புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

பச்சிளம் குழந்தையின் நுரையீரலில் ரப்பர், பேனா மூடி, நாணயம்! மருத்துவர்கள் அதிர்ச்சி

பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை நுரையீரலில் ரப்பர், பேனா மூடி, நாணயம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஆலப்புழா அருகே உள்ள அம்பலப்புழா கலவூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித். இவரது மனைவி ஸ்ரீரேகா. கடந்த 25 நாட்களுக்கு முன் இத்தம்பதியினருக்கு அம்பலப்புழா அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நேற்று குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், பால் குடிக்க மறுப்பதாகவும் கூறி அம்பலப்புழா அரசு மருத்துவமனைக்கு குழந்தையை ஸ்ரீரேகா கொண்டு சென்றுள்ளார்.
உடனடியாக குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்தனர். எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது குழந்தையின் நுரையீரல் மற்றும் உணவுக் குழாயில் 3 பொருட்கள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, காணொளி என்டோஸ்கோப்பி மூலம் அந்த பொருட்களை மருத்துவர்கள் வெளியே எடுத்து பார்த்தபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தையின் நுரையீரலில் 1 நாணயமும், உணவுக் குழாயில் ரப்பரும், பேனா மூடியும் சிக்கியிருந்தது. பிஞ்சு குழந்தையின் நுரையீரலிலும், உணவுக் குழாயிலும் இந்த பொருட்கள் எப்படி சிக்கியது என்பது குறித்து மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மருத்துவர்கள் அம்பலப்புழா பொலிசிற்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே, குழந்தைக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ad

ad