புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014





""ஹலோ தலைவரே...  நம்ம நக்கீரனில் எம்.பி. தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தீங்களா?''


""நான் மட்டுமா பார்க்கிறேன்.. தமிழ்நாடே பார்க்குதுப்பா. எம்.பி தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் கட்சிகளோட செல்வாக்கு என்னன்னு விரிவான சர்வே வெளியிடப்பட்டிருப்பதால மக்கள் ரொம்ப எதிர்பார்ப்போடு கவனிக்கிறாங்க.'நக்கீரன்

""ஓட்டுப்போடுற மக்கள் மட்டுமில்லை, ஓட்டு வாங்கி ஜெயிக்க நினைக்கும் வேட்பாளர்கள், மத்தியில் அதிகாரம் செலுத்த நினைக்கும் கட்சித்தலைமைகள் உள்பட எல்லோரும் நக்கீரன் சர்வேயை உன்னிப்பா கவனிக்குறாங்க தலைவரே.. குறிப்பா ஆளுங்கட்சியோட மேலிடம், சட்டமன்றத் தொகுதிவாரியான சர்வேயைப் பார்த்துட்டு, நால்வர் அணி அமைச்சர்களைக் கூப்பிட்டு, எங்கெங்கே வீக்கா இருக்குதோ அதையெல்லாம் சரி பண்ணுங்கன்னு சொல்லியிருக்கு. அவங்களும் களமிறங்கிட்டாங்க. நக்கீரன் சர்வே இதழ் வந்த அன்னைக்கு கரூரில் இருந்தார் மு.க.ஸ்டாலின். கரூர் தொகுதி தி.மு.கவுக்கு வீக்கா இருக்குதுன்னு சர்வேயில் சொல்லப்பட்டிருந்ததும், பொதுக்கூட்டத்தை முடிச்சிட்டு மறுநாள் நிர்வாகிகளைக் கூட்டி ஆலோசிச்சிருக்காரு. அப்ப அவங்க, தொகுதி நல்லா இருக்குன்னும் மற்ற சில சர்வே விவரங்களையும் எடுத்துச்சொல்லியிருக்காங்க.  ஸ்டாலினோ, சில ஊடகங்கள் நாமதான் ஜெயிக்கப் போறோம்னு சொல்லி, நமக்குள்ளே அலட்சியமான நிலையை உருவாக்கிடும். அதையெல்லாம் முழுசா நம்பிடாதீங்கன்னு சொல்லி, நக்கீரனில் குறிப்பிடப்பட்டிருந்த கரூர் எம்.பி தொகுதிக் குட்பட்ட விராலிமலை, மணப்பாறை இரண்டு தொகுதிகளுக்கும் தனி டீம் போட்டு கவ னிக்கச் சொல்லி யிருக்காரு.''

""என்ன இருந்தாலும் சகல அதிகாரங்களையும் கையிலே வச்சிருக்கிற ஆளுங்கட்சி போல எதிர்க்கட்சி களால கடைசி நேர வேலைகளைப் பார்க்க முடியாதே?''

""ஆமாங்க தலைவரே.. அ.தி.மு.கவோட வைட்டமின் சப்ளை பற்றி நாம தொடர்ந்து பேசிக்கிட்டுத்தான் இருக்கோம். ஓட்டுக்கு 3000 ரூபாய் அ.தி.மு.க கொடுப்பதா எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுது. ஆனா அ.தி.மு.க தரப்பிலோ கடைசி நேரத்தில் எவ்வளவு கொடுக்குறதுன்னு குழப் பம் இருந்துச்சு. ஓட்டுக்கு 200  ரூபாய், சில இடங்களில் 300 ரூபாய், ரொம்ப டஃப்பான இடங்களில் 500 ரூபாய் வரை கொடுக்கச் சொல்லி மேலிட உத்தரவாம். முதலில் குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு மட்டும் கொடுக்கலாம்னுதான் மேலிடம் நினைச்சுதாம். கடைசிக் கட்டத்தில் உளவுத்துறை கொடுத்து வரும் ரிப்போர்ட்டுகள் டென்ஷனை அதிகப்படுத்துவதால, எல்லாத் தொகுதிகளிலும் பட்டுவாடா பண்ணச் சொல்லி உத்தரவிடப் பட்டதாம். அதாவது அழகிரி ஃபார்முலான்னு பெயர் எடுத்த பணப்பட்டுவாடா இப்ப ஜெ. ஃபார்முலாவா மாறிடிச்சி.''

""பட்டுவாடா மெத்தட் எப்படியாம்?''

""தலைமையிலிருந்தே நேரடியா தொகுதிகளுக்குப் பணம் போய்ச் சேர்ந்திடிச்சி. அதோடு, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர்களில் யார் யார் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பாங்கன்னும், யார் யார் நடுநிலை வாக்காளர்கள்னும் தனியா ஒரு புக்கையும் தலைமை யிலிருந்தே அனுப்பியிருக்காங்க. ஜெ. படத்தை அட்டையில் போட்டு அச்சிடப்பட்டிருக்கிற அந்தப் புத்தகத்தில் உள்ள விவரங்களைப் பார்த்து, ஆளுங்கட்சிக்கு சாதகமான ஓட்டுகளுக்கும் நடுநிலை ஓட்டுகளுக்கும் பணப் பட்டுவாடா நடக்குது. தேனி தொகுதியில் இந்தப் புத்தகத்தை மீடியாக்கள்கிட்டே தி.மு.க வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கம் காட்டி, இப்படியெல்லாம் ஆளுங்கட்சிக்காரங்க செயல்படுறாங்கன்னு அம்பலப்படுத்தினாரு. ஆனாலும், அந்தப் புத்தகத்தில் உள்ளபடி பட்டுவாடா அனைத்து தொகுதிகளிலும் ஜரூரா நடக்குது.'' 


""தொகுதிக்கு சுமாரா எத்தனை பேருக்கு பணம் கொடுக்கப்படுதாம்?''

""சராசரியா 5 லட்சம் வாக்காளர்கள்ங்கிறது அ.தி.மு.கவோட டார்கெட். இதில் வாங்கியபடி ஓட்டு போடுறவங்களும் உண்டு. வாங்கிக்கிட்டு மாற்றி போடுறவங்களும் உண்டு. எப்படி இருந்தாலும் இந்தப் பட்டுவாடா மூலமா எதிர்க்கட்சி வாங்கும் ஓட்டுகளைவிட 50ஆயிரம் ஓட்டு ஆளுந்தரப்புக்கு கூடும்னு கணக்குப் போடப் பட்டிருக்குது. 200, 300, 500ன்னு நிலைமைக்குத் தகுந்தபடி பட்டுவாடா நடக்குறதால 40 தொகுதிகளுக்கும் கணக்குப் போட்டால் 1200சி.''

""இதைத்தானே நம்ம நக்கீரனோட மார்ச் 15-18 தேதியிட்ட இஷ்யூவில் கவர் ஸ்டோரியாகவே போட்டிருந்தாங்க.'' 

""அதிலே சொன்னபடிதாங்க தலைவரே இப்ப நடந்துக்கிட்டிருக்குது. எந்த தொகுதிக்குப் பணம் கொடுக்கப்படுதோ அந்த தொகுதி வேட்பாளர், மாவட்ட மந்திரி இரண்டு பேர்கிட்டேயும் நால்வர் அணி கையெழுத்து வாங்கிக்குது. ஆனா கொடுக்குற அமவுண்ட்டுல ஒரு சி, ஒன்றரை சி குறையுதுன்னு லோக்கல் நிர்வாகிகள் சொல்றாங்க. எண்ணிக்கை குறைஞ்சுதுன்னா எப்படி கீழே வரைக்கும் சரியா சப்ளையாகும்னு ஆளுந்தரப்புக்குள்ளேயே சந்தேகமும் இருக்குது. அதோடு, 200 ரூவாதான்னா, ரெண்டாயிரம் மூவாயிரம்னு சொன்னாங்களே, நீங்க அமுக்கிட்டீங்களான்னு பணம் கொடுக்கிற கட்சிக்காரங்ககிட்டேயே மக்கள் கேள்வி கேக்குறதால நோட்டெல்லாம் ஓட்டா மாறுமாங்கிற  டவுட் இருக்குதாம். இதையும் மீறி, பணத்தால் ஓட்டு கிடைக்கும்னு ஆளுந்தரப்பு உற்சாகக் கணக்குப்போட, இது ஓட்டாகுமா வேஸ்ட்டாகுமான்னு தெரியாம எதிர்க் கட்சிகளெல்லாம் அதிர்ச்சியடைந் திருக்குது.''

""தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சமீபத்தில் கொடுத்த பேட்டியிலே, வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதற்காக பறக்கும்படைகள், கண்காணிப்புப் படைகள் ஆகியவற் றைத் தொடர்ந்து 5ஆயிரத்து 360 மண்டல குழுக்கள் அமைக்கப்படும்னு சொல்லியிருந்தாரே, இதெல்லாம் எப்படி செயல்படுது?''

""அ.தி.மு.கவோட பணப் பட்டுவாடா பற்றி தி.மு.க வக்கீல்கள் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கிட்டே புகார் சொன்னப்ப, ஆதாரத்தோட சொல்லுங்க.. உங்காளுங்க கையிலும் செல்போன் இருக்குதுல்ல.. அதிலே போட்டோவோ வீடியோவோ எடுத்துக்கொடுங்க நடவடிக்கை எடுக்கிறேன்னு சீரியஸா சொல்லியிருக்காரு. ஆனா, கீழே உள்ள அதிகாரிங்க அந்தளவுக்கு வேலை பார்க்குறதில்லை. குழுவைத் தேர்தல் கமிஷன் அமைச்சாலும் அதிலே இருக்கிறவங்களெல்லாம் மாநில அரசு அதிகாரிகள்தானே, மதுரையிலே அ.தி.மு.க வேட்பாளர் பிரச்சாரம் முடிச்சிட்டுப் போனப்ப அவரோட வாகனத்துக்குப் பின்னாடி போன வாகனத்தை பறக்கும்படை நிறுத்தி சோதனை போட்டப்ப அதிலே 3சி இருந்திருக்குது. வண்டி டிரைவரோ முன்னாடி போய்க்கிட்டிருந்த வேட் பாளர் காருக்குத் தகவலைச் சொல்ல அங்கிருந்து உடனே மந்திரிக்குத் தகவல் போயிருக்குது. கொஞ்சநேரத்தில் பறக்கும்படையினருக்கு மாவட்ட கலெக்டர்கிட்டேயிருந்து போன் வர, பணத்தோடு வண்டியை அனுப்பி வச்சிட்டாங்க. இப்படித்தான் பறக்கும்படையோட ஆக்ஷன்கள் இருக்குது. ஞாயிற்றுக் கிழமையன்னைக்கு மதுரை கருமண்டபம் பகுதி யில் பணம் கொடுத்த ஆளுந்தரப்பினரை கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட மற்ற கட்சியினர் தடுத் திருக்காங்க. அதையும் மீறி பட்டுவாடா நடந்திருக்குது. உடனே எதிர்க்கட்சியினர் கிளம்பி கலெக்டரைப் பார்த்து புகார் கொடுக்க ரெடியாக, இதையறிஞ்ச கலெக்டரோ ரவுண்ட்ஸ் போகலாம்னு சொல்லி உதவியாளர்களை அழைச்சிக்கிட்டு வெளியே கிளம்பிட்டாராம்.''

""ஆளுங்கட்சியோட ஸ்பீடான கரன்சி பாசனத்தை  தேர்தல் கமிஷன் தடுத்து நிறுத்தாத நிலையிலே தி.மு.கவும் மற்ற கட்சிகளும் என்ன செய்யப்போகுதாம்?''

""தொகுதிவாரியா புக் போட்டு ஆளுந்தரப்பு பட்டுவாடா பண்ணுவதை விருதுநகர் தி.மு.க மா.செ. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தி ரன் கவனத்துக்கும் உ.பிக்கள் கொண்டுபோக, அவரும் அதை கலைஞர் வரைக் கும் எடுத்துச் சொல்லியிருக் காரு. அதே நேரத்தில், இது சம் பந்தமா கே.கே.எஸ்.எஸ். ஆர்.கிட்ட கட்சிக்காரங்க கேட்டப்ப, ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுத்தெல்லாம் மக்களோட ஓட்டுகளை பெருசா மாத்திட முடியாதுன் னும், இதைத் தடுக்க ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகளெல்லாம் எப்படி செயல்படுதுன்னு பார்க்கணும்னும் சொல்லி யிருக்காரு. தி.மு.கவைப் பொறுத்தவரை இந்த முறை கட்சி சார்பில் ஓட்டுக்குப் பணம் தர்றதில் லைங்கிற முடிவில் உறுதியா இருக்காங்க. ஆனா பணபலம் உள்ள தி.மு.க வேட்பாளர்கள் பணம் கொடுக்கலாம்ங்கிறதால அவங் களை உன்னிப்பா கவனிக்கச் சொல்லி உளவுத்துறைக்கு மேலிட உத்தரவாம். தி.மு.க வேட்பாளர்களை பணம் கொடுக்க விடாமல் ப்ளாக் பண்ணுவது, இல்லைன்னா அவங்க கொடுப்பதை விட அ.தி.மு.க தரப்பில் கூடுதலா பணம் கொடுப்பதுன்னு வியூகம் வகுக்கப்பட்டிருக்குது. ஆனா பணக்காரத் தி.மு.க வேட்பாளர்கள்கூட ஓட்டுக்குப் பணத்தை எடுப்பதில்லைங்கிற முடிவில் இருக்காங்க.''

""தேர்தல் வேலை செய்கிற கட்சிக்காரங்களுக்கு?''


""அவங்களுக்கு பூத் செலவுக்குன்னு தி.மு.க தரப்பில் ஓரளவு செலவு செய்யப்படுது. ஆனா, அ.தி.முக. தரப்பில் தேர்தல் வேலை செய்யிற கட்சிக்காரங்களுக்கு பணம் வரலையாம். இது சம்பந்தமா மேலிடத்துக்குப் புகார் மேல புகார் போக, இப்ப அவங்களுக்கும் தலைக்கு 200, 300 கொடுக்கச் சொல்லி ஆர்டராம். பா.ஜ.க கூட்டணியிலும் தேர்தல் செலவுக்கான பணம் சம்பந்தமா புலம்பல்கள் இருப்பதை பற்றி போன முறை நாம பேசியிருந்தோம். அந்த செய்தி நம்ம நக்கீரனில் வந்தபிறகு எஃபெக்ட் தெரிய ஆரம்பிச்சிருக்குதுங்க தலைவரே..''

""கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிக்கு 2சி தர்றதா சொன்ன பா.ஜ.க அதற்கப் புறம் 1சி, 50எல், 25எல்னு குறைச்சி கடைசியா எதுவும் வந்தபாடில் லைன்னு கட்சிகள் புலம்புவதைத் தானே பேசியிருந்தோம்.''

""ஆமாங்க தலைவரே.. அது நம்ம நக்கீரனில் வந்ததும், கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிக்கு 50எல் பணத்தை பா..ஜ.க மேலிடம் ஒதுக்கியிருக்குது. அதுவும் அந்தத் தொகுதியில் உள்ள பா.ஜ.க நிர்வாகிகிட்டேதான் கொடுக்கப்பட்டிருக்குது. அதில் 25 எல் பணத்தை எடுத்து கூட்டணிக் கட்சிகளின் பூத் செலவுக்குன்னு ஒதுக்கிட்டு, மீதி 25 எல் பணத்தை, தொகுதியில்  உள்ள எங்க பா.ஜ.க நிர்வாகிகளோட தேர்தல்  பணிக்கு வேணும்னு சொல்லி வச்சிக்கிறாங்களாம். இதுபற்றி, பா.ஜ.க தேர்தல் பொறுப் பாளர் மோகன்ராஜூலுகிட்டே கூட்டணிக் கட்சியினர் சொன் னப்ப, தமிழகத்தில் பெருசா எங்க பா.ஜ.க ஜெயிக்காதுன்னு மேலிடத்துக்குத் தெரியும். அதனாலதான் பெரியளவில் அமவுண்ட் ஒதுக்கலை. எங்க கட்சிக் காரங்களுக்கும் பணம் கொடுக்க ணும்ல. கவலைப் படாதீங்க. எப்படியும் மோடிதான் பிரதமரா வருவார். அப்ப உங்க தேவை களெல்லாம் நிறைவேறும்னு சொல்லி சமாளிக்கிறாராம். ஆனால், கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுற தொகுதிகளில் பா.ஜ.கவினர் அந்தந்த வேட்பாளர்கள் கிட்டேயும் பெரியளவில் எதிர்பார்க்கு றாங்களாம்.''

""இது வேறயா?''

""ஆமாங்க தலைவரே.. பெரம்பலூரில் போட்டியிடும் ஐ.ஜே.கே வேட்பாளர் பச்சமுத்துகிட்டே போய் லோக்கல் பா.ஜ.கவினர் 2சி கேட்டிருக்காங்க. அவர் அவ்வளவெல்லாம் முடியாதுன்னு 20 எல் கொடுத்தனுப்பியிருக்காரு.  வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகத்துக்கிட்டே 1சி கேட்க, அவர் மிரண்டு போய் 50 எல் கொடுத்திருக்காரு. பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன்கிட்டே 1சி கேட்க அவர் 25 எல் கொடுத்து சமாளிச் சிருக்காரு. நெல்லையிலும் திருச்சியிலும் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர்கள் கிட்டே செலவுக்குப் பணம் கொடுத்தாதான் வேலை செய்வோம்னு பா.ஜ.கவினர் சொல்ல, அவங்களை சமாதானப்படுத்த பேசிக்கிட்டே இருக்காங்க.'' 

""தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒவ் வொரு கட்சியும் ஒவ்வொரு பாட்டு போடுது. ஆனா எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய பாட்டு.. .. காசு, பணம், துட்டு, மணி, மணி''…

ad

ad