புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி மே.இ.தீவுகள் அணி அரையிறுதிக்கு தகுதி

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று மிர்பூரில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்று
அரையிறுதிக்கு முன்னேறியது.
முக்கியமான இந்தப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
மே.இ.தீவுகள் அணியில் துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய அதிரடி மன்னன் கெயில் 4 பந்துகள் எதிர்கொண்டு ஒரு பவுண்டரியுடன் 5 ரன்களில் நடையைக் கட்டினார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் ஸ்மித் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 22 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்திருந்த நிலையில், சிம்மன்ஸும் சாமுவல்ஸும் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். சிம்மன்ஸ் 29 பந்துகளில் 2 சிக்ஸார் 2 பவுண்டரியுடன் 31 ரன் எடுத்தார். சாமுவல்ஸ் 18 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 20 ரன் எடுத்தார். பின்னர் வந்த ப்ராவோ 26 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 46 ரன் குவித்தார். இதனால் ரன் ரேட் அதிகரித்தது. அவருக்கு இணையாக சமி 20  பந்துகளில் 2 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 42 ரன் குவித்தார். இதை அடுத்து மே.இ.தீவுகள் அணி 6 விக்கெட்களை இழந்து 166 ரன் எடுத்து 167 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது.
பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, துவக்கம் முதலே நெருக்கடியுடன் விளையாடியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் சேஷாத், கம்ரான் அக்மல் இருவரும் ரன் கணக்கைத் துவங்கும் முன்னே டக் அவுட் ஆயினர். ஹபீஸ் மட்டும் 19 ரன் எடுத்தார். உமர் அக்மல், ஷோயப் மாலிக் இருவரும் 1ம் 2ம் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
நடுவரிசையில் சோஹித் மசூத் 22 பந்துகளில் 1 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 18 ரன் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷாஹித் அப்ரிதி 12 பந்துகளில் 14 ரன் எடுத்தார். என்றாலும் ரன் ரேட் விகிதம் அதிகம் இருந்ததும் மளமள வென விக்கெட் சரிந்ததும் பாகிஸ்தானின் தோல்விக்கு வழிவகுத்தது.
அந்த அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 82 ரன்களே எடுத்தது. இதைஅடுத்து முக்கியமான இந்தப் போட்டியில் மே.இ.தீவுகள் அணி வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது

ad

ad