புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

அதிமுக வேட்பாளர்கள் 40 பேரும் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்

இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு, வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை (ஏப். 1) மீண்டும் தொடங்குகிறது. அதிமுக வேட்பாளர்கள் 40 பேரும் (புதுச்சேரி வேட்பாளர்
உள்பட) பிற்பகலில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.
 மக்களவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை (மார்ச் 29) தொடங்கியது. முதல் நாளில் 63 பேர் மனுதாக்கல் செய்தனர்.
 காங்கிரஸ் சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் மணிசங்கர் அய்யர், மதுரை, கோவையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் விக்ரமன், நடராஜன் ஆகியோரும், ஆம்-ஆத்மி சார்பில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி தொகுதிகளில் போட்டியிடுவோரும் தங்களது வேட்புமனுக்களை முதல் நாளான சனிக்கிழமை தாக்கல் செய்துள்ளனர்.
இன்று மீண்டும் தொடக்கம்: மார்ச் 30 ஆம் தேதியன்று, ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், 31 ஆம் தேதி (திங்கள்கிழமை) தெலுங்கு வருடப் பிறப்பு காரணமாக அரசு விடுமுறை விடப்பட்டதாலும் இரண்டு நாள்களிலும் வேட்புமனு தாக்கல் இல்லை. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) முதல் வேட்புமனு தாக்கல் மீண்டும் தொடங்குகிறது.
  வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஏப்ரல் 5-ஆம் தேதி கடைசியாகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 9 கடைசி நாளாகும். வாக்குப் பதிவு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 16.
 அதிமுக வேட்பாளர்கள் இன்று மனு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 1) பிற்பகலில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
40 வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக 35 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களில் பெரும்பாலானோர் புதன்கிழமை (ஏப். 2) தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர்.

ad

ad