22 ஏப்., 2014


போலீஸாருடன் விடுதலை சிறுத்தைகள் மோதல்:ஸ்டாலின் பிரச்சாரத்தில் பரபரப்பு
திமுக பொருளாளர் ஸ்டாலின் திமுக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்தை ஆதரித்து ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலை அருகே திங்கட்கிழமை காலை பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது திமுக கூட்டனி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியை
சேர்ந்தவர்கள் கொடிகட்டிய கம்புகளுடன் நின்றிருந்தனர். இவர்களை ஸ்டாலின் பாதுகாப்பிற்கு வந்த போலீஸார் பிரசாரத்திற்கு இடையூராக இருக்கும் என கூறி ஒதுங்கி நிற்குமாறு கூறினார்கள்.


அதனை ஏற்காததால் விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஸ்டாலின் பாதுகாப்பு போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிகழ்ச்சிகளுக்கிடையே ஸ்டாலின் பிரசாரத்தை முடித்து விட்டு புறப்பட்டு சென்றார்.அதன் பின் ஸ்டாலின் பாதுகாப்பிற்கு வந்த போலீஸ் வாகனத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர் அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தி வாகனம் செல்ல ஏற்பாடு செய்தனர்.
அதன் பின் தாக்குதல் நடத்திய மத்தியபாதுகாப்பு படை போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி ஆண்டிபட்டி-தேனி சாலையில் விடுதலை கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.இவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.இதனால் ஆண்டிபட்டி-தேனி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.