புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் ஜோயல், சிவகங்கை பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா, சேலம் திமுக வேட்பாளர் உமாராணி ஆகியோர் இன்று தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
 
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் ஜோயல், காமராஜர் கல்லூரியில்
இருந்து 120 கார் மற்றும் வாகனங்கள், 250 இருசக்கர வாகனங்களுடன் அணி வகுத்து ஊர்வலமாக சென்றார்.

மீனவ மக்கள் அதிகமாக வசிக்கும் கிரேஸ்புரம் உள்ளிட்ட நகர பகுதியில் ஊர்வலமாக சென்ற பேரணி முடிவில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து, வேட்பாளர் ஜோயல், மாவட்ட கலெக்டர் ரவிக்குமாரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த ஊர்வலகத்தில் பா.ஜ.க, தே.மு.தி.க, பா.ம.க கலந்து கொண்டனர். மனுத் தாக்கல் முடிந்த பின்னர் வேட்பாளர் ஜோயல் வெளியே வந்தபோது, மத்திய அமைச்சர் ஜோயல் வாழ்க என்று மதிமுக தொண்டர்கள் கோஷமிட்டனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் செ.உமாராணி தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.
 
இதேபோல், சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா, மாவட்ட கலெக்டர் வி.ராஜாராமிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தென் சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் இல.கணேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

ad

ad