-
27 நவ., 2013
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் சடலமாக மீட்பு

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்சிசன் ( வயது 47) அவரது வீட்டிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக சூழல் இராணுவத்தால் முற்றுகை! பொலிஸ் குவித்து ரோந்து பணிகள் தீவிரம்!- கடும் பதற்றத்தில் மக்கள்
மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி பெருமளவான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு சோதனைகளுகம் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.
ஈபிடிபியின் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சீன் மரணம்
வாயில் இரத்தம் வெளியிட்ட நிலையில் அவர் மரணமானதாக ஈபிடிபி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தானியேலின் சடலம் தற்போது புங்குடுதீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மாவீரர் நாள் அனுசரிக்க தடை: சின்னங்களை இடித்து அகற்றிய காவல்துறை
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க காவல் துறையினர் தடைவிதித்துள்ளனர்.செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் ஆண்டுதோறும் மாவீரர் நாளில் போரில் இறந்த
மாகாணசபை அதிகாரங்கள் ஜனாதிபதி போடும் பிச்சை அல்ல! அதிகாரம் ஆளுநருக்கா? முதல்வருக்கா?- சுரேஷ் எம்.பி.
மாகாணசபைக்கு வழங்கும் அதிகாரங்கள் ஜனாதிபதி தமிழ் மக்களைப் பாவம் பார்த்துப் போடும் பிச்சையல்ல. 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு என்ன அதிகாரங்கள் என்பதையும், அதிகாரம் ஆளுநருக்கா அல்லது முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்குமா
சுவிஸின் பாசல் கழகம் பலம் மிக்க செல்சீயை இரண்டாவது முறையாகவும் வென்று சாதனை
இன்றைய பரபரப்பான ஐரோப்பிய சாம்பியன் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தின் பல மில்லியன் பெறுமதி மிக்க பெரிய கழகமான செல்சீயை சுவிசின் எப் சி பாசல் கழகம் 1-0 என்ற ரீதியில் வென்று வரலாறு படைத்துள்ளது .முதல் விளையாடடிலும் செல்சீ மைதானத்தில் வைத்தே 2-1 என்ற ரீதியில் வென்றிருந்த பாசல் இன்றும் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது ஒரு சாதனையாகும் முதல் பா தி வேளையில் தனது அதி உச்ச திறமையை காடடிய பாசல் இரண்டாம் பாதி வேளையில் சற்று குறைந்து பின்னர் இறுதி நேர விடாமுயற்சியில் சலா அடித்த அற்புதமான கோலின் முன்னே சாதனை பந்துக் காப்பாளரான செக் கொட்டை விட்டார் . செல்சீ 2011இல் சாம்பியன் லீக் கிண்ணத்தை பேரன் மியூனிச்சை எதிர்த்தாடி வென்றமை குறிப்பிடத் தக்கது
இன்றைய பரபரப்பான ஐரோப்பிய சாம்பியன் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தின் பல மில்லியன் பெறுமதி மிக்க பெரிய கழகமான செல்சீயை சுவிசின் எப் சி பாசல் கழகம் 1-0 என்ற ரீதியில் வென்று வரலாறு படைத்துள்ளது .முதல் விளையாடடிலும் செல்சீ மைதானத்தில் வைத்தே 2-1 என்ற ரீதியில் வென்றிருந்த பாசல் இன்றும் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது ஒரு சாதனையாகும் முதல் பா தி வேளையில் தனது அதி உச்ச திறமையை காடடிய பாசல் இரண்டாம் பாதி வேளையில் சற்று குறைந்து பின்னர் இறுதி நேர விடாமுயற்சியில் சலா அடித்த அற்புதமான கோலின் முன்னே சாதனை பந்துக் காப்பாளரான செக் கொட்டை விட்டார் . செல்சீ 2011இல் சாம்பியன் லீக் கிண்ணத்தை பேரன் மியூனிச்சை எதிர்த்தாடி வென்றமை குறிப்பிடத் தக்கது
26 நவ., 2013
விடுதலைப் பேரழகு
ஈழவேட்கையின் தீரா ஊற்றாகி,
காலவேள்வியில் சூறாவளியாகி,
உச்சரிக்கும் போதெல்லாம்
உணர்வுகள் ஒளிகொள்ளும்
எமையாளும் பெருந்தகையே!
வாழ்;த்துகின்றறோம்!
முன்னவனே!
மூபத்து ஆண்டுகளுக்குள்
மூத்தகுடி அவலத்தை
உலகறியச் செய்தவனே!
போற்றுகின்றோம்!
உணர்வுகளின்
அடிமைத் தோலுரித்து
ஐநூறு ஆண்டு கடந்து
விடுதலைப் பேரழகைத்
தரிசிக்கச் செய்த தலைவா!
நீயெம்
வரலாற்றுப் பேரெழில்.
உலகம்
புரிந்து கொள்ள முடியாத புத்தகம்.
அற்புத மேய்ப்பனே!
இரு பகல்களின்
இடையிட்ட இரவு இது.
எம் தூரத்து நட்சத்திரங்களைக் கூட
கயவர் களவாடி விட்ட காலம்.
‘ஒளி தரவெனச் சூரியன் இனி வரான்’
என்பதாய்ச் சூழ்ச்சிகள் சூத்திரம்
கூறுகின்றன.
கூண்டுக்கிளிகளின்
தந்திரச் சாத்திரங்களில்
சிக்கிக் கிடக்கின்றன
சின்னச் சிந்தனைகள்.
உன்னருவைப் பச்சை குத்தி
பவ்வியமாய் வலம் வருகின்றன
சில பச்சோந்திகள்.
கார்த்திகை 27இல்
நெய்விளக்கேற்றி
நெஞ்சுருகிப் பின்
உன்னுரை கேட்ட
உலகம் உயிர்திருக்குமே.
கடந்த தடங்களை அறிவாக்கி
கடக்கும் கணங்களை நேர்த்தியாக்கி
வரும்காலத்தை நெறியாக்கி
வழிகாட்டிய
உங்கள் உரைக்கு நிகர்
உலகிலேது?
வெற்றுவெளி கண்டு
இடையிட்டு எழுந்த
சில ஒலிகள்
பிரபாகரத்தின்
‘பிரதிகள்’ ஆக முயல்கின்றன.
உன் வெள்ளாட்டு மந்தைக்குள்
உருமாறி உலா வந்த
கருப்பாடுகள் சாயம் வெளிறிச்
சாத்தான்களாகித் திரிகின்றன.
உயிரைச் சுற்றிக்கிடக்கும்
ஒற்றைச்சொல் மந்திரமே!
முள்ளிமுனை முற்றுப்புள்ளியல்லவென,
உன் பெயர் ஓதி உயிர்த்திருக்கும்
பிள்ளைகள் அறிவர்.
தோலுக்கு வரி பூசி போலிக்குப் புலியாகி
கூலிக்கு மாரடிக்கும் கூனர் கும்பல்
கூடி முயன்றாலும்,
உன் விழியேறிய தழல்
ஒருபோதும் அணையாது.
பிறந்தோர் உருவிலும்
பிறப்போர் கருவிலும்
இணைந்தே இருக்கும்.
விடுதலைத் தீ.
ஆளுநர் ரோசைய்யாவுடன் ஜெயலலிதா சந்திப்பு
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரோசைய்யாவை முதல் அமைச்சர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வறிக்கையை ஜெயலலிதா வழங்கினார். தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் ஜெயலலிதா விளக்கினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









