புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014

திருத்தணி ராஜாவூரில் நாம் சந்தித்த நெசவாளிகளான சுந்தரமூர்த்தி, வைரவன் போன்றோர் ‘""கரண்ட் விருந்தாளி மாதிரி எப்பவாவது வந்து போகுது. இதனால் எங்கத் தொழில் கடுமையா பாதிக்கப் பட்டிருக்கு. வேலை இல்லாததால் பசி பட்டினியோடதான் நாட்களை நகர்த்த றோம்''’என்றார்கள் கவலையாக.

நாணாப்பேட்டையில், வீரபத்திரன், ரெங்கசாமி, வடிவேலு போன்றோர் நம்மிடம் ""யார் நீங்க? யாருக்காக சர்வே எடுக்கறீங்க? அந்தம்மா ஜெயிக்க முடியுமான்னு தெரிஞ்சிக்க உங்களை அனுப்புச்சா?''’என வெயிலை விடவும் வெப்பத்தைக் காட்டி னார்கள்.

ஆற்காட்டில் சங்கீதா என்ற பெண்மணி ""என்னங்க யாருக்கு ஓட்டுன்னு கேட்கறீங்க. அதை நான் வெளியில் சொன்னா, என் வீட்டுக்காரருக்கு துரோகம் செய்ற மாதிரி ஆய்டும். மாட்டேன்''’என்றார் பிடிவாதமாய். அது  எப்படிங்க வீட்டுக் காரருக்கு துரோகமாகும்? என்று அவரது வாயைக் கிளறினோம். சங்கீதாவோ ""‘என் வீட்டுக்காரர் விஜயகாந்த் மேல் கிறுக்குப் பிடிச்சித் திரியறார். அந்தக் கட்சியிலும் இருக்கார். உளறிக் கொட்டும் அவருக்கு நான் போடவே மாட்டேன். இதை வெளியில் சொன்னா புருஷனுக்குத் தூரோகம் பண்ற மாதிரிதானே?''’என கிறுகிறுக்க வைத்தார்.

காட்பாடி பகுதியில் இருக்கும் சேக்காடு கிராமத்துப் பெண்களோ ""குடிக்கத் தண்ணியில்லாம கஷ்டப்படறோம். எலைக்காரங்க யாரும் கண்டுக்கமாட்டேங்கறாங்க''’என்றார்கள் ஆதங்கமாய்.

வன்னிய வாக்காளர்களில் சாதி ரீதியாக யோசிக்கும் வாக்காளர்கள் மட்டும் இலைக்கும், மாம்பழத்துக்கும் ஆதரவு தருகிறார்கள். கட்சி வன்னியர்கள், அந்தந்த கட்சியிலேயே உறுதியாக இருப்பதைப் பார்க்க முடிந்தது. காட்பாடி வேல்முருகன், சந்திரசேகர், அன்பழகன் போன்றோர் ‘""எங்க சாதிக்கார வேலு மத்திய மந்திரியா இருந்தப்ப, நிறைய சாதிச்சிருக்காரு. 5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பார் பாருங்க. உலகமே அவரைப் பத்திதான் இப்பப் பேசுது''’ என்றார்கள் உணர்ச்சி வசப்பட்டவர்களாய்.

ராணிப்பேட்டை, மேல்விஷாரம், ஆற்காடு பகுதிகளில் கணிசமாக இருக்கும் இஸ்லாமியத் தரப்பினரிடம் வழக்கத்தை விட இந்தமுறை சூரியத் தரப்பிற்கு ஆதரவு அலை வீசுகிறது. ‘தலித் சமூகத்தினரின் ஆர்வப் பார்வையும் சூரியத் தரப்பின் பக்கமே இருக்கிறது.

மேல்விஷாரத்தைச் சேர்ந்த நண்பர்களான இஸ்மாயிலும் வேலுவும் ‘""தி.மு.க. கேண்டிடேட் இளங்கோ சாதியைப் பேசாம நாகரிகமா ஓட்டு கேட்கிறார். அவர் சட்டமேதைன்னு சொல் றாங்க. ஆளும் பார்க்க அமைதியா இண்ட லக்ஸுவல் மாதிரிதான் இருக்கார்''’என சர்டிபிகேட் கொடுத்தார்கள்.

ர்வே தொடங்கிய அன்று வெண்ணந்தூரில் மதியம் ஆரம்பித்த மழை, மாலை வரை அடித்துப் பெய்தது. மறுநாள் சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை பகுதிகளிலும் வருண பகவான் நனையாய் நனைத்தார். அந்த மழையிலும் நமது பணி தொய்வில்லாமல் தொடர்ந்தது.

மளிகைப் பொருட்கள், மசாலா சாமான்களுக்கு தமிழ்நாட்டிலேயே புகழ் பெற்ற சந்தை என்றால் முள்ளுக்குறிச்சி சந்தைதான். 30 வருடங்களாக நடக்கும் இந்தச் சந்தையை எந்தக் கட்சி யினரும் கவனிக்காத அதிருப்தி, வியாபாரிகள் மத்தியில் வியாபித் திருக்கிறது. இதைக் கேள்விப்பட்ட இலை வேட்பாளர் சுந்தரம், ""கவலைப்படாதீங்க. நான் ஜெயிச்சதும் தொகுதி நிதியிலிருந்து கடைகள் கட்டித் தருகிறேன்'' என பிராமிஸ் பண்ணிக் கொடுத்திருக்கிறார். இருந்தும் சிவா, நாகராஜ், வள்ளி போன்ற வியாபாரிகளோ ""யாரை நம்பறதுன்னு தெரியலையே'' என்கிறார்கள் விரக்தியாக.

திருச்செங்கோடு, பரமத்திவேலூர் பகுதிகளில் நடந்துவந்த மானாவாரி விவசாயம் சமீபகாலமாகப் பாதித்த அதிருப்தியில் இருக்கி றார்கள் விவசாயிகள். விவசாயியான மணியனூர் கந்தசாமி கவுண்டரோ, ""காங்கிரஸ் அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தைக் கொண்டு வந்ததால் விவசாயத்துக்கு ஆளுங்களே கிடைக்கமாட்டேங்கறாங்க. அதனால் நாங்க பீகார், ஒரிஸா, சத்தீஷ்கர்னு போய் முப்பது, நாப் பது ஆளுங்களைக் கூட்டிவந்து தங்க வச்சி வேலை செய்ய வேண்டியிருக்கு. அதனால் காங்கிரசுக்கு எங்க விவசாய ஜனங்க ஆழமா பள்ளம் வெட்ட ஆசைப்படறாங்க'' என்றார் கோபமாய்.

நாமக்கல் நகரம், ராசிபுரம், புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை பகுதிகளில் கட்சி தாண்டிய செல்வாக்கு சூரிய வேட்பாளர் சிட்டிங் காந்திசெல்வனுக்குப் பார்க்க முடிகிறது. நாமக்கல் வியாபாரியான ஷாஜகான் ""இவர் நாமக்கல் நகராட்சி சேர்மனா இருந்தப்ப, தமிழ் நாட்டிலேயே முதல் குப்பையில்லா நகராட்சிங்கிற பேரை நாமக்கல்லுக்கு வாங்கிக் கொடுத்தார். பிறகு அவரோட மாமனார் செல்வராஜ் சேர்மனா இருந்தவரை இதே பெருமை தொடர்ந்திச்சி. இப்ப நாமக்கல் குப்பை நகராட்சியா, நாறும் நகராட்சியா மாறிடிச்சி'' என்கிறார் அழுத்தமாய். 

பரவலாக பெண்கள் ஆதரவு இலைக்கே இருப்பதை உணர முடிகிறது. காரணம் இலவச மிக்ஸி, கிரைண்டர், ஆடுகள். அதேபோல் கொடுக்கப்பட்ட லேப்டாப், கன்னி வாக்காளர்களை ரொம்பவே கவர்ந்திருக்கிறது.   

டந்த சட்டமன்றத் தேர்தலின்போது பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த மதுர வாயல் துறைமுகம் இணைப்புச் சாலை தி.மு.க.வுக்கு பெரிய ப்ளஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை பெரிய விஷயமாக மக்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ""தற்பொழுது கலைஞர் கொண்டு வந்தார் என்கிற ஒரே காரணத்துக்காக மதுரவாயல் துறைமுகம் இணைப்பு சாலை திட்டத்திற்கு தடை போட்டுவிட்டார் ஜெயலலிதா. அதற்காக இந்த முறை தி.மு.க.வுக்கே ஓட்டு'' என வெளிப்படையாகவே தெரி விக்கிறார்கள் மதுரவாயலில் நாம் சந்தித்த பொதுமக்கள்.

நாம் சர்வேக்கு சென்றதும் "நீங்க பூத் ஸ்லிப் கொடுக்க வந்தீங்க' என நினைத்தோம் என நம்மை கேட்டார் குன்றத்தூரில் நாம் சந்தித்த பெண்மணி. முதலில் பூத் ஸ்லிப் அப்புறம் காசு அதற்கப்புறம் ஓட்டு என வரிசையாக தனது தேர்தல் பற்றிய எதிர் பார்ப்பை அப்படியே பதிவு செய்தார்.

புறநகர் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் ஜெ. அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். புதிதாக அறிமுகப்படுத்திய மீட்டரும் போலீஸ் நெருக்கடியும் "இந்த முறை அ.தி.மு.க.வுக்கு ஓட்டு இல்லை' என அவர்களை பேச வைத்துள்ளது.

பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பம்மல், திரிசூலம், திருநீர்மலை பகுதிகளில் நம் சர்வே படிவத்தில் வாக்களித்த பெண்கள், ""தண்ணி பிரச்சினை தான் ரொம்ப கொடுமையா இருக்குங்க. 10 நாளைக்கு ஒருமுறைதான் குழாய்ல தண்ணி வருது. அதுவும் 15 நிமிஷம்தான். குளிக்காம கூட இருந்திடலாம். மற்றதுக் கெல்லாம் என்ன பண்றது?'' என்று ஆவேசப்பட்டனர்.  மீனம்பாக்கம் ராஜேந்திரன், ""மோடிக்காக பம்பரத்துல போடலாம்னு யோசிக்கி றேன்'' என சொல்லி வியக்க வைத்தார்.

சமூகத்தின் மீதும் அர சியல் அமைப்பு மீதும் விரக்தி ஏற்பட்டு "நோட்டாவிற்கு போடுவேன்' என சொல் பவர்கள் கடைசி நேரத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என எந்த அணி பக்கமும் சாயும் வாய்ப்பு உள்ளது.

-தாமோதரன் பிரகாஷ், இளையசெல்வன்

ad

ad