புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

 மத்திய அரசிலிருந்து திமுக விலகி்யதற்கு 2ஜி தான் காரணம்: ஜெயலலிதா
மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. விலகியதற்கு 2ஜி பிரச்னைதான் காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் ஜெயலலிதா.
அப்போது பேசிய அவர், இலங்கை தமிழர் பிரச்னை
க்காக தி.மு.க விலகியதாக கூறுவது பொய்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அமைச்சரவையின் பரிந்துரையை மத்திய அமைச்சராக இருந்த ராசா ஏன் புறக்கணித்தார்? 2ஜி ஊழல் வழக்கில் தி.மு.க.வினருக்கு தொடர்பு இல்லை என கருணாநிதி கூறி இருக்கிறார்.
ஆனால் அண்மையில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய கருணாநிதி, காங்கிரஸ் நன்றி கெட்டத்தனமாக நடந்துகொண்டதாக கூறியுள்ளார். இதிலிருந்தே காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியதற்கு 2ஜி பிரச்னைதான் காரணம் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் கருணாநிதி. யாருடைய பேச்சைக் கேட்டு ஆ.ராசா நடந்து கொண்டார் என கருணாநிதி சொல்வாரா?.
மேலும் காங்கிரஸ்காரர்கள்  மதச்சார்பற்ற நிலைக்கு மீண்டும் திரும்பினால் அவர்களை ஆதரிப்போன் என கருணாநிதி கூறியுள்ளார். அப்படியானால் காங்கிரஸ் மதச்சார்புடையதாக இருந்தது என்றால், அக்கட்சியை திமுக ஆதரித்தது ஏன்? என்பதை கருணாநிதி விளக்க வேண்டும்.

தொழில்துறையினர் வேறு மாநிலத்திற்கு சென்று விட்டனர் என்ற கருணாநிதியின் புகார் தவறானது. தமிழக தொழிலதிபர்கள் கர்நாடகா சென்று விட்டனர் என்ற குற்றச்சாட்டு தவறு. கர்நாடகாவை நம்பி செல்ல தயாராக இல்லை என தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரசோடு தி.மு.க.வும் வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து விட்டது. 2,500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மின் நிலையங்களில் பிரச்னை காரணமாக சில நாட்கள் மின்வெட்டு இருந்தது. விரைவிலேயே மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்" என்றார்.

ad

ad