புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

2,49,678: இரு மாகாண சபைகளிலும் பிரசன்னவுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு

ஹிருணிகாவுக்கு 1,39,034 விருப்பு வாக்குகள்
மேல், தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில் முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க 2,49,678 விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னணியில் திகழ்கிறார்.
மாகாண சபைத் தேர்தல் வரலாற்றில்
கம்பஹா மாவட்டத்தில் வேட்பாளரொருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய விருப்பு வாக்காக இத்தொகை கருதப்படுகிறது.
அதற்கடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் ஹிருனிகா பிரேமச்சந்திர 1,39,034 வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முன்னணி வேட்பாளராகத் திகழ்கிறார். இதேவேளை, முன்னாள் தென் மாகாண சபை முதலமைச்சர் ஷான் விஜேலால் சில்வா காலி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள வேட்பாளர்களில் 95,860 வாக்குகளைப் பெற்று மாவட்டத்தில் முதன்மை வகிக்கின்றார்.
இம்முறையே முதல் தடவையாக தேர்தலொன்றில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஹிருணிகா பிரேமசந்திர 1, 39,034 வாக்குகளையும் செனல் வெல்கம 1,15,385 வாக்குகளையும் பசந்த யாப்பா அபேவர்தன 76, 870 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிகூடிய வாக்குகள் வரிசையில் மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்தில் பிரசன்ன ரணதுங்க 2, 496 78 வாக்குகள், கொழும்பு மாவட்டத்தில் ஹிருணிகா பிரேமசந்தர, 1,39034 வாக்குகள், களுத்துறை மாவட்டத்தில் அமைச்சர் குமார வெல்கமவின் புதல்வர் செனல் வெல்கம 1,15,385 வாக்குகள், மாத்தறை மாவட்டத்தில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் புதல்வர் பசந்த யாப்பா அபேவர்தன76, 870 வாக்குகளையும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் டி.வி. உபுல் 66, 995 வாக்குகளையும் காலி மாவட்டத்தில் ஷான் விஜேலால் சில்வா 95, 860 வாக்குகளைப் பெற்று முன்னணியில் திகழ்கின்றனர்.

ad

ad