புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

திருத்தணி அருகே 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு, தாயும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆடுகள் வளர்ப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரது மகன் சுதாகர். இவர் 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சுதாகரின்
மனைவி வசந்தியும் (வயது 28) 2 குழந்தைகளும் மாமனார் முனிரத்தினம், மாமியார் முனியம்மாள் ஆகியோரது பராமரிப்பில் வசித்து வந்தனர்.
வசந்தி ஆடுகள் வளர்த்து வந்தார். மகள் மீனாட்சி (8) மூன்றாம் வகுப்பும், மகன் ஹேமச்சந்திரன் (7) இரண்டாம் வகுப்பும் படித்தனர்.
கிணற்றில் பிணங்கள்
இந்த நிலையில் வசந்தியும் குழந்தைகளும் நேற்று மதியம் ஆடுகள் மேய்க்க சென்றவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த மாமனார் முனிரத்தினம் அவர்களை காட்டுக்கு சென்று தேடினார்.
அப்போது அங்குள்ள ஒரு கிணற்றில் வசந்தி மற்றும் 2 குழந்தைகளின் பிணங்கள் மிதந்தன. இதனை பார்த்ததும் மாமனார்–மாமியார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் கிடைத்ததும் திருத்தணி போலீஸ் துணை சூப்பிரண்டு மணியழகன் அறிவுரையின்பேரில் கனகம்மாசத்திரம் இன்ஸ்பெக்டர் பாலு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
அதில் வசந்தி வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியில், 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு, தானும் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ad

ad