-

22 ஏப்., 2014

சங்கக்கார, மஹேலவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
 
இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இலங்கைக் கிரிக்கெட் வாரியம் இதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டுவன்ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றியீட்டி நாடு திரும்பியதன் பின்னர், அவர்கள் இருவரும் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் இலங்கைக் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இருவரினதும் கருத்துக்கள் கிரிக்கெட் வாரியத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ad

ad