புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூலை, 2025

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கரவெட்டி பிரதேசசபையில் தீர்மானம்! [Thursday 2025-07-24 07:00]

www.pungudutivuswiss.com


செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வை ஐ.நா நிபுணர் குழு மேற்பார்வை செய்ய வலியுறுத்தி வடமராட்சி - கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபைக் கூட்டத்தில் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வை ஐ.நா நிபுணர் குழு மேற்பார்வை செய்ய வலியுறுத்தி வடமராட்சி - கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபைக் கூட்டத்தில் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

23 ஜூலை, 2025

www.pungudutivuswiss.com

மரண அறிவித்தல்
--------------------------
திருமதி இராசலிங்கம் புஸ்பராசமணி (புஸ்பம்)
தோற்றம்-10 MAR 1938,,மறைவு-21 JUL 2025
புங்குடுதீவு 11ம் வட்டாரம், (பிறந்த இடம்) மல்லாவி,/ஆனைப்பந்தி,/ Toronto, கனடா
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி(ஸ்ரீ வேல் முருகன் ஸ்ரோர்ஸ்), யாழ். ஆனைப்பந்தி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் புஸ்பராசமணி அவர்கள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர், செங்கமலம் தம்பதிகளின் அருமை மருமகளும்,அம்பலவாணர் இராசலிங்கம்(மல்லாவி ஸ்ரீ வேல் முருகன் ஸ்ரோர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சற்குணம், சிவசரணம், சண்முகராசா(மல்லாவி நீதிராசா ஸ்ரோர்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,இரவீந்திரன்(ஜேர்மனி), வான்மதி(ஜேர்மனி), இளமதி(பிரித்தானியா), வளர்மதி(ஜேர்மனி), மகேந்திரன்(செட்டி- Toronto), சிவமதி(Montreal, கனடா), தவமதி(சுவிஸ்), சதாமதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,இலிங்கேஸ்வரி(சாந்தி), சிவநேசலிங்கம், திருபுவனராஜா, ஸ்ரீநாதன், காலஞ்சென்ற சசிறேகா, பாலசுந்தரம்(ரூபன்), தருமரட்னம்( உரிமையாளர் Naga and Thavamahal Real Estate.St.Gallen .Swiss.சிறுவன்), சதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,இலக்கியா- Dr.பிரதீஸ்குமார், கீர்த்தியா, Dr.கீர்த்தனன், Dr.ராஜ்விக்ரம்(ராஜி), ஜெனுபா(சாரா)-நிமேஸ், சரத்சேரன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,பிரசாத்-தட்ஷாஜினி, பிரவீனா-தீபன், தினேஸ்-ரிவின், Dr.திவ்யா-Dr.செந்தூரன், சௌமியா, ரினா-மியானி, அபினா, ஜெனுதன், ஜெஸ்மிதா, அஜய், அஜினா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,அர்ஜீன் ஜெய், ஜெய் ராகுல், அமிரா, ஜெய்றோகன், கிரிஷான், கறிஷான், கன்ஷிகா, எஜடன், தரன்மதி, றிகான், சிறேகா, மாஜா, கேடன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,காலஞ்சென்றவர்களான கதிரவேலு, குழந்தைவேலு, ஆறுமுகம், சொக்கலிங்கம், அன்னலிங்கம், கோணேஸ்வரி, தனவதி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,செல்லாச்சி, சின்னத்தங்கம், கனகம்மா, சற்குணம், கமலாம்பிகை, நாகரட்னம்(செல்லத்தம்பி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நன்றிதகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 26 Jul 2025 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 27 Jul 2025 6:00 AM - 6:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 27 Jul 2025 6:30 AM - 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 27 Jul 2025 9:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மகேந்திரன்(செட்டி) - மகன்Mobile : +16478315672 இரவீந்திரன் - மகன்Mobile : +4917663648395 வளர்மதி - மகள்Mobile : +4915218500986 ரூபன் - மருமகன்Mobile : +15142268698 தவமதி - மகள்Mobile : +41791504324 வான்மதி - மகள்Mobile : +491749141869 தருமரட்னம்(சிறுவன்-மருமகன் Mobile : +41797844348

சுட்ட கோழி சாப்பிட்ட 22 பேர வைத்தியசாலையில் அனுமதி! [Wednesday 2025-07-23 07:00]

www.pungudutivuswiss.com


உணவு ஒவ்வாமை காரணமாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட, 22 பேர் நேற்று கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 9 பெண்களும், 6 ஆண்களும் 3 சிறுவர்களும் அடங்குகின்றனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 ஐந்து பேரும், மற்றும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 ஆறு பேரும் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உணவு ஒவ்வாமை காரணமாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட, 22 பேர் நேற்று கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பெண்களும், 6 ஆண்களும் 3 சிறுவர்களும் அடங்குகின்றனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 ஐந்து பேரும், மற்றும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 ஆறு பேரும் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

22 ஜூலை, 2025

தேவநேசன் நேசையா குழுவின் அறிக்கையுடன் இணைத்து செம்மணியை ஆராய வேண்டும்! [Tuesday 2025-07-22 08:00]

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையிலான குழுவினரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்ள விபரங்களை தற்போது செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் கண்டறியப்படும் மனித எச்சங்களுடன் தொடர்புபடுத்தி ஆராய்வதன் ஊடாக பல்வேறு உண்மைகளை வெளிக்கொணரமுடியும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையிலான குழுவினரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்ள விபரங்களை தற்போது செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் கண்டறியப்படும் மனித எச்சங்களுடன் தொடர்புபடுத்தி ஆராய்வதன் ஊடாக பல்வேறு உண்மைகளை வெளிக்கொணரமுடியும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

21 ஜூலை, 2025

ஜேர்மனியில் படிக்க திட்டமிடுகிறீர்களா? உலகின் சிறந்த மாணவர் நகரங்கள் இதோ! [Sunday 2025-07-20 07:00]

www.pungudutivuswiss.com

ஜேர்மனி இன்று இந்திய மாணவர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு மிகுந்த விருப்பமான உயர்கல்வி தலமாக உருவெடுத்துள்ளது. சமீபத்திய தகவலின்படி, ஜேர்மனியில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை மொத்த மாணவர்கள் தொகையில் 13 சதவீதமாக உள்ளனர். இதில் இந்திய மாணவர்கள் 42,578 பேருடன் முதலிடம் பிடித்துள்ளனர்.

ஜேர்மனி இன்று இந்திய மாணவர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு மிகுந்த விருப்பமான உயர்கல்வி தலமாக உருவெடுத்துள்ளது. சமீபத்திய தகவலின்படி, ஜேர்மனியில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை மொத்த மாணவர்கள் தொகையில் 13 சதவீதமாக உள்ளனர். இதில் இந்திய மாணவர்கள் 42,578 பேருடன் முதலிடம் பிடித்துள்ளனர்.

சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள்! [Monday 2025-07-21 07:00]

www.pungudutivuswiss.com


சம்பூர் கடற்கரையை அண்மித்த சிறுவர் பூங்கா பகுதியில் நேற்று கண்ணிவெடி நிறுவனத்தினர் அகழ்வில் ஈடுபட்ட போது மனித மண்டையோடு மற்றும் எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சம்பூர் கடற்கரையை அண்மித்த சிறுவர் பூங்கா பகுதியில் நேற்று கண்ணிவெடி நிறுவனத்தினர் அகழ்வில் ஈடுபட்ட போது மனித மண்டையோடு மற்றும் எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பொறுப்புக்கூறலை முடக்க அரசாங்கத்துக்கு துணைபோகிறது தமிழரசுக் கட்சி! [Monday 2025-07-21 07:00]

www.pungudutivuswiss.com

ஜெனிவா கூட்டத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளை முன் வைப்பதன் ஊடாக கடுமையான சர்வதேச அழுத்தத்தை கொடுக்கும் செயல் வடிவத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனணியின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா கூட்டத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளை முன் வைப்பதன் ஊடாக கடுமையான சர்வதேச அழுத்தத்தை கொடுக்கும் செயல் வடிவத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனணியின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

மூளாயில் குழு மோதல் - பொலிஸ் துப்பாக்கிச் சூடு! [Monday 2025-07-21 07:00]

www.pungudutivuswiss.com


வட்டுக்கோட்டை- மூளாய் பகுதியில் நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன் தினம் தனி நபர்களுக்கிடையே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த பிரச்சினையானது பொலிஸ் நிலையம் வரை சென்ற பின்னர்  ஞாயிற்றுக்கிழமை இரண்டு தனிநபர்களும் இரு பிரிவுகளாக பிரிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

வட்டுக்கோட்டை- மூளாய் பகுதியில் நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன் தினம் தனி நபர்களுக்கிடையே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த பிரச்சினையானது பொலிஸ் நிலையம் வரை சென்ற பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரண்டு தனிநபர்களும் இரு பிரிவுகளாக பிரிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

19 ஜூலை, 2025

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பாக சட்ட நடவடிக்கை!- வலி.வடக்கு பிரதேச சபை தீர்மானம். [Friday 2025-07-18 16:00]

www.pungudutivuswiss.com


யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

உதவிப் பிரதேச செயலர் தமிழினி மரணமான வழக்கில் கணவன் கைது! [Friday 2025-07-18 16:00]

www.pungudutivuswiss.com


சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 ஜூலை, 2025

இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி- வலி.கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம். Top News [Friday 2025-07-18 07:00]

www.pungudutivuswiss.com


இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை எனவும் அவ் இனப்படுகொலைக்கு இலங்கை அரசு காரணம் என்ற நிலையில், இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளில் முற்றிலும் எமது மக்களும் நாமும் நம்பிக்கை இழந்துள்ளோம். இவ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை எனவும் அவ் இனப்படுகொலைக்கு இலங்கை அரசு காரணம் என்ற நிலையில், இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளில் முற்றிலும் எமது மக்களும் நாமும் நம்பிக்கை இழந்துள்ளோம். இவ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை- மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்! [Friday 2025-07-18 07:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரி  முன்வைக்கப்பட்ட பிரேரணையை மட்டக்களப்பு மாநகரசபை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.

யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரி முன்வைக்கப்பட்ட பிரேரணையை மட்டக்களப்பு மாநகரசபை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.

17 ஜூலை, 2025

ஹரி ஆனந்தசங்கரிக்கு நெருக்கடி! [Thursday 2025-07-17 07:00]

www.pungudutivuswiss.com


கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஹரி ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு குடியுரிமை பெறுவதற்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஹரி ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு குடியுரிமை பெறுவதற்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

தேர்தல் முடிந்து 2 மாதங்களாகியும் 50 சபைகளில் ஆட்சியமைக்கவில்லை! [Wednesday 2025-07-16 16:00]

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்று சுமார் 2 மாதங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், 50இற்கும் மேற்பட்ட சபைகளில் ஆட்சி அதிகாரத்தை அமைக்க முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்று சுமார் 2 மாதங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், 50இற்கும் மேற்பட்ட சபைகளில் ஆட்சி அதிகாரத்தை அமைக்க முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழரசு உறுப்பினரின் இடைநிறுத்தம்- தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு! [Thursday 2025-07-17 07:00]

www.pungudutivuswiss.com

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை இடைநிறுத்தி கட்சி எடுத்த முடிவுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு விதிக்கக் கோரி வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம் தாக்கல் செய்த வழக்கில், இடைக்காலத் தடை விதிக்கும் கோரிக்கையை நிராகரித்து யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை இடைநிறுத்தி கட்சி எடுத்த முடிவுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு விதிக்கக் கோரி வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம் தாக்கல் செய்த வழக்கில், இடைக்காலத் தடை விதிக்கும் கோரிக்கையை நிராகரித்து யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது

16 ஜூலை, 2025

பிரான்சில் வரலாறு காணாத நிதிப் பற்றாக்குறை! வெடித்தது மக்கள் போராட்டம்!

www.pungudutivuswiss.com

பிரான்சில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளிக்கும்
வகையில், இரண்டு பொது விடுமுறை நாட்களை ரத்து செய்ய

செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூடு சிறுமியினுடையது

www.pungudutivuswiss.com
செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும்
பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதி 4 - 5 வயது

புதிய சட்டம் வரும் வரை பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருக்கும்! [Wednesday 2025-07-16 07:00]

www.pungudutivuswiss.com


பயங்கரவாதத்தை எதிர்க்க புதிய சட்டம் இயற்றப்படும் வரை தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டம் செயற்படுத்தப்படும்.பயங்கரவாத தடைச்சட்டத்தை பொலிஸார் முறைகேடாக பயன்படுத்துவார்களாயின் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடலாம் என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை எதிர்க்க புதிய சட்டம் இயற்றப்படும் வரை தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டம் செயற்படுத்தப்படும்.பயங்கரவாத தடைச்சட்டத்தை பொலிஸார் முறைகேடாக பயன்படுத்துவார்களாயின் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடலாம் என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கனடா செல்வதற்கு 80 இலட்சம் ரூபாவை கொடுத்து ஏமாந்தவர் உயிரை மாய்த்தார்! [Wednesday 2025-07-16 07:00]

www.pungudutivuswiss.com


கனடா செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.  புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34 வயதுடைய செல்வராசா லிபாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கனடா செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34 வயதுடைய செல்வராசா லிபாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

“அதிமுகவை மீட்டெடுப்பதற்கான சட்ட போராட்டம் தொடரும்” - ஓ.பி.எஸ் அதிரடி! [Tuesday 2025-07-15 07:00]

www.pungudutivuswiss.com

அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் அமைந்துள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அதிமுகவில் இனி ஒ.பி.எஸ் சேர்க்கப்பட மாட்டார் என எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக தலைவர்கள் உறுதியாக கூறு வருகின்றனர். இதனால், அதிமுக மீட்புக்குழு என்பதை விட தனியாக கட்சி ஆரம்பித்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட சீட்களை பெறலாம் என்ற யோசனையில் ஓ.பி.எஸ் இருப்பதாக தகவல் வெளியானது.

அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் அமைந்துள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அதிமுகவில் இனி ஒ.பி.எஸ் சேர்க்கப்பட மாட்டார் என எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக தலைவர்கள் உறுதியாக கூறு வருகின்றனர். இதனால், அதிமுக மீட்புக்குழு என்பதை விட தனியாக கட்சி ஆரம்பித்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட சீட்களை பெறலாம் என்ற யோசனையில் ஓ.பி.எஸ் இருப்பதாக தகவல் வெளியானது

100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை’ - துப்புரவு தொழிலாளி கொடுத்த புகாரால் பரபரப்பு! [Tuesday 2025-07-15 16:00]

www.pungudutivuswiss.com

100க்கும் மேற்பட்ட பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூர் அருகே தர்மஸ்தலா கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் துப்புரவுத் தொழிலாளி ஒருவர், தனது வழக்கறிஞர்கள் மூலம் தர்மஸ்தல காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 4ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ‘1995ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரையில் தர்மஸ்தலா கோயில் நிர்வாகத்தினரால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

100க்கும் மேற்பட்ட பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூர் அருகே தர்மஸ்தலா கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் துப்புரவுத் தொழிலாளி ஒருவர், தனது வழக்கறிஞர்கள் மூலம் தர்மஸ்தல காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 4ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ‘1995ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரையில் தர்மஸ்தலா கோயில் நிர்வாகத்தினரால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

இஸ்ரேலுக்கு எதிரான சமூக ஊடகப் பதிவு- 9 மாதங்களுக்குப் பின் இளைஞனுக்கு பிணை! [Tuesday 2025-07-15 18:00]

www.pungudutivuswiss.com


சமூக ஊடகங்கள் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு இளைஞன் இன்று கல்கிசை மேலதிக நீதிவான் ஹேமாலி ஹல்பத்தெனியவால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சமூக ஊடகங்கள் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு இளைஞன் இன்று கல்கிசை மேலதிக நீதிவான் ஹேமாலி ஹல்பத்தெனியவால் பிணையில் விடுவிக்கப்பட்டார்

காணிகளை விடுவிக்க கோரி ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்! Top News [Tuesday 2025-07-15 18:00]

www.pungudutivuswiss.com

வடக்கில் படையினரால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கில் படையினரால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

யாழ். வலிகாமம் வடக்கின் காணி உரிமையாளர்களுடன் வடக்கு மாகாணத்தில் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களும் போராட்டத்தை முன்னெடுக்க நேற்று கொழும்புக்கு வந்தனர். அவர்கள், இன்று காலை காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகம் முன்பாக தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

14 ஜூலை, 2025

7 மாதங்களில் 68 துப்பாக்கிச் சூடுகள் - 37 பேர் பலி! [Monday 2025-07-14 16:00]

www.pungudutivuswiss.com

இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக  இன்று பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இன்று பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்

பொலிஸ் புலனாய்வாளர்கள் கடத்திச் சென்று தாக்குதல்- இளைஞன் காயம். [Monday 2025-07-14 16:00]

www.pungudutivuswiss.com


காவல்துறை புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்ததுடன், பொலிஸ் என்று எழுதப்பட்ட மேலங்கியும் அணிந்திருந்த நால்வரால் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

காவல்துறை புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்ததுடன், பொலிஸ் என்று எழுதப்பட்ட மேலங்கியும் அணிந்திருந்த நால்வரால் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

பகிரங்க வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரிய மனுக்கள் தள்ளுபடி! [Monday 2025-07-14 16:00]

www.pungudutivuswiss.com


சீதாவக்க பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதைத் தடுத்து, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீதாவக்க பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதைத் தடுத்து, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தோழர் ஜனாதிபதி அநுர அவர்களே! என்ன செய்யப்போவதாக உத்தேசம்? பனங்காட்டான்

www.pungudutivuswiss.com
சிங்கள் தேசத்தின் நான்கு பிரதான கட்சிகளையும் இழுத்து
வீழ்த்திவிட்டு, அறகலய வழியாக ஆட்சிக் கட்டிலில் ஏறியவர்

அனுர மீற்றர் அறிமுகம் - அரசைக் கண்காணிக்கத் தொடங்கியது! [Monday 2025-07-14 07:00]

www.pungudutivuswiss.com


வெரிட்டே ரிசர்ச்சின் தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் நிகழ்நிலை கண்காணிப்புத் தளமாக அனுர மீட்டரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

வெரிட்டே ரிசர்ச்சின் தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் நிகழ்நிலை கண்காணிப்புத் தளமாக அனுர மீட்டரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது

வெளிவந்த ஆதாரங்களை மூடி மறைக்க முனைகிறதா தமிழரசுக் கட்சி? [Monday 2025-07-14 07:00]

www.pungudutivuswiss.com


1948 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசத்திற்கு நடைபெற்ற முழு அநியாயமும் இனப்படுகொலையும் செயற்பாடுகளையும் ஒரு சந்தர்ப்பத்திலே விசாரிக்கப்பட்டால் மட்டுமே உண்மையான யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

1948 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசத்திற்கு நடைபெற்ற முழு அநியாயமும் இனப்படுகொலையும் செயற்பாடுகளையும் ஒரு சந்தர்ப்பத்திலே விசாரிக்கப்பட்டால் மட்டுமே உண்மையான யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்

13 ஜூலை, 2025

டுபாயில் நலமுடன் உள்ள இஷாரா செவ்வந்தி ! கெஹல்பத்ர பத்மே அதிர்ச்சி தகவல்

www.pungudutivuswiss.com

கனேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சூத்திரதாரியாக
கருதப்படும் இஷாரா செவ்வந்தி டுபாயில் நலமுடன்

தீவக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

www.pungudutivuswiss.com

தீவக மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு
இயன்றவரையில் முயற்சிசெய்வேன் என வடக்கு மாகாண
ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் 14 பேருடன் மூழ்கிய படகு!- அனைவரும் பத்திரமாக மீட்பு. [Saturday 2025-07-12 15:00]

www.pungudutivuswiss.com


குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு தென்பகுதி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் படகு ஒன்று அங்கிருந்து திரும்பும் போது கடலில் மூழ்கியுள்ளது.
இன்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மூழ்கிய படகில் இருந்த 12 சுற்றுலாப் பயணிகளும், 2 படகோட்டிகளும் இன்னொரு படகில் இருந்தவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு தென்பகுதி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் படகு ஒன்று அங்கிருந்து திரும்பும் போது கடலில் மூழ்கியுள்ளது. இன்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மூழ்கிய படகில் இருந்த 12 சுற்றுலாப் பயணிகளும், 2 படகோட்டிகளும் இன்னொரு படகில் இருந்தவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கட்டாரில் உள்ள அமெரிக்க விமானத் தளம் ஈரான் தாக்கியதை ஒப்புக்கொண்டது அமெரிக்கா

www.pungudutivuswiss.com
ஈரானில் உள்ள அணு ஆராய்

ச்சி மையங்களை குறிவைத்து கடந்த மாதம் 13ம் திகதி இஸ்ரேல்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும்

www.pungudutivuswiss.com

நிகழ்ந்த அல்லது நடடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள்
இறுக்கமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதுடன்

மரண அறிவித்தல். நாகலிங்கம் சுந்தரானந்தன்

www.pungudutivuswiss.com
மரண அறிவித்தல்
**********************
நாகலிங்கம் சுந்தரானந்தன்
10 ம் வட்டாரம்
புங்குடுதீவு / யாழ் வீதி வவுனியா .
புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ் வீதி 208 A வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரானந்தன் அவர்கள்( 12.0 7 .2025) வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம்.
அன்னார் காலம் சென்ற நாகலிங்கம் (ஆசிரியர் மரபுக் கவிஞர்) )மனோன்மணி தம்பதியின் அன்பு புதல்வனும் ராமலிங்கம் மனோன்மணி தம்பதியின் மருமகனும் லலிதாவின் அன்பு கணவரும் சச்சிதானந்தம், லலிதாம்பிகை, புனிதவதி, சிவஞானவதி, சரஸ்வதி, ரூபவதி .கலாவதி (கனடா) ,சதானந்தன், சிவானந்தன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் மதுரம், சிதம்பரம், ஏரம்பமூர்த்தி, நமசிவாயம்(Canada) செல்வராசா(Swiss) ஆகியோரின் அன்பு மைத்துனரும் கௌரீஸ்வரி (சுவிஸ் )கௌரிசங்கர் (சட்டத்தரணி) ஆகியோரின் தந்தையும் பஞ்சகுலசிங்கம் ( வாசன் wasen.i.e.சுவிட்சர்லாந்து) சிவரஞ்சனி (நீதிமன்றம் வவுனியா) ஆகியோரின் மாமனாரும் பிருந்தா, பிரியங்கா, பிரதீப், ஜாதர்சன், யஸ்விகா ஆகியோரின் பேரனும் ஆவார் .அன்னாரின் கிரியைகள் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு 128 ஏ,யாழ் வீதி ,வவுனியாவில் உள்ள இல்லத்தில் நடைபெற்றபின் பூதவுடல் தகன கிரியைக்காக பூந்தோட்டம் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்

10 ஜூலை, 2025

இன்றுடன் இடைநிறுத்தப்படும் அகழ்வு-இதுவரை 63 எலும்புக்கூடுகள் அடையாளம்! [Thursday 2025-07-10 07:00]

www.pungudutivuswiss.com


செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து  இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணியின் 14 ஆவது நாளான நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணியின் 14 ஆவது நாளான நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது

இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி -ட்ரம்ப் அறிவிப்பு! [Thursday 2025-07-10 07:00]

www.pungudutivuswiss.com

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க முடிவு செய்துள்ளார் என வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய ய கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த புதிய வரி விதிப்பு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க முடிவு செய்துள்ளார் என வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய ய கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது

மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் உதவிகளை வழங்குகின்றதா? [Wednesday 2025-07-09 16:00]

www.pungudutivuswiss.com


பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி  விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா?மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா? என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா?மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா? என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்

விமல் வீரவன்ச சிஐடியில் முன்னிலை! [Wednesday 2025-07-09 16:00]

www.pungudutivuswiss.com


தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று புதன்கிழமை  காலை முன்னிலையாகியுள்ளார். சுங்க திணைக்களத்தின் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக  விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று புதன்கிழமை காலை முன்னிலையாகியுள்ளார். சுங்க திணைக்களத்தின் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

9 ஜூலை, 2025


www.pungudutivuswiss.com


2 ஜூலை, 2025

கனடாவில் உதைபந்தாட்டத் தொடர் : தமிழீழ மகளிர் அணி வெற்றி

www.pungudutivuswiss.com
கனடா (Canada) - மார்க்கம் நகரில் நடந்த நட்புரீதியிலான
இரண்டு காற்பந்துப் போட்டிகளிலும் தமிழீழ மகளிர் அணி
வெற்றி பெற்றுள்ளது.

செம்மணியில் சுமதியின் எலும்புக்கூட்டைக் கண்டதும் கதறியழுத தாய்

www.pungudutivuswiss.com
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரங்கள் தற்போது அதிகமாக
பேசப்பட்டு வருகின்றன.

செம்மணி புதைகுழியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட சிறு பிள்ளையின் எலும்பு கூட்டு தொகுதி

www.pungudutivuswiss.com

ஓமந்தையில் தனியார் காணியை அபகரித்து பொலிசார் விகாரை அமைக்க முயற்சி! [Tuesday 2025-07-01 17:00]

www.pungudutivuswiss.com

தமிழரசின் மன்னார் மாவட்ட கிளை பொருளாளர் பதவி விலகல்- சாள்ஸ் நிர்மலநாதனும் விலக முடிவு. [Tuesday 2025-07-01 17:00]

www.pungudutivuswiss.com


இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு இன்று எழுத்து மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு இன்று எழுத்து மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளா

29 ஜூன், 2025

250 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது! [Sunday 2025-06-29 07:00]

www.pungudutivuswiss.com

இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கஞ்சா காரைநகர்ப் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான படகை கடற்படையினர் மறித்து சோதனையிட்ட போதே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கஞ்சா காரைநகர்ப் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான படகை கடற்படையினர் மறித்து சோதனையிட்ட போதே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

யாரைக் காப்பாற்ற செம்மணிப் புதைகுழி விவகாரத்தை திசை திருப்ப முனைகின்றனர்? [Sunday 2025-06-29 07:00]

www.pungudutivuswiss.com


செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப் படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம் வெளிவருவதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப் படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம் வெளிவருவதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்

28 ஜூன், 2025

வடக்கில் படைமுகாம்களை அகற்றக் கூடாது! [Saturday 2025-06-28 15:00]

www.pungudutivuswiss.com


“சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கில்லை. எனவே, வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணி விடுவிப்பின்போது பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.”இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

“சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கில்லை. எனவே, வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணி விடுவிப்பின்போது பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.”இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்

27 ஜூன், 2025

இஸ்ரேல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரட்டை நிலையைக் கண்டிக்கிறது ஸ்பெயின்

www.pungudutivuswiss.com
காசாவில் இஸ்ரேல் நடத்திய மனித உரிமைகள் மீறல் தொடர்பில்
ஐரோப்பிய ஒன்றியம் இரட்டை நிலையில் உள்ளது என்றும்

வெப்ப அலை: கிறீஸ் கடலோர நகரங்களின் தீப்பிடித்து எரிகின்றன!

www.pungudutivuswiss.com
கிறீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸிலிருந்து தென்கிழக்கே 40 கிமீ
தொலைவில் உள்ள பலையா ஃபோகையா மற்றும் தைமாரி

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும்! [Friday 2025-06-27 06:00]

www.pungudutivuswiss.com


பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.வியாழக்கிழமை (26) பிற்பகல் நாட்டிற்கான தனது விஜயத்தின் முடிவில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.வியாழக்கிழமை (26) பிற்பகல் நாட்டிற்கான தனது விஜயத்தின் முடிவில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்

செம்மணிப் புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் மீட்பு! [Friday 2025-06-27 06:00]

www.pungudutivuswiss.com


செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள்  வியாழக்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளது.

செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் வியாழக்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளது

26 ஜூன், 2025

போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! சிறிலங்காவிடம் வலியுறுத்திய ஐ.நா ஆணையாளர்

www.pungudutivuswiss.com
இலங்கையில் இறுதிக்கட்டப்போரில் இடம்பெற்ற போர்க்
குற்றங்களுக்கு பொறுப்புக் கூறப்படவேண்டும் என ஐக்கிய

கட்சிப் பதவிகளில் இருந்து விலகினார் ரவிகரன்M P.

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூர் அதிகாரசபைகளுக்கான
இலங்கைத் தமிழ்அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட

எங்களுக்கு நீதி வேண்டும்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் தமிழ்க் கட்சிகள் கூட்டாக கோரிக்கை

www.pungudutivuswiss.com
எங்களுக்கு நீதி வேண்டும்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம்
தமிழ்க் கட்சிகள் கூட்டாக கோரிக்கை

அர்ச்சுனா எம்.பி..நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இன்று விலகுகிறார்

www.pungudutivuswiss.com
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து 26ஆம் திகதி
(இன்றையதினம்) கூட விலக தயாராக இருப்பதாக இராமநாதன்
அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

24 ஜூன், 2025

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல விமானங்களை இரத்து செய்த நிறுவனங்கள்

www.pungudutivuswiss.com
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற சூழ்நிலை காரணமாக
, அதன் சில விமானங்கள் தாமதமாகலாம் அல்லது திசை

போதுமான சவப்பெட்டிகளுடன் வாருங்கள்... அமெரிக்காவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான்

www.pungudutivuswiss.com
அமெரிக்கா ஈரானுக்கு எதிராக முழு வீச்சில் போரைத்
தொடங்கினால் போதுமான சவப்பெட்டிகளைக் கொண்டு

கட்டார் அல் உதெய்த் தாக்குதல்.. ஈரானுக்கு நன்றி கூறிய ட்ரம்ப்!

www.pungudutivuswiss.com
ஈரானின் கட்டார் மீதான தாக்குதலில் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை
என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வென்றவர் தோற்றதும் தோற்றவர் வென்றதும் கோட்பாடு எதிர் இயற்கையின் நியதி - பனங்காட்டான்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தின் பதினேழு சபைகளிலும் ஆட்சி அமைப்போம்
என்று சவால் விட்டு கோட்பாட்டு ஆதரவு கேட்டவர் ஏழு சபைகளை

பளை சிறீதரன் ஆதரவு தமிழரசிடம்

www.pungudutivuswiss.com
கிளிநொச்சியிலுள்ள மூன்றாவது உள்ளுராட்சி சபையான
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சிறீதரன்

செம்மணியில் தொடங்கியது அணையா விளக்கு போராட்டம்! Top News [Monday 2025-06-23 16:00]

www.pungudutivuswiss.com

மனிதப் புதைகுழிகள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், தீர்வுகள் எதுவும் இதுவரை கிடைக்காத காரணத்தால் இந்த விடயத்தை சர்வதேச பார்வைக்கு கொண்டுசெல்லும் நோக்கத்திலும், அதனூடாக தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும் பொதுமக்கள் ஒன்றிணைந்து 'அணையா விளக்கு' போராட்டத்தை இன்று  காலை 10 மணியளவில் செம்மணியில் ஆரம்பித்துள்ளனர்.

மனிதப் புதைகுழிகள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், தீர்வுகள் எதுவும் இதுவரை கிடைக்காத காரணத்தால் இந்த விடயத்தை சர்வதேச பார்வைக்கு கொண்டுசெல்லும் நோக்கத்திலும், அதனூடாக தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும் பொதுமக்கள் ஒன்றிணைந்து 'அணையா விளக்கு' போராட்டத்தை இன்று காலை 10 மணியளவில் செம்மணியில் ஆரம்பித்துள்ளனர்.

21 ஜூன், 2025

மட்டக்களப்பில் கருணா, பிள்ளையானிடம் மற்றுமொரு பிரதேச சபையில் தமிழரசுக்

www.pungudutivuswiss.com

மட்டக்களப்பு வாகரை பிரதேசசபையை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

20 ஜூன், 2025

கண்ணகி அம்மன் கோயிலில் கோடிக்கணக்கான சொத்தை கொள்ளை அடித்த தலைமைக்கு எதிரான கண்டன போராட்டம்-

www.pungudutivuswiss.com பனங்காட்டான் தீவகன்( விமர்சனங்கள் நாகரிகமான முறையில் எழுதப்பட்டால் வரவேற்கப்படும்)


====================
ஆலயம் மக்களின் சொத்து. மக்களின் மத்தியில் இருந்தே நிர்வாக தெரிவு. தூய்மையான வரவு செலவு அறிக்கை தேவை. பரம்பரை பணக்கார நிர்வாகம் தேவையில்லை. ஆலயத்தில் பொதுமக்களின் மத்தியில் நிர்வாகத் தேர்வை நடத்து. நியாயத்துக்காக போராடும் மக்களின் மீது பண பலத்தை வைத்து அதிகாரத்தை பிரயோகிக்காதே.
இது போன்ற கோஷங்களை முன்வைத்து நாளை கண்ணகி அம்மன் ஆலய முன்றல் மக்களின் போராட்டத்தினால் முழு புரட்சி வெடிக்க உள்ளது வைக்காதே புங்குடுதீவு கண்ணகி அம்மன் என வழங்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய முன்றலில் நாளை ஜூன் 21 ஆம் தேதி சனிக்கிழமை காலை புங்குடுதீவு மக்கள் ஒன்றிணைந்து தற்போதைய ஆலய தலைவருக்கும் அவர் சார்ந்த நிர்வாகத்தினருக்கும் எதிராக கண்டனபோராட்டம் ஒன்றை நடத்தஇருக்கிறார்கள்
வரலாற்று பெருமைமிக்க எமது ஊரின் கண்ணகி அம்மன் ஆலயம் புலம்பெயர் தமிழர்களின் பெரும் நிதியாலும் உள்ளூர் மக்களின் பங்களிப்பினாலும் சேர்க்கப்பட்ட சுமார் 67 கோடி ரூபா செலவில் புதுப்பொலிவோடு கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது ஆனால் இந்த திருப்பணியிலும் கும்பாபிஷேகத்தின் பின்னரும் ஆலயத்தின் தலைமையும் நிர்வாகமும் பெரும் குளறுபடிகளையும் ஊழல்களையும் சொத்து நிதி கையாடல்களையும் செய்திருப்பது பகிரங்கத்துக்கு வந்திருக்கிறது இந்த வருட திருவிழா காலத்தில் நடைபெற்ற உள்வீட்டு திருட்டு ஒன்று அதிர்ஷ்டவசமாக பிடிபட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பு புரட்சி ஒன்று வெடித்திருக்கிறது தலைமை தனக்கு சார்பான நிர்வாகத்தை வைத்துக்கொண்டு நுணுக்கமான முறையில் திட்டமிட்டு பல தில்லு முல்லுகளை செய்து கோடிக்கணக்கான பணத்தினை கையாடல் செய்திருப்பது அறிய வந்துள்ளது தலைவர் ஒரு பிரபலமான தந்திரம் மிக்க பெரும் வியாபாரி என்பதால் தனக்குக் கிடைத்த இந்த தலைமை பதவியை அதிகாரத்தை வைத்துக்கொண்டு சற்றும் ஆன்மீக இரண்டும் அற்று பயபக்தியற்று நீதிக்கு பயப்படாமல் தனது வியாபார தந்திரத்தை கையாண்டிருக்கிறார் முக்கியமான பெரிய ஊழலாக பணிக்கென்று மக்கள் அள்ளி வழங்கிய 67 கோடி ரூபாவை பணம் கைக்கு கிடைத்தவுடன் உடனுக்குடன் திருப்பணிகளை செய்து முடிக்காமல் பல காரணங்களை கூறி பின் போட்டு அல்லது இழுத்தடித்து பணத்தினை தனது வியாபாரத்துக்கு பயன்படுத்தி இருக்கிறார் இதனால் நீண்ட காலம் எடுத்து திருப்பணிகளை செய்ய வேண்டி இருந்ததால் பொருளாதார மகிழ்ச்சி கொரோனா போன்ற காரணங்களாலும் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது முக்கியமாக 30 கோடி ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்த போதும் என்பது வீத திருப்பணி வேலை முடிந்த கட்டத்தில் ஒப்பந்தக்காரர் கொரோனா பொருளாதார வீழ்ச்சி இன்ப வெட்டி காரணங்காட்டி 2 கோடி கூடுதாக தரும்படி கேட்டிருந்தார்( சுவிஸ் ஐங்கரன் அவர்களுடன் ஒப்பந்தக்காரர் நேரடியாக உரையாடிய ஒலிப்பதிவு பகிரங்கப்படுத்துள்ளது அதில் இந்த உண்மை ஒப்பந்தக்காரர்கள் வாய்மொழி மூலம் கிடைத்திருக்கிறது )அவர் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி முடியாது என்று கூறி மீதி 20 வீத வேலையை தானே தனது இஷ்டத்துக்கு செய்து முடித்து இருந்தார் அதற்கான செலவு 55 கோடியென அறிவித்திருக்கிறார் அதாவது மொத்தமாக 83 கோடி முடிந்து ஆகவும் மிகுதி 16 கோடி தனக்கு ஆலயம் தருமதி இருக்கிறது என்றும் அறிவித்திருக்கிறார் 30 கோடியில் முடிக்க வேண்டிய வேலையை 83 கோடியில் முடித்திருப்பதாக சொல்லுகிறார் இரண்டு கோடி ஒப்பந்ததாரருக்கு கொடுக்காமல் 55 கோடி அதற்காக செலவழித்து இருக்கிறேன் என்று சொல்லுகிறார் இது ஒரு பகிரங்கமான மாபெரும் ஊழல் மோசடி இவர் திடீரென கொழும்பில் சுமார் 20 கோடி ரூபா பெறுமதியான கடை ஒன்றினை வாங்கி இருக்கிறார் அதனை விட பல்வேறு வகையில் இவர் வருமானம் ஈட்டி இருப்பது தெரிய வந்திருக்கிறது இவற்றை எல்லாம் மக்கள் பகிரங்கமாக பல ஆதாரங்களோடு நிருபித்து வருகிறார்கள் ஆலயத்தில் நடந்த திருட்டு சம்பவத்தை பகிரங்கமாக காவல்துறைக்கு எடுத்துச் சென்று விசாரிக்க மறுத்து மறைத்து பல திருவிளையாடல் செய்திருக்கிறார் . 83 கோடியில் கட்டப்பட்ட ஆலயத்தில் மிக முக்கியமான காரியாலயத்துக்கும் பணப்பெட்டகத்துக்கும் மட்டும் காணொளி க மரா கருவி பொருத்தப்படாமல் திட்டமிட்டு தேவையில்லாத மற்றைய இடங்களில் பொருத்தப்பட்டிருந்த மை இங்கு எல்லாம் தான் சந்தேகம் கிளம்புகிறது மேலும் ஏராளமான பல காரணங்களுக்காக மக்கள் கிள்ர் ந்தெழுந்து நாளைய தினம் போராட இருக்கிறார்கள் ஊரில் உள்ள ஆலயத்தில் பொதுச்சபை மற்றும் நிர்வாக கூட்டங்களை விதிமுறைகளுக்கு மாறாக கொழும்பில் நடத்துவது வருடம் தோறும் 100வித வரவு செலவு அறிக்கையை சமர்ப்பிக்காமை முறைப்படி ஆலயத்தில் வருடம் தோறும் பொதுச் சபை யை கூட்டி நிர்வாகத்தினை தெரிவு செய்யா மை முறைப்படி நிர்வாகத்தில் தீர்மானம் எடுத்து செய்யாமல் பல திருப்பணி வேலைகளை தனக்கு வருமானம் பெறக்கூடியதாக செய்தமை ஆலயத்தின் வரலாற்று முறைப்படி உள்ள விஷயங்களை தனது இஷ்டத்துக்கு மாற்றி அமைத்தமை உதாரணம் ஆதி கண்ணகி அம்மன் விக்ரகம் இல்லாமல் செய்து ஒரு சீமந்து காலடியை பதித்தமை நாள்தோறும் ஒரு லட்சம் ரூபா அன்னதானத்துக்கு என வாங்கி குறைந்த செலவில் அன்னதானத்தினை வழங்கி மிஞ்சுகின்ற பணத்துக்கு சரியான வரவு செலவு அறிக்கை காட்டாமை அன்னதான வழங்கும் முறைகளை மாற்றியமைத்தமை பொதுமக்கள் அடியார்களின் கருத்துக்களை உள்வாங்காமல் விமர்சனங்களை ஏற்காமல் சரியான வேளையில் நிர்வாகக் கூட்டம் பொதுமக்கள் கூட்டத்தினை நடத்தாமல் பின் வழியால் வேறு வழிகளில் பண பலத்தை வைத்து காவல் துறை சட்ட த்தரணிகள் என்று பணத்தினை செலவழித்து நியாயம் கேட்பவர்களை பயமுறுத்துதல் வழக்குக்கு இழுத்தல் ஆலயத்துக்கு அப்பாற்பட்டு வேறு வகையில் வழக்குகளை அவர்களுக்கு எதிராக ஆரம்பித்தமை அடியார்கள் பொதுமக்களுக்கு எதிராக ஆயுத கலாச்சாரம் வன்முறை என்பவற்றை பிரயோகித்தல் மக்கள் அள்ளி வழங்கிய 67 ரூபாய் என்று பெரும் நிதியை வைத்து தாராளமாக வரவு செலவு திட்டமிட்டு திருப்பணியை நடத்தி முடித்து கோடிக்கணக்கான பணத்தினை மீதப்படுத்தி வங்கியில் இட்டு தொடர்ந்து ஆலயத்தை நடத்தும் வகை இருந்தும் அதனை நடைமுறைப்படுத்தாமை நிர்வாகத்தில் தீர்மானம் எடுக்காமல் 67 கோடி ரூபாய் என்ற வரவுக்கும் மேலதிகமாக தனது பணத்தினை போட்டதாக செலவு காட்டுதல் இன்னும் பல மோசமான ஊழல் மிக்க வேலைகளை செய்திருக்கும் இந்த தலைமையும் நிர்வாகத்தையும் அடியோடு மாற்றி அமைக்க பொதுமக்களே நாளைய தினம் அணி திரள்வீர்i இத்தனை ஊழல்களையும் செய்த தலைமைக்கும் நிர்வாகத்துக்கும் சார்பாக வாக்காளத்து வாங்கிக் கொண்டிருக்கிறது தேடிப்பார் இணையதளம் 
Weniger anzeigen

இஸ்ரேல் - ஈரான் ஏழாம் நாள் போர்: செய்திகளின் சுருக்கம்

www.pungudutivuswiss.com

இஸ்ரேல் - ஈரான் மோதலில் அமெரிக்கா இணைவது குறித்
அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட்

16 ஜூன், 2025


www.pungudutivuswiss.com
https://youtu.be/OowU355cfis?si=fMdv0mXKzbT5qVefwww.pungudutivuswiss.com

15 ஜூன், 2025

கைவிட்டு போனதா தமிழரசு தலைமை?

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் மட்டுமே சீ.வீ.கே.சிவஞானம்-எம்.ஏ.
சுமந்திரனின் கட்டுப்பாட்டை தமிழரசு பேண முற்பட்டுள்ள

ad

ad