என்ற அரசின் போலிகளின் பின்னணியில் நாலாப்புறமும் மக்களின் இயல்பு வாழ்வு சிதைக்கப்படும் திட்டங்களே அரங்கேறி வருகிறன என
பொருளாதார தடை விதிக்கவே ஐ.நா. திட்டம் அதற்கு துணைபோகிறது தமிழ் கூட்டமைப்பு - அமைச்சர் திஸ்ஸவிதாரண
"இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத்தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்துலக சமூகத்திடம் முன்வைப்பதற்குரிய பொறிமுறைத் திட்டங்களை ஐ.நா. மனித உரிமைகள் சபை தற்போது வகுத்துவருகின்றது.
23 ஜூன், 2014
கலைஞர் கோபம்.சீனியர் மா.செ க்கள் நம்பும் ஸ்டாலின்
""ஹலோ தலைவரே...… சட்டம்-ஒழுங்கு நிலைமை பற்றி இந்து முன்னணித் தலைவர் ராஜகோபாலன் பேசுனப்ப, தமிழ்நாட்டில் சட்டம் இருக்குது, ஆனா அது ஒழுங்கா இல்லைன்னு சொல்லியிருக்காரு.''
""ஊடகங்களில் வரும் செய்திகளும் அதைத் தானே காட்டுது. மீடியாக்களில் வராத செய்தி களைப் பற்றிப் பேசுவோம்ப்பா.. அதைத்தானே நம்ம நக்கீரன் வாசகர்களும் பொதுமக்களும் நம்மகிட்டே எதிர்பார்க்குறாங்க.''
96-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், 91-96 வரையான ஜெ. ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக 40 வழக்குகள் போட்டது. ""எல்லா வழக்கிலும் நான் குற்றமற்றவள் என என்னால் நிரூபித்துவிட முடியும். ஆனால் இந்த சொத்துக்குவிப்பு வழக்குதான்...'' என தனது வழக்கறிஞர்களிடம் சந்தேகமாக அன்றே சொன்ன ஜெ., கடந்த 18 வருடங்களாக சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டார்.
ஆனால் கடந்த 17-ந் தேதி (செவ்வாய்) சுப்ரீம்கோர்ட்டில் நீதியரசர் விக்ரம்ஜித் சென், சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்த வாதங்கள்தான் "ஜெயலலிதாவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது என்கிறார்கள் சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர்கள்.
ஜெ. முதலமைச்சராக இருந்த 91-96ம் ஆண்டுவரை ஜெ., சசி, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்குபேரை இயக்குநர்களாக கொண்டு சுமார் 32 கம்பெனிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஜெ. வீடான 36, போயஸ் கார்டன் என்ற முகவரியில் இயங்கிய இந்த கம்பெனிகளில் கோடிக்கணக்கான ரூபாய் புழங்கியது. ஒரு கம்பெனியின் பெயரில் போடப்படும் லட்சக்கணக்கான ரூபாய் பணம் மற்றொரு கம்பெனியின் பெயருக்கு மாற்றப்படும் என நடந்த இந்தப் பணப்புழக்கத்திற்குக் காரணம் இரண்டே நபர்கள். ஒருவர் பெயர் ஜெயராமன். இன்னொரு வர் ராஜன். இருவருமே போயஸ் கார்டன் வேலையாட்கள். இந்த இருவரும்தான் இந்த 32 கம்பெனிகளையும் பதிவு செய்தவர்கள். இவர்கள் கையெழுத் தில்தான் 32 கம்பெனிகளிலும் திடீர் திடீரென்று லட்சக்கணக் கில் பணப் பரி மாற்றம் நடக்கும்.
தமிழ், முஸ்லிம் இனவாத அமைப்புக்களுக்கே தடையாம் ; அரசாங்கம்
இலங்கையில் இனவாத அமைப்புகள் என்ற பெயரில் செயற்பட்டுவரும் தமிழ், முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
ஐ.நா விசாரணைக்குழு நிபுணராக முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள்; மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இலங்கை தொடர்பிலான விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
22 ஜூன், 2014
தமிழ் யுவதியை இராணுவ வீரர் திருமணம் செய்வதா? திரைப்பட வெளியீடு இரத்து

தமிழ் யுவதியை இராணுவ வீரர் திருமணம் செய்வதான கதையை உள்ளடக்கி இலங்கையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதலால் முடங்கியது மகிந்தவின் இணையம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இணையத்தளம் உள்ளிட்ட அரச தரப்பினரின் பல அதிகாரபூர்வ இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி செயலிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்புச் சபைக்கு இலங்கை விவகாரம்
இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் பல தரப்பட்டவர்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தி வரும், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னாண்டஸ் தரங்கோ, தனது இலங்கைப் பயணத்தின் முடிவில்
ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையில் சாட்சியங்களை வழங்க தயாராக உள்ளவர்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமா இல்லையா என அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்திருந்தது.
இந்த நிலையில், இலங்கைக்கான அமெரிக்கத் துதுவர மற்றும் அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஒருவரை சந்தித்துள்ள கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்த கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்க தூதரகத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றதுள்ளதுடன், அதில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் சர்வதேச விசாரணையில், இலங்கையை சேர்ந்த எவராவது சாட்சியமளித்தால், அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த முடியும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியிருந்ததை அடிப்படையாக கொண்டே, கூட்டமைப்பு, அமெரிக்காவிடம் இந்த கோரிக்கையை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள கருத்து வெளியிடும் உரிமை இருக்க வேண்டும் என தாம் அமெரிக்க தூதுவரிடம் கேட்டுக் கொண்டதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்
பாணந்துறை தீ விபத்து மின்சார கசிவால் ஏற்படவில்லை :நோலிமிட் முகாமையாளர்
பாணந்துறையில் இன்று தீ வைக்கப்பட்ட நோலிமிட் கட்டடத்தில் மின்சார கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று நோலிமிட் ஆடை விற்பனை நிலையத்தின் முகாமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மாணவி பிளஸ் 2வில் உயர் புள்ளி - மருத்துவம் படிக்க மறுக்கிறது தமிழகம்

இலங்கையில் உயர்தர பரீட்சை இந்தியாவில் பிளஸ் 2 பரீட்சை என அழைக்கப்படுகின்றது. இந்தப் பரீட்சையில் 1200க்கு 1170 மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்க விரும்பி கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி அழைப்புக்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை அச்சுறுத்தி
பேராதனை பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை அச்சுறுத்தி
21 ஜூன், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)