புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014


சாதனைகள் பல படைத்த இலங்கை அணி
இலங்கை அணி சர்வதேச ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபது-20 துடுப்பாட்ட சாதனைகளோடு பந்து வீச்சு சாதனைகளையும் தன் வசப் படுத்தியுள்ளது . 


இலங்கை அணி 2006 ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிராக 443/9 ஓட்டங்களை பெற்று அதிகூடிய ஒருநாள் சர்வதேச ஓட்டங்களையும். 

இந்திய அணிக்கு எதிராக 1997 ஆம் ஆண்டு 952/7  ஓட்டங்களை பெற்று  அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்களையும்.

கென்யா அணிக்கு எதிராக 2007 ஆம் ஆண்டு 260/6 ஓட்டங்களை பெற்று அதிகூடிய இருபது-20 சர்வதேச ஓட்டங்களை பதிவு செய்து துடுப்பாட்டத்தில் அதிகூடிய ஓட்டங்கள்  பெற்ற அணி என்ற சாதனையையும்.

மேலும் சர்வதேச ஒருநாள் போட்டியில்  2004 ஆம் ஆண்டு 35 ஓட்டங்களுக்குள் சிம்பாப்வே அணியையும். 2003 ஆம் ஆண்டு 36 ஓட்டங்களுக்குள் கனடா அணியையும்.2001 ஆம் ஆண்டு 38 - சிம்பாப்வே அணியையும்  வீழ்த்தி ஒருநாள் சர்வதேச போட்டியில் எதிரணியைக் குறைவான ஓட்டங்களுக்கு வீழ்த்திய சாதனையையும்,

5வது உலகக்கிண்ண இருபது-20 போட்டியில் 2014 ஆம் ஆண்டு 39 ஓட்டங்களுக்குள்  நெதர்லாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் எதிரணியைக் குறைவான ஓட்டங்களுக்கு  வீழ்த்தியது என்ற சாதனையையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad