-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 ஏப்., 2014


ஜெயலலிதா வீட்டு முன்பு மண்ணைவாரி இறைக்கும் போராட்டம்
நடத்தவிருந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது
 
பூரண மதுவிலக்குக் கோரி மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.  இந்நிலையில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தாமல், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறந்துவைக்க அனுமதி வழங்கும் முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து, மாவட்டந்தோறும் பயணம் சென்று,  அங்குள்ள, மதுவால் சீரழிந்த குடும்பத்தில் உள்ள பெண்களை சந்தித்து, யாருக்கும் ஓட்டு போட வேண்டாம். நோட்டோவுக்கு ஓட்டு போட்டு எதிர்ப்பை தெரிவியுங்கள்  என்று பிரச்சாரம் செய்து வந்தார்.
சென்னை மாவட்டத்திற்கு நேற்று முன் தினம் வந்தார்.  பல்வேறு மாவட்ட பெண்களில் குமுறல் களைக்கொண்டு,  அவர்களின் சார்பாக முதல்வர் ஜெயலலிதா வீட்டு முன்பு நின்று மண்ணை வாரி இறைக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்தார்.  நாளை (22.4.2014) இந்த போராட்டத்தை நடத்தப்போவதாகவும், சென்னை மெரினா கடற்கரையில் துண்டு பிரசுரம் விநியோகித்துக்கொண்டிருந்தார் நந்தினி.  அவருடன் தந்தையும் உடனீருந்தார்.
துண்டு பிரசுரம் விநியோகித்துக்கொண்டிருந்த நந்தினியை போலீசார் கைது செய்தனர்.  அவரது தந்தை யையும் கைது செய்தது போலீஸ்.

விளம்பரம்