புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

Vauneja06மாமடுக் குளத்தில் பலியானோரின் சடலங்கள் மீட்பு 
வவுனியா மாமடு குளத்தில் இன்று காலை (30.3) மூவர் மூழ்கி பலியாகியுள்ளனர் என மாமடு பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இன்று காலை வவுனியா பிரதேசத்தில் இருந்து நான்கு யுவதிகளும் இரு இளைஞர்களும் மாமடு குளத்தினை பார்ப்பதற்காக சென்றிருந்தனர். இவர்கள் மீன் பிடிக்காக பயன்படுத்தும் சிறிய வள்ளத்தில் ஏறி நீரில் செல்ல முற்பட்டபோது வள்ளம் கவிழ்ந்ததில் நீரிழ் மூழ்கியுள்ளனர்.
எனினும் இவர்களில் இரு யுவதிகளும் ஒரு இளைஞனும் தெயிவாதீனமாக கரை சேர்ந்த நிலையில் இரு யுவதிகளும் ஒரு இளைஞனும் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் விநாயகபுரத்தை சேர்ந்த என். சங்கீதா 26 வயது, கற்குழியை சேர்ந்த ஜேசப் ஜென்சி 26 வயது, திருநாவற்குளத்தை சேர்ந்த எஸ். உசாந் 20 வயது ஆகியோரே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
இதேவேளை உயிர் தப்பிய யுவதியொருவர் கருத்து தெரிவிக்கையில், இன்று காலை வவுனியாவில் இருந்து தன்னுடன் மேலும் மூவருமாக நால்வர் பயிற்சி வகுப்பென்றை நிறைவு செய்து சின்னபுதுக்குளத்தில் உள்ள நண்பியொருவரை பார்வையிடுவதற்காக வந்திருந்தோம்.
அவ் வேளையில் குளத்தினை பார்வையிடுவதற்கு விருப்பமாக இருந்தமையினால் சின்னபுதுக்குளத்தில் உள்ள நண்பியும் அவருடைய தம்பியையும் அழைத்துக்கொண்டு மாமடு குளத்திற்கு சென்ற சமயம் அங்கிருந்த வள்ளத்தில் ஏறி புகைப்படம் எடுத்துவிட்டு சிறிது தூரம் வள்ளதில் நகர முற்பட்டவேளை அது கவிழ்ந்துது. இவ் வேளையில் நாம் ஒருவாறாக நாம் மூவர் கரையை சேர்ந்துவிட்ட போதிலும் மற்றையவர்கள் நீரிழ் மூழ்கி விட்டனர் என கூறினார்.

ad

ad