புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

பெளசிக்கு போனஸ் ஆசனம்?
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் நியமிப்பது குறித்தும் போனஸ் ஆசனங்களுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்வது குறித்தும் இன்று நடைபெறும்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட
4 போனஸ் ஆசனங்களுக்கும் தகுதியானவர்களை நியமிக்குமாறு தேர்தல் ஆணையாளர் தனக்கு எழுத்து மூலம் அறிவித்த பின் இந்த வாரத்தினுள் போனஸ் ஆசனங்களுக்கான உறுப்பினர்களை அறிவிப்பதாக ஐ.ம.சு.மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
ஐ.ம.சு.மு. ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் போனஸ் ஆசனங்கள் குறித்தும் முதலமைச்சர் நியமனம் தொடர்பாகவும் வினவப் பட்டது.
கொழும்பு ஐ.ம.சு.மு. பட்டியலில் அடுத்துள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நெளசர் பெளசியும் 4 போனஸ் ஆசனங்களில் ஒன்றினூடாக நியமிக்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
களுத்துறை ஐ.ம.சு.மு. பட்டியலில் அடுத்து ஹெல உருமய சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும் கம்பஹா மாவட்ட பட்டியலில் தேசிய சுதந்திர முன்னணி வேட்பாளரும் இருப்பதாக அறியவருகிறது.
கூட்டுக் கட்சிகளின் தன்மை மற்றும் விடயங்களை ஆராய்ந்து போனால் ஆசனம் தொடர்பில் முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.
தென் மாகாணத்திலும் ஐ.ம.சு.முவுக்கு இரு போனஸ் ஆசனங்கள் கிடைத்துள்ளதோடு மாத்தறை மாவட்ட ஐ.ம.சு.மு. பட்டியலில் சந்தன சிரிபக்கவும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பட்டியலில் எஸ்.பி.பி. ஆனந்தவும் காலி மாவட்ட பட்டியலில் துல்சான் காரியவசமும் இடம் பிடித்துள்ளனர்

ad

ad