புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

இந்தி சரளமாக தெரிந்தால் மோடியை எதிர்த்து போட்டியிட்டிருப்பேன்: ப.சிதம்பரம்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஸ்திரமாக உள்ளதாகவும், அன்னிய செலவாணி கையிருப்பு  300 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர்
ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரத்தை ப.சிதம்பரம் சீரழித்துவிட்டதாக பா.ஜனதா ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த யஸ்வந்த் சின்கா நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் நாட்டின் பொருளாதார கொள்கைள் தொடர்பாக பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் புகார் தெரிவித்து வரும் நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ப.சிதம்பரம், டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், நாட்டின்  பொருளாதார வளர்ச்சி நிலையாக உள்ளது என்றும், அரசியல் தலைவர்கள் உலக நடப்புகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

2013 - 14ஆம் நிதியாண்டில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு 3.3 பில்லியன் டாலர் என்றும், உள்நாட்டு மொத்த உற்பத்தி 4.9 சதவீதமாக உள்ளது என்றும் கூறிய அவர்,"2014 ஆம் ஆண்டுக்கான நடப்புக் கணக்கு பற்றாக்குறை 4.9 சதவீதமாக இருக்கும்.  இந்தியாவின் அன்னிய செலாவணி மதிப்பு ரூ.18 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
 
2008ல் பொருளாதார நெருக்கடி உலகம் முழுதும் ஏற்பட்டது. ஆனால் இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் 2008 - 2009 ஆம் ஆண்டுதான் சிறப்பான ஆண்டாக இருந்தது.

இந்தியாவின் ஏற்றுமதி 19.56 லட்சம் கோடியாக ஆக உயர்ந்தள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை 35 பில்லியன் குறைக்கப்பட்டுள்ளது.  அன்னிய செலாவணி கையிருப்பு 300 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. மொத்த விலை பணவீக்கம் 5.9 விழுக்காடாக குறைந்துள்ளது. 
புதிய வேலை இல்லை என்ற பா.ஜனதாவின் புகார் தவறானது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது. அத்துடன் உருவாக்கப்பட்ட பல பணியிடங்களுக்கு போதிய ஆட்கள் கிடைக்கவில்லை.
மத்தியில் பா.ஜனதா ஆட்சியில் யஷ்வந்த் சின்கா நிதியமைச்சராக இருந்த 200 - 2002 ஆம் ஆண்டு காலத்தில்தான் இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தது. அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்றதும், மும்பை பங்குச் சந்தையில் கொண்டாட்டத்தில் திளைத்து சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்தன.

அதன்பின்னர் ஜஸ்வந்த் சிங், பா.ஜனதாவிலிருந்து நீக்கப்பட்டபோது, மும்பை பங்குச் சந்தை மீண்டும் கொண்டாடியது.
தங்கம் இறக்குமதி
தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது " என மேலும் தெரிவித்தார். 
மோடியை எதிர்த்து போட்டி
பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்த ப.சிதம்பரம், அவர் முதலாளித்து நண்பனாக திகழ்வதாகவும், பெரிய தொழிலதிபர்கள் மோடியை ஆதரிப்பதை சவுகரியமாக உணர்வதாகவும் கூறினார்.
தமக்கு இந்தி மொழி சரளமாக பேச தெரிந்திருந்தால் தாம் வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட்டிருப்பேன் என்றும், ஆனால் தமக்கு இந்தி மொழி அவ்வளவாக வராததால் சரிவர பிரசாரம் செய்ய முடியாது என்றும், அதனாலேயே தம்மால் மோடியை எதிர்த்து போட்டியிட முடியவில்லை என்றும், இதேப்போன்றுதான் சிவகங்கை தொகுதியில் மோடியால் தம்மை எதிர்த்து போட்டியிட முடியாது என்றும் ப.சிதம்பரம் மேலும் கூறினார்.

ad

ad