புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014


புல்லருக்கு விதிக்கப்பட்ட தூக்கு  தண்டனை ரத்து- ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம்!
காலிஸ்தான் விடுதலை இயக்கததைச் சேர்ந்த தேவேந்தர்பால் சிங் புல்லருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது உச்சநீதிமன்றம். 1
993ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. புல்லரின் தூக்கு தண்டனையை குறைக்கக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்தது. அவரது தூக்கு தண்டனையை நிறைவேற்ற பஞ்சாப் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் சில தூக்குத் தண்டனை
கைதிகளின் கருணை மனுக்கள் மீது காலதாமதமாக முடிவு எடுக்கப்பட்டதால் அதன் பலனை கைதிகளுக்கு அளித்து அவர்களின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி 21-ந் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அத் தீர்ப்பை தமது கணவர் விவகாரத்திலும் பொருந்தச் செய்ய வேண்டும் என்று புல்லரின் மனைவி மீண்டும் மனு தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ஆர்.எம். லோதா, எச்.எல். தட்டூ, சூதான்சு ஜோதி முகோபாத்யாய அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. அப்போது புல்லரின் தூக்கை ஆயுள் தண்டனையாக குறைக்க மத்திய அரசு தரப்பிலும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீது இன்று நடைபெற்ற விசாரணையின் போது புல்லரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


ad

ad