புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

கிராமப்புற மக்கள் ஆதரவு யாருக்கு?
ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே
தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்ட பிறகு ஜூ.வி. எடுத்த முதல் சர்வே இது. கூட்டணிகள் எல்லாம் முடிவான நிலையில் மக்களின் மனநிலையை அறியப் புறப்பட்டோம். நாட்டின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படும்
கிராம மக்களின் மனநிலையைத் தெரிந்துகொள்ள, 'கிராமங்கள் யார் பக்கம்?’ என்ற அடிப்படையில் சர்வே எடுக்கப் புறப்பட்டது ஜூ.வி. டீம். தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று 5,587 பேரை சந்தித்தோம்.நன்றி விகடன்
 ''என்னத்த கேட்டு என்ன செய்யப்போறீங்க... குடிக்கக்கூட தண்ணி இல்லாம தினமும் பல கிலோ மீட்டர் தூரத்துக்குப் போய் தண்ணிக்கு அல்லாடுறோம். எங்கக் கஷ்டத்தையும் கண்டுக்க ஒரு நாதியும் இல்ல... வக்கனையாப் பேசி ஓட்டு வாங்கிட்டு போறதோட சரி. இந்த தடவை ஓட்டு கேட்டு வரட்டும் அப்புறம் வெச்சுக்குறோம்!'' என்று எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் மீதான கோபத்தை நம்மிடம் கொட்டினார்கள்.  
ஐந்து ஆண்டுகால மத்திய அரசின் ஆட்சியில் விவசாயம் வளர்ந்துவிடவில்லை. மோசமான நிலையில்தான் இருக்கிறது என அதிகம் பேர் சொன்னார்கள்.
குடிநீர், கழிப்பறை, சாலை, கல்வி போன்ற விஷயங்களைப் பற்றி கேட்டபோது, 'அப்படியேதான் இருக்கிறது’ என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது. கருத்துக் கணிப்புக்கு சென்ற இடங்களில் எல்லாம் பிரதானமாக எதிரொலித்த விஷயம் மின்வெட்டு. இதுபற்றிய கேள்விக்கு பரவாயில்லை என்று சொன்னவர்கள்தான் அதிகம். அதாவது 37 சதவிகிதம் பேர், 'பரவாயில்லை’ எனச் சொல்லியிருந்தார்கள். ஆனால், படுமோசம் என்றும் மோசம் என்றும் சொன்னவர்களின் சதவிகிதத்தைக் கூட்டினால் 46 சதவிகிதத்துக்கு மேல் எதிர்ப்பு இருப்பது வெட்ட வெளிச்சமானது.
அ.தி.மு.க. ஆட்சியில் கிராம மக்களை அதிகம் பாதித்தது விலைவாசி உயர்வு என்றே பலரும் சொன்னார்கள்.
அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு நரேந்திர மோடி என்று அதிகம் பேர் டிக் அடித்தார்கள். கிராமங்களில் மோடியின் பெயர் தெரிந்துள்ளதை உணர முடிந்தது. யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள் என்கிற கேள்விக்கு பி.ஜே.பி. கூட்டணிக்குதான் ஆதரவு என பெரும்பாலானவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பி.ஜே.பி-க்கும் அ.தி.மு.க-வுக்குமான வித்தியாசம் குறைவுதான். இதோ அந்த சர்வே முடிவுகள் உங்கள் பார்வைக்கு...  

ad

ad