புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

காலநிலை மாற்றம் குறித்து ஐ.நா. கடுமையான எச்சரிக்கை

உலக வெப்பமயமாதல் "கடுமையான, வியாபித்த மற்றும் மீளமுடியாத" தாக்கத்தை ஏற்படுத்திவருவதாக ஐ.நா. வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்பில் எச்சரிக்கப்பட் டுள்ளது.
ஜப்பானில் கூடிய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள், உலக காலநிலை மாற்றம் தொடர்பில் ஒரு விரிவான மதிப்பீட்டை செய்துள்ளனர். இது தொடர்பான தரவுகளை கொண்டு உலக வெப்பமயமாதலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஐ.நா.வின் காலநிலை தொடர்பான குழு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
இயற்கை அமைப்புகள் தற்போது சுமைகளை தாங்கிக்கொண்டிருக ;கின்றன. ஆனால் அதிகரிக்கும் இவ்வாறான தாக்கங்கள்; மனிதர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. அதிகரித்து வரும் வெப்பநிலையால் எமது சுகாதாரம், வீடுகள், உணவு மற்றும் பாதுகாப்பு அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று மேற்படி நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையில் எச்சரிக்கப்பட ;டுள்ளது. கடந்த ஒருவாரமாக யொகோஹாமாவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துரையாடல ;களுக்கு பின்னரே இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையிலான குழு இந்த விவகாரம் தொடர்பில் தீவிரமாக விவாதித்த இரண்டாவது முறை இதுவாகும். இதில் உலக வெப்பமயமாதலுக்கான காரணமான, விளைவு மற்றும் தீர்வு குறித்து ஒரு வழிமுறை வகுக்கப்பட்டது.
கடந்த 2007 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட அறிக்கைக்கு பின்னர் உலக வெப்பமயமாதல் இரட்டிப்பாகி இருப்பதாக விஞ்ஞான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டதை யடுத்தே கொள்கை வகுப்பாளர் கள் இந்த எச்சரிக்கை அறிக் கையை வெளியிட்டுள்ளனர்.
பனிப்பாறைகள் உருகுவது அல்லது நிரந்தர உறைபனி வெப்பமயமாதலின் பாதிப்பு அனைத்து கண்டங்கள் மற்றும் சமுத்திரங்களிலும் ஏற்பட்டிருப் பதாகவும் இந்த காலநிலை மாற்றம் காரணமாக இயற்கை மற்றும் மனித வாழ்க்கை முறையில் அண்மைய தசாப்தங் களில் பெரும் பாதிப்பு செலுத்தி இருப்பதாகவும் குறிப்பிடப்பட் டுள்ளது. இது குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப் பதாவது, "வெப்பம் அதிகரித்துச் செல்வது கடுமையான, வியாபித்த மற்றும் மீளமுடியாத பாதிப்பை செலுத்த வாய்ப்பு உள்ளது" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
"இந்த உலகில் எவரும் தற்ப வெப்பநிலை மாற்றத்தை உணராமல் போக மாட்டார்கள்" என்று காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையிலான குழுவின் தலைவர் ராNஜந்தர் பசோரி யொகோஹாமாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பான முன்னணி ஆய்வாளர் டொக்டர் சலீம் ஹக் குறிப்பிடும்போது, "இதற்கு முன்னரே இது நடக்கும் என்று எமக்கு தெரிந்திருந்தது. ஆனால் இப்போது இது நடக்கிறது என்பதற்கான ஆதாரம் எம்மிடம் இருக்கிறது" என்றார்.
உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பொதுச் செயலாளர் மைக்கல் ஜர்ரோட் குறிப்பிடும்போது "பு+மியின் தற்ப வெப்பநிலை குறித்து தெரியாததால் மக்கள் கடந்த காலங்களில் பாதிப்பை சந்தித்தனர். தற்போது இந்த அறியாமை இல்லை. எனவே அதை ஒரு காரணமாக கூற முடியாது" என்றார்.
இந்த அறிக்கை 12000 க்கும் அதிகமான விஞ்ஞான ஆய்வுகளை பரிசீலித்து அதனடிப்படையில் தயாரிக்கப்பட்டதென ஜர்ரோட் மேலும் குறிப்பிட்டார்.
இதன்படி அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் குறுகிய கால பாதிப்பை செலுத்தும் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே உலக வெப்பமயமாதலின் விளைவுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் தற்பவெப்பநிலை 2 செல்சியஸால் அதிகரிப்பதால் ஆர்டிக் கடல் பனிப்பாறை மற்றும் பவளப்பாறைகள் போன்ற தனித்துவமான அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
தவிர கடல் நீர் மற்றும் நன்னீர் அமைப்புக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மேற்படி ஆவணத்தில் விபரிக்கப்பட்டுள்ளது. சமுத்திரங்கள் மேலும் அமிலத்தன்மை கொண்டதாக மாறுவதோடு இதனால் அங்கிருக்கும் பல உயிரினங்கள் மற்றும் பவளப் பாறைகள் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளன. பாதரசத்தின் அதிகரிப்பால் விலங்குகள், தாவரங்கள் மற்றும் ஏனைய இனங்கள் உயர்ந்த நிலங்கள் மற்றும் துருவ பகுதிகளை நோக்கி நகர ஆரம்பிக்கும். நூற்றாண்டுக்கு முன்னரே மனிதன் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றான்.

ad

ad