புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

ம.தி.மு.க. வேட்பாளர் வைகோ பிரசாரத்துக்கு சென்றபோது அவரது தொண்டர்களை வழி மறித்து சோதனை செய்த சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு தேர்தல் பிரசாரம்
மேற்கொண்டு சென்றார். அப்போது, வள்ளிக்குளம் அருகே தேர்தல் கண்காணிப்பு படையை சேர்ந்த அருப்புக்கோட்டை தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தார்.

அவர், திடீரென்று வைகோவின் பிரசார வேனுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த ம.தி.மு.க.வினரின் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். உடனே அவர்கள், இது வேட்பாளர் வைகோவின் வாகனம் என்று கூறியுள்ளனர். இதை சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஏற்றுக்கொள்ளவில்லை. உடனே இந்த தகவல் அறிந்த வைகோ, சம்பவ இடத்திற்கு வந்து என்னவென்று விசாரித்தார்.
அப்போது வைகோவுக்கும், சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிஷ்ணனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. உடனே ம.தி.மு.க.வினர் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் உறவினர். அதனால் உள் நோக்கத்தோடு நம்மிடம் பிரச்னை செய்கிறார் என்று கூறினார்கள்.

ஆத்திரமடைந்த வைகோ, திடீரென்று நடு ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டார். இந்த தகவல் அறிந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, வைகோ மறியலை கைவிட்டு தொடர்ந்து பிரசாரத்துக்கு கிளம்பி சென்றார்.

இது தொடர்பாக, விசாரணை நடத்திய விருதுநகர் எஸ்.பி.மகேஸ்வரி, தேர்தல் கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனை விருதுநகர் ஆயுதப்படை போலீசுக்கு டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ad

ad