புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014






வெய்யிலான வெய்யில். செஞ்சியருகே உள்ள சத்திய மங்கலத்தை நாம் அடைந்தபோது சூரியன் உச்சிவானில் நின்று சுட்டெரித்தது. வியர்வை பெருகிய நிலையில் நாம், டூவீலர்களை ஓரம் கட்டிவிட்டு சர்வேயைத் தொடங்க... நம்மை கவனித்து அழைத்தார் கூழ் விற்கும் பெண்மணியான செண் பகம். "என்னக்கா' என்றபடி அருகே போன நம்மிடம்... ’""தம்பிகளா, சர்வே எடுக்கறீங்களா? வெய்யில் ஓவரா கொளுத்துது. இந்தாங்க. நல்ல குளிர்ந்த கூழா குடிங்க''’ என்றபடி ஆளுக்கு ஒரு கிளாஸ் குளிர்ந்த கேழ்வரக்குக் கூழை கொடுத்தார். ""எங்க ஏரியா முழுக்க குடிதண்ணிப் பிரச்சினை. நடையா நடந்து குடிதண்னீரைக் கொண்டு வர்றோம். அதனால் எங்களுக்கு தாகத்தின் கொடுமை தெரியும். அதனால்தான் மத்தவங்க தாகத்  தைத் தணிக்கும் கூழை விக்கிறேன். எங்க தண்ணி பிரச்சினையை எந்த அரசியல்வாதியும் தீர்த்து வைக்கலை''’என்றார் செண்பக அக்கா ஆதங்கமாய். 


சேவூர் வேதாச்சலம், மணி ஆகியோர் ""பட்டுக்குப் புகழ்பெற்றது ஆரணி. ஆனா இப்ப பட்டு நெசவுத் தொழில் நசிஞ்சிப்போச்சி. காரணம் இந்தம்மா ஆட்சியில் 8 மணி நேரத்துக்கும் அதிகமான  மின்வெட்டுதான். இதனால் பல குடும்பம், நெசவு தொழிலை விட்டுட்டு கூலி வேலைக்குப் போயிடிச்சி. அதனால இந்தமுறை ஓட்டை மாத்திப் போடப்போறோம்''’ என்றார்கள் காட்டமாய்.


செஞ்சி ராஜவேலோ ""நான் எந்தக் கட்சியும் இல்லைங்க. ஆனா ஆளும்கட்சிக்கு ஓட்டுப் போட்டாதான் அவங்களால் மக்களுக்கு நிறைய திட்டங்களைக் கொடுக்க முடியும். இது என் பாலிஸி''’என்கிறார் புன்னகையோடு.. 

விண்ணமங்கலம் சிறுத்தைத் தோழர்களான அறிவழகனும் பாஸ்கரும் ""சூரிய தரப்பில் நிற்கும் சிவானந்தம், வன்னியராவே நடந்துக்கறார். இருந்தாலும் நாங்க தி.மு.க.வுக்காகத்தான் சூரியனுக்குப் போடபோறோமே தவிர சிவானந் தத்துக்காக இல்லை. அவர் சரியா இருந் திருந்தா பல மடங்கு ஓட்டு விழும்ங்க''’ என்றார்கள் சலனமில்லாமல்.



டு குடுக்குறேன்.. மாடு குடுக்குறேன்னு சொல்லிட்டு 10 வீடுகளுக்கு மட்டும் குடுத்து ஏமாத்து றாங்க. இவங்களை நம்பி ஓட்டுப் போட்ட மத்தவங்க ளெல்லாம் இளிச்சவாயங்களா? –மதுராந்தகம் ஏரியாவில் பல கிராமங்களிலும் சர்வே படிவத்தை வாங்கிய வேகத்தில் மக்களிடமிருந்து வெளிப்பட்ட குமுறல் இதுதான். மிக்சி-கிரைண்டர்-ஃபேன் போன்ற வையும் சரியாக வரவில்லை என்ற புகார்களைப் பல இடங்களில் கேட்க முடிந்தது. செங்கல்பட்டில் சர்வே படிவத்தை வாங்கிய பலரும் அங்கு தொடர்ச்சியாக நடந்துவரும் கொலைகள் பற்றித்தான் அதிர்ச்சி யோடும் பயத்தோடும் பேசினார்கள்.


அ.தி.மு.க வேட்பாளரின் சொந்தத் தொகுதியான திருப்போரூரில் கட்சிக்காரர்களே அவருக்கு எதிராக இருப்பதைப் பார்க்க முடிந்தது. மக்கள் பிரச்சினைகளுக்காக களமிறங்கி பம்பரமாக சுற்றக்கூடிய ம.தி.மு.க வேட்பாளருக்கு இங்கு கூடுதல் செல்வாக்கு இருப்பதைக் காண முடிந்தது.

"மோடிதான் பிரதமரா வருவாராமே' என்று நம்மிடம் கேட்டபடியே தங்களுக்குப் பிடித்தமான அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு டிக் செய்த பலரை கிராமப்புறங்களிலும் காண முடிந்தது. காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தியை மாமல்லபுரம் ஏரியாவில் உள்ள மீனவ கிராமங்களிலும் தொகுதியின் உட்புறங்களிலும் உள்ள மக்கள் வெளிப்படையாக நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.

""யாரும் சரியா இல்லீங்க... ஏதோ ஆம் ஆத்மியாம், நோட்டாவாம். அதுபோல எதுக் காவது போடவேண்டியதுதான்'' என்கிறார்கள் தொடர்ச்சியாக வாக்களித்து சலிப்படைந்த சிலரும், புதிய வாக்காளர்களில் பலரும். அதேநேரத்தில், ஒவ்வொரு கட்சியும் தன்னுடைய வாக்குவங்கியை நிலைப்படுத்தி வைத்திருப்பதை காஞ்சிபுரம் தொகுதியில் காண முடிந்தது.

சூரியன் சற்று பிரகாசிக்க, அடுத்த இடத்தில் உள்ள இலைக்கு நெருக்கமாக சுற்றுகிறது பம்பரம். இறுதிக்கட்டப் பணிகளி னால் சின்னங்களின் தற்போதைய நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.


முப்பது சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட, இன்னும் ’பிரெஞ்ச் மணம்’ முற்றிலும் மாறாத புதுவையில்,  நாம் சர்வேவுக்காக வலம் வந்தபோது, பல்வேறு வித்தியாச அனுபவங்கள்  கிடைத்தன.

லாஸ்பேட்டை லைஃப் லைன் மருத்துவமனை அருகே இருந்த ஒரு வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினோம். கதவைத் திறந்து எட்டிப் பார்த்த வீட்டுப் பெண்மணி, நம் கையில் இருந்த ஃபைலைப் பார்த்துவிட்டு ""என்னங்க, அக்குவா பீனா கம்பெனியா? வேணாங்க''’என்றபடி நம் பதிலுக்குக் கூடக் காத்திராமல், கதவைப் படீரென அடைத்துவிட்டார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது கணவர், ""யார் நீங்க?'' என்றார். நாம் சர்வே பற்றி கூற... "அப்படியா?' என டிக் அடிக்க ரெடி யானார். இதை ஜன்னல் வழியாக கவனித்துக் கொண்டிருந்த அவரது 15 வயது மகள், ""டாடி உள்ளே வந்திடுங்க''’என பீதியோடு குரல் கொடுக்க... ’""பயப்படாதம்மா, இவங்க சர்வேவுக் காக வந்திருக்காங்க''’என்று மகளை சமாதானப் படுத்தினார் அப்பாக்காரர். பிறகு நம்மிடம் ‘""இங்க நிறைய கொலைகள் நடக்குது. ஏதாவது விசாரிக்கிற மாதிரி வந்து, வீட்டிலேயே போட்டுத் தள்ளிட்டுப் போயிடறானுங்க. அதனாலதான் பசங்க, புது ஆளுகளைக் கண்டா பயப் படுதுங்க’ என்று திகைக்கவைத்தார்.   

முத்தியாலுபேட்டை மணிகண்டன் ""என்ன சார் சர்வேவா? எங்களை யாருக்கு ஓட்டுப் போடச் சொல்றீங்க?''’என்றார்.


""நாங்க யாருக்கும் போடச் சொல்லலை. நீங்க யாருக்கு போடப்போறீங்கன்னு டிக் அடிங்க.''’ 

""எனக்குக் குழப்பமா இருக்கு. எங்களவிட பத்திரிகைக்காரரான உங்களுக்கு நிறைய விசயம் தெரிஞ்சிருக்கும். அதனால, நீங்களே சொல்லுங்க. யாருக்கு ஓட்டுப் போடலாம்?''’ என நம்மிடமே கேட்டு கிறுகிறுக்க வைத்தார். 

கதிர்காமம் கடைவீதியில் சர்வே எடுத்துக்கொண்டிருந்த தம்பிகளில் வினோத் என்பவரை திடீரெனக் காணவில்லை. அவரது செல்போனுக்கு அடித்தாலும் ரிங் டோன் மட்டுமே கேட்டது. திகைத்துப்போன நாம், அவரை பதட்டத்தோடு தேட ஆரம்பித்தோம். அப்போது ஒருவர் ‘""கொஞ்சம் தள்ளிப் போங்க. செல்போன் ரிப்பேர் கடையில் ஒரு பையனை உட்கார வச்சிருக்காங்க''’ என்றார். அங்கே விரைந்தோம்.  வினோத்தை ஒரு டீம் முற்றுகையிட்டு உட்கார வைத்திருந்தது. டீமோடு போன நம்மைப் பார்த்ததும் அவர்கள் ""பையன் யாருக்கு ஓட்டுன்னு எல்லோ ரையும் கேட்கிறார். இங்க ரவுடிப்பசங்க கத்தியும் கையுமா அலையறாங்க. அவனுங்க கண்ணில் பையன் பட்டிருந்தா ’யாருக்கு ஓட்டுக் கேட்கறேன்னு தாக்க ஆரம்பிச்சிடுவானுங்க. அதனாலதான் பாதுகாப்பா பையனை உட்கார வச்சிருந் தோம்''’ என்றபடி அவரை விடுவித்தனர். சற்று தள்ளிவந்த தும் ""அண்ணே இவங்கதான், யாருக்கு ஓட்டுக் கேட்கறேன்னு என்னை மிரட்டி உட்கார வச்சாங்க''’என்றார் பரிதாபமாக வினோத். சி.எம்.ரெங்கசாமி தொகுதியான கதிர்காமத்தி லேயே இப்படி அடாவடி கும்பல்களா என்று திகைத் தோம்.

காரைக்கால் செக்போஸ் டில் வழிமறித்த காக்கிகள் ""சர்வேவுக்குதான் அனுமதி இல்லையே''’ என்றனர். அனுமதி உண்டு என்பதை விளக்கினோம். 

""அப்ப பொதுஜனங் கள்ட்ட மட்டும்தான் சர்வே எடுப்பீங்களா? போலீஸ்கிட்ட எடுக்கமாட்டீங்களா?'' என்றனர். 

""எடுக்கலாம்... ஆனா ஒருத் தர் மட்டும் டிக் பண்ணுங்க. ஒரே இடத்தில் பல்க்கா எடுக்கமாட் டோம்''’என்றபடி, ஒருவரை டிக் அடிக்கச் செய்தோம். திருநள் ளாறு அரசு ஊழியர் குடியிருப் பில் ஒரு வீட்டின் கதவைத் தட்டினோம். வெளியேவந்த பெண்மணியிடம் சர்வே பற்றிச் சொல்லி, சீட்டைக் கொடுத் தோம். அவர் சீட்டோடு உள்ளே செல்ல, வெளியே காத்திருந் தோம். வெகுநேரம் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை.

பொறுமை இழந்து நாம் கதவைத்தட்ட... வெளியே வந்த பெண்மணி, "என்ன' என்றார். "சீட்டில் டிக் அடிச்சி நீங்க கொடுக்கலையே' என்றோம். அந்தப் பெண்மணியோ ""தேர்தல் அன்னைக்குதான் ஓட்டு பத்தி முடிவெடுப்போம். அதனால் தேர்தலுக்கு மறுநாள் வாங்க. இப்ப எதையும் டிக் அடிக்க முடியாது'' என்று ஒரே போடாகப் போட... ’"சீட்டை கொடுத்துடுங்க தாயே'’ என்று வாங்கிக் கொண்டோம். 

அபிஷேகப்பாக்கம் அருகே இருக்கும் நல்லவாடு எத்திராஜோ ""இந்தப் பகுதியைச் சேர்ந்த 15 பேரின் நிலத்தை 10 வருசத்துக்கு முன்பு, அரசாங்கம் எடுத்துக்கிச்சி.  அதற்கான இழப்பீட்டுத் தொகையா எனக்கு 2.55 லட்சம் வரவேண்டியிருக்கு. நம்ம சமுதாயத்துக்காரராச்சேன்னு சி.எம்.ரெங்கசாமிக் கிட்ட பலமுறை சொன்னேன். அதேபோல் மத்திய மந்திரி நாராயணசாமிக் கிட்டயும் சொன்னேன். எதுவும் நடக்கலை.  அதனால் ஓட்டே போடக்கூடாதுங்கிற முடிவுக்கு வந்துட்டேன்''’என்றார் விரக்தியாய். 

லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் சந்தித்த கோமதி மாமி ""பாண்டிச்சேரி இப்ப சுற்றுலா ஸ்பாட்டா ஆய்டுச்சோன்னோ. தெனம் தெனம் லட்சக்கணக்கானவா வர்ரா. ஆனா இங்க வர்ற வெளிப் பொம்மனாட்டிக அவசரத்துக்குனு, இங்க டாய்லட் வசதியை யாரும் ஏற்படுத்தலை. பலபேர் அவஸ்த்தைப்படறதைப் பாக்கறோம். சிலபேரை எங்க 

திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியின் ராயப்பேட்டையில் நடந்து வந்துகொண்டிருந்த ஒருவரிடம் சர்வே ஃபார்மை நீட்டி "எதுக்கு சார் ஓட்டுப் போடுவீங்க?' என்று நாம் கேட்டதுதான் தாமதம், ""அது வந்து... என் மனைவி சொல்றவங்களுக்குத்தான் நான் ஓட்டுப் போடுவேன்'' என்றார். இந்தியத் தொலைக் காட்சிகளிலேயே முதல்முறையாக என்பது போல, "என் மனைவியை கேட்டுத்தான் நான் யாருக்கு ஓட்டுப் போடணும்ங்கிறதை  டிசைட் பண்ணுவேன்'னு சொன்ன அவரது திரு முகத்தை மறுபடியும் ஒருமுறை பார்த்தோம். 

""மெட்ரோ ரயில் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள்லாம் அப்படியே மூடாம கிடக்குது சார். இதனால் வாக னங்கள்ல போறவங்களுக்கும், நடந்து போறவங்களுக்கும் ஒரே பேஜாராக்கிது''’டென்ஷன் ஆகிறார் துறைமுகத்தைச் சேர்ந்த ராஜசேகரன்.


""பஸ் கட்டணத்திலிருந்து பால் கட்டணம்வரை மக்களோட அத்தியாவசிய பொருட்களின் விலையை ஏத்திட்டு தி.மு.க. மேலேயும், மத்திய அரசு மேலேயும் பழிபோட்டு மக்களை ஏமாத்துறதே வேலையா போச்சு. அதேமாதிரி  தி.மு.க.வும் அ.தி. மு.க.வும் மாற்றி மாற்றி கொள்ளை அடிச்சுட்டு தேர்தல் நேரத்தில் ஒருத்தருக்கொருத்தர்  குற்றம் சுமத்திக்கிறாங்க.  அரசியல்வாதிகள்னாவே கோபமா வருது''’ஆதங்கப்படுகிறார் எழும்பூர் தொகுதியிலுள்ள கல்லூரி மாணவி ஸ்ரீதேவி.

சேத்துப்பட்டு, எழும்பூர், துறைமுகம் போன்ற பகுதிகளிலுள்ள ஸ்லம் ஏரியாக்களில் ""தயவு செஞ்சி எங்களை இந்த இடத்திலிருந்து காலிபண்ண வேணாம்னு சொல்லுங்க தம்பி'' என்று கண்கலங்குகிறார்கள்.

""மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை பறக்கும் சாலைத்திட்டம், எழும்பூர்-சென்ட்ரல் ரெயில் நிலையம் இணைப்பு கோரிக்கைன்னு நீண்ட காலமாக நிறைவேற்றப்படாம கிடக்கு''’’ என்று குறைபட்டுக்கொள்கிறார் முத்துரத்தினம்.

இப்படி மத்திய சென்னையில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பல இருக்கின்றன. இதையெல்லாம் வருகின்ற எம்.பி தீர்க்கவேண்டும் என்ற ஏக்கமும் நாம் சர்வே எடுக்கும்போது மக்கள் மத்தியில் வெளிப்பட்டது.



துறையூர் பகுதியிலிருந்து உப்பிலியா புரம் செல்லும் வரை பல கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு என்ற அறிவிப்பைத் தொடர்ச்சியாகக் காண முடிந்தது. 

""அடிப்படை வசதிகளே எங்க கிராமங்களில் கிடையாது. அரசியல்வாதிகளை விட இந்த அதிகாரிகளால்தான் நாங்க அதிக கஷ்டப்படுறோம். அவங்க எதையும் செய்ய முயற்சியே எடுக்கிறதில்லை'' என்று குமுறினார்கள் மக்கள். "திருச்சி கலெக்டரிடம் அடிப்படை வசதியான சாலை, குடிதண்ணீர் கேட்டு பல முறை புகார் கொடுத்தும் இதுவரை எதையும் செய்யவில்லை. அத னால்தான் தேர்தல்  புறக்கணிப்பு' என்று விளக்கம் கொடுத்தார் கிராமப் பெரியவர் ஒருவர்.

எந்த ஆட்சி அமைந் தாலும் தங்களுக்கானத் தேவைகளை யாரும் நிறைவேற்றுவதில்லை என்ற அதிருப்தியை பல இடங்களிலும் பார்க்க முடிந்தது. தேர்தல் புறக் கணிப்பு என்ற ஆயுதத் தைக் கையில் எடுத்தால் ஓரளவேனும் தங்கள் பக்கம் கவனம் திரும்பும் என்ற எண்ணம் இந்த கிராமத்து மக்களிடம் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதற்கேற்ப அதிகாரிகளும் வேட்பாளர்களும் இவர்களை தாஜா செய்வதையும் காண முடிந்தது.

நீண்டகாலமாக ஒரே கட்சிக்கு வாக் களித்து வருபவர்கள்கூட, சொந்த அதிருப்தி மற்றும் சாதிப்பாசம் இவற்றால் இந்த முறை மாற்றுக்கட்சிக்கு வாக்களிக்கும் மனநிலையில் இருப்பதை பெரம்பலூர் தொகுதி யின் பல இடங்களிலும் பார்த்தோம். நோட்டா பற்றியும் பேசுகிறார்கள்.


ஒரு பெரியவர் நம்மிடம்,  ""இதுநாள் வரைக்கும் நான் அ.தி.மு.க.வை தவிர வேற கட்சிக்கு ஓட்டு போட்டதில்லை. இந்த  முறை அ.தி.மு.க. அரசாங்கம் வந்ததிலிருந்து எந்த அடிப்படை வசதியையும் செய்து கொடுக்க வில்லை. அதுக் காக வேற கட்சிக்கு என் னோட ஓட்டை போட முடியாது. அதனால "நோட் டா'வை பயன் படுத்தலாம்னு இருக்கேன்'' என்றார்.

லால்குடி பகுதியில் கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த ஒருவர், ""நாங்க உடையார் கம்யூனிட்டி. பி.ஜே.பி. எங்களுக்கு எதிரானதுன்னு எல்லோருக்கும் தெரியும். ஆனா எங்க சமுதாயத்தைச் சேர்ந்த பச்சமுத்து இங்கே பி.ஜே.பி. கூட்டணி       யிலே தாமரை சின்னத்துல நிக்கிறாரு. எங்க ஜாதி ஆள் என்பதற்காக இந்தமுறை மனசை தேத்திக்கிட்டு, பி.ஜே.பி.க்குப்  போடப் போறோம்'' என்றார் வெளிப்படை யாகவே.

பெரம்பலூரில் தி.மு.க. ஆட்சியில் அரசாங்க வேலைகிடைத்து, சம்பாதித்து, ரிட்டையர்டும் ஆகி விட்ட தி.மு.க. விசுவாசி ஒருவர், ""இந்த ஒருமுறை மட்டும் எங்க ஜாதிக்காக தாமரைக்கு ஓட்டுப் போடலாம்னு இருக் கேன்'' என்றார் வெகு இயல்பாக.

முசிறி பகுதியில் உள்ள குடும்பத்தலைவி ஒருவர்... ""இந்த ஓட்டு போடுவதால எதுவும் மாறிவிடப் போவது இல்லை. அரசியல்வாதிங்க தான் மாறிக்கிட்டிருக்காங்க. போனமுறை முரசு சின்னத்துக்கு ஓட்டுக்கேட்டு வந்த பசங்க இந்த தடவை பச்சமுத்துக்காகப் பணம் தர்றோம்னு சொல்றாங்க. இவங்களை எப்படி நம்புறது? யார் மேலேயும் நம்பிக்கையில்ல. ஆனா, வழக்கம்போல இலைக் குத்தான் ஓட்டு'' என்றார்.

குளித்தலை பகுதியில் நாம் சர்வே எடுத்த இடத்தில், ஊர் பெரியவர் ஒருவர் நம்மிடம் விவரம் கேட்டுவிட்டு ""நீங்க இங்கே யாருக்கிட்டயும் எதுவும் கேட்க வேணாம். கண்ண மூடிக் கிட்டு இங்கே எல்லாமே தி.மு.க.வுக்குத்தான் ஓட்டு போடுவோம்'' என்றார்.
பெரம்பலூரில் ஆ.ராசா எம்.பியாகவும் மத்திய அமைச்சராகவும் இருந்தபோது அதிக பலனடைந்த உடையார் சமுதாயத்தினர் இந்தமுறை தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த பச்சமுத்து தாமரை சின்னத்தில் நிற்பதால், அமைதியாகிவிட்டனர். கே.என். நேருவின் சொந்தவூரான லால்குடி தொகுதியிலும் தேக்கம்தான். அப்படியிருந்தும் ஆளுங்கட்சி மீதான அதிருப்தி பெரம்பலூர் எம்.பி. தொகுதியில் தி.மு.க.வுக்கு கை கொடுக்கிறது.

உதயசூரியனின் வெளிச்சக்கதிர்கள் இத் தொகுதியில் எட் டிப் பார்க்கின் றன. மோடி இமேஜ் + தாமரை சின்னம் + சாதி செல்வாக்கு + பணபலம் இவற் றால் தொகுதி முழுவதும் பிரபல மாகியிருக்கும் பச்சமுத்து, உதயசூரியனைப் பின்தொடர... அவருக்கு சற்று பின்னால் ஆளும் அ.தி.மு.க. இருப்பதைக் காண முடிந்தது. கடைசி நேர வேலைகள் என்னென்ன மாற்றங்களை செய்யுமோ!



விலை உயர்வு, வேலை வாய்ப்பின்மை, குடிநீர், மின்சாரத் தட்டுப்பாடு ஆகியவற்றால் அடித்தளம் மற்றும் நடுத்தர மக்களிடம் ஆளும் கட்சி மீது வெறுப்பு பரவியுள்ளது. மதுக்கடைகளால் குடும்பம் சீரழிவதாக பல இடங்களிலும் பெண்கள் குறையாகச் சொல்கிறார்கள். 

வாகைக்குளத்தின் மாரியம்மாள், ""புள்ளைக படிக்க நோட்டும் மூணு உருப்படி சட்டைத்துணியும் தாராக. இப்ப இருக்குற விலைவாசியில புள்ளைங்களுக்குச் செலவு பண்ணமுடியுமா? ஏதோ தர்றாக''’என்றார். 

வடக்கு வாகைக்குளம் விவசாயியான பெரியவர் மாடசாமியோ, ""கலைஞர் ஆட்சியில என் விவசாயக் கடன் ஒண்ணேமுக்கால் லட்சத்தைத் தள்ளுபடி பண்ணாக. இந்தம்மா குடுக்க மிக்சி, கிரைண்டருக்கு கரண்ட்டே இல்லையேய்யா''’என்று விசனப்பட்டார். 

பசும்பொன்னில் ஜெயலலிதா தங்கக்கவசம் சாத்தியது தாழ்த்தப்பட்ட மக்களிடம் பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. வறட்சி நிவாரணத்தைக்கூட வழங்காமல் ஆளும் கட்சிக்காரர்கள், அதிகாரிகள் சுருட்டிக்கொண்டதாக விவசாயிகள் கோபப்பட்டனர். 

பாளை உலகநாதனோ, ""நான் அ.தி.மு.க. அனுதாபிதான். சமீபமா அந்தம்மா சொல்றதச் செய்யுறது கெடையாது. பா.ஜ.க.வைத்தான் சப்போட் பண்ணும். இதனால காங்கிரசுக்குதான் என்னோட ஓட்டு''’என்று உறுதியாகச் சொல்கிறார். வேலையின்மை, ஊழல் போன்றவற்றால் முதல் வாக்காளர்களிடம் வெறுப்பு காணப்படுகிறது. அவர்களின் வாக்கு சதவீதம் குறையலாம். 

""ஓட்டுக்காக அரசியல் கட்சிகள் வாக்குறுதியா குடுக்காங்க. ஆனா லட்சக்கணக்குல செலவழிச்சுப் படிச்ச எங்களுக்கு வேலை தாரதுக்கு அவங்ககிட்ட எந்த கொள்கையும் இல்லை. இந்தத் தேர்தலே வேஸ்ட்''’என உதட்டைப் பிதுக்குகிறார், கொக்கிரகுளம் பொறியியல் கல்லூரி மாணவர் குற்றாலநாதன். 

""நாப்பது கோடி மக்களுக்காக எழுதின அரசியலைப்பு இப்பவும் செல்லுமா? இப்பவுள்ள ஜனத்துக்கு ஏத்தாப்ல மாத்தி எழுதணும்; ஒருத்தர் ரெண்டு முறைக்கு மேல பதவிக்கு வராதபடி தடுக்கணும்'' என்கிறார் ஆலங்குளம் கீழப்பாவூரைச் சேர்ந்த தனசேகர். கடலோரக் கிராமங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு கணிசமான ஆதரவைக் காணமுடிகிறது!

திடீர் நகரில் நமது டீம் சர்வே எடுத்துக்கொண்டிருந்தபோது திடீர் பரபரப்பு. துப்புரவுத் தொழிலாளியான முத்துராக்கு என்ற பெண்மணி, ""ஏப்பா... மொதல்ல 5000 தருவாங்கன்னு சொன்னாங்க. அப்புறம் 2000, 1000, 500ன்னு கொறைச்சிக்கிட்டே வந்து இப்ப 200 ரூபாய் தரப்போறதா சொல்றாங்களே.. சொன்னது எதையும்தான் ஆட்சிக்கு வந்து செய்யலை. இதையாவது கொடுக்கச் சொல்லுங்கப்பா. இல்லைன்னா, இந்த வயசிலும் வேனில் ஊர் ஊரா சுத்துறாரே அவருக்குத்தான் ஓட்டுப் போடுவோம். இவிக ஏதோ பறந்து வந்தாகளாம். எப்ப வந்தாக, எப்ப போனாகன்னே தெரியல'' என்றபடி சர்வே படிவத்தில் டிக் செய்தார்.

மதுரை வடக்கு தொகுதியில் பத்துநோன்பு சாவடியிலுள்ள மாரியம்மன் கோயிலருகே இட்லி கடை போட்டிருந்த பாக்கியம் என்பவரிடம் நாம் கருத்து கேட்டுக்கொண்டிருந்தபோது, தேர்தல் அதிகாரியான தாசில்தார் வடமாநில போலீசாருடன் வந்து சுற்றிவளைத்து, விசாரிக்க ஆரம்பித்துவிட்டார். சர்வே எடுக்க அனுமதி இருக்கா என்றெல்லாம் குடைச்சல் கொடுக்க, ஐடி கார்டை காட்டியதும் அந்த டீம் கிளம்பியது. அப்போது பாக்கியம், ""க்கும்... இவிங்களைப் பிடிங்க. ராத்திரியில கதவைத் தட்டி 200 ரூவா குடுக்குறவிங்கள கண்டுக்காதீக'' என்று சத்தமாகவே சொன்னார்.

கரிமேடு பகுதியில் தி.மு.க. பிரமுகர் ஒருவர் குரலை உயர்த்த, ஐந்தாறு பேர் நம்மை சுற்றி வளைத்தனர். கடைசியில், ""உண்மை யிலேயே சர்வேதாம்ப்ப எடுக்குறாய்ங்க. சென்சஸ் கணக்கு கேட்குற மாதிரி ஓட்டுக்கு நோட்டு கொடுக்கிற பார்ட்டியோன்னு நினைச்சிட்டோம்'' என்றனர். வெளிச்ச நத்தத்தில் ருக்மணி என்ற பெண், "இந்த வேகாத வெயிலிலே வந்திருக்கீங்க' என்றபடி மோர் கொடுத்து உபசரித்தார்.

தி.மு.கவுக்கும் அ.தி. மு.கவுக்கும் நூலிழை வித்தியாசம்தான். தே.மு.தி.க அவர்களை சற்றுதொலைவில் பின் தொடர, காங்கிரசும் மார்க்சிஸ்ட்டும் தங்களுக்கான வாக்குகளை மட்டும் அறுவடை செய் கின்றன.           



ரோடு கிழக்கு, பி.பெ.அக்ரகாரத்தில் சர்வேக்கு சென்ற நம்மை சந்தேகக் கண்ணோடு நோக்கிய ஒரு முஸ்லிம் இளம்பெண், ""உங்களைப் பார்த்தால் கல்லூரிக்காக கருத்துக் கணிப்பு எடுக்க வந்த மாணவர்களாகத் தெரியலை. நீங்க உண்மையைச் சொன்னால் நானும் என் கருத்தை உண்மையாகச் சொல்வேன்'' என்றார்.

"நாங்க நக்கீரன் டீம் சிஸ்டர்' என்றதும் ""முதல்ல வீட்டுக்குள்ள வாங்க, உட்காருங்க. தண்ணி குடிங்க... சும்மா குடிங்க, சுத்தமான தண்ணிதான்'' -உடன்பிறந்த சகோதரியாய் அவர் உபசரித்தது எங்களை நெகிழ வைத்தது.

சென்னிமலை மேலப்பாளையத்தில், வீட்டுமுன் அமர்ந்திருந்த அந்த குடும்பத்தின் தலைவியிடம் நம்மை நாம் அறிமுகப்படுத்திக்கொண்டிருந்த போது, டூவீலரில் வந்து வாசலில் இறங்கிய கணவர், கோபக்குரலில்... ""ஏண்டி, யாருடி இவங்க? இவங்ககூட உனக்கு என்னடி பேச்சு?'' அதிகாரத் தோரணையோடு மனைவியை அதட்டினார். ""ஒங்களுக்கு இதே பொழைப்பு'' எரிச்சலோடு எழுந்து உள்ளே சென்றார் அந்தக் குடும்பத் தலைவி.


சிவகிரிக்குள் நுழைந்த நம் டூவீலரை ஓவர்டேக் எடுத்து வழி மறித்தார் ஒரு இளைஞர். ஊருக்குள்ள சொன்னாங்க. பொய் சொல்லாதீங்க. நீங்க நக்கீரன்தானே? எப்பவும் போல இந்தத் தடவையும் சர்வே சரியா இருக்கட்டும்ங்க'' வாழ்த்திவிட்டுத் திரும்பிச் சென்றார்.

 தாராபுரம், உடுமலைப் பேட்டை சாலையை ஒட்டிய ஒரு கிராமத்தில் நாம் சர்வே எடுத்துக்கொண்டிருந்தபோது, மூன்றாவது வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த 50 வயதுக்காரர் கோபத்தோடு நம்மை நெருங்கினார். ""இன்னக்கிக் கட்டாயம் வருவீங்கன்னு தெரியும். என் சம்சாரமும் மகனும் பனியன் கம்பெனிக்கு போயிட்டாங்க. நான் லீவு போட்டுட்டு உங்களுக்காக உட்கார்ந் திருக்கேன். எங்க வீட்ல 4 ஓட்டு. பணத்தை கொடுத்துட்டு சத்தியத்தை வாங்கிட்டுப் போங்க. நாங்க சொன்ன சொல் தவறமாட்டோம்'' அவசரப்படுத் தினார் அந்த மனிதர்.

நாங்கள் ஓட்டுக்குப் பணம் கொடுக்க வந்தவர்கள் இல்லை. சர்வே எடுக்க வந்தவர்கள் என்பதை அவருக்கு புரிய வைப்பதற்குள் போதும்  போதும் என்றாகிவிட்டது.


நேரடிக் கள அனுபவத்தின்போது சில இடங்களில் வாக்காளர்களின் அதிருப்திக்கு நாம் ஆளானாலும் பல இடங்களில் பாமரர் களும் படித்தவர்களும் ஒத்துழைப்பு கொடுத்து ஆர்வமாக சர்வே ஷீட்டை வாங்கி பார்த்து டிக் அடித்துக் கொடுத்தனர். அவரவர் மனதிலும் ஒரு முடிவு இருப்பதையும், அவற்றுடன் சாதி பாசம், ஓட்டுக்கான ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் கலந் திருப்பதையும் காண முடிந்தது. 

நரிக்குடி கிராமம் கடந்த தேர்தல்வரை தி.மு.க.வின் கோட்டை. ஆனால், இந்தமுறை ""நாங்க எல்லாரும் சூரிய கட்சிதான். ஆனா, கலை ஞர் நிக்கல. (அதாவது இந்த தொகுதியில் தி.மு.க. நிற் காததை அப்படிச் சொல் கிறார்கள்) அத னால எங்க சாதி யை பலப்படுத்த இந்தமுறை ஒட்டுமொத்தமா நாங்க அனை வரும் மாம் பழத்துக்கே ஓட்டுப் போ டப்போறோம்'' என்றார்கள். இதே பேச்சு கொள்ளிடம், ஆச்சாள்புரம், கொண்டல், மாதானம் உள்ளிட்ட பெரும்பாலான கிராமங் களில் ஒலித்தது.

தலித் சமூகத்தவரான கபிஸ்தலம் ஜெய ராமனோ, ""எந்த கட்சியும் மனுஷன மனுஷனா மதிக்கிறதில்ல.. எங்கள சரிசமமா கூட்டணியில் உக்கார வச்ச கட்சிக்குத்தான் என்னோட ஓட்டு. என் குடும்ப ஓட்டும் அந்தக் கூட்டணிக்குத்தான்'' என்றார் உறுதியான குரலில்.    கருப்பூர் என்ற இடத்தில் மீன்வியாபாரி ஆறு முகத்தை சந்தித் தோம்.

""எம்.ஜி.ஆர். இருந்த வரைக்கும் அ.தி.மு.க. ஏழைகள் கட்சியா இருந்துச்சு. இப்ப பணக்காரங்க மலிஞ்சிட்டாங்க. அதனால இந்த தேர்தல்லே மாத்திப்போட லாம்னு நினைக்கிறேன்'' என்றபடி சர்வே படிவத்தை வாங்கினார்.


சருக்கை பொன்னுசாமியின் இலக்கு வேறு மாதிரியாக இருந்தது. ""இன்னைக்கு மோடி அலை வீசுறதா சொல்றாங்க. மோடி பிரதம ரானால் நாங்கள்லாம் எங்க தாத்தா காலத்துல இருந்த கொத்தடிமை மாதிரி போக வேண்டிய நிலைமையாயிடும். அந்த நிலைமை வரக் கூடாது. அதுக்காகவே எந்த கட்சியையும் சாராத நாங்கள்லாம் பிரச்சாரம் செய்கிறோம்'' என்றார்.

ஆண்களின் அரசியல் பார்வைக்கும் பெண்களின் பார்வைக்குமான வேறுபாடு பல இடங்களில் நன்றாகத் தெரிந்தது. நேரடியாகப் பாதிக்கும் அம்சங்கள் மீது கடுங் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள் பெண்கள். பாபநாசம் தேவராயன்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த நம்மிடம் பேசிய பெண்கள், ""தெரு வுக்குள்ளயே கொண்டுவந்து டாஸ்மாக்கை வச்சு எங்க குடியை சீரழிக்கிறாங்க. புள்ள குட்டிங்க படிக்க போக முடியல. யார் அத அப்புறப்படுத்தறாங்களோ, அவங்களுக்கு தான் ஓட்டு. இல்லாட்டி இந்த முறை மொத்த ஊரும் நோட்டாவுக் குத்தான். எத்தனை நோட்டை கட்சிக்காரங்க நீட்டினாலும் இதுதான் எங்க பதில் என்றனர் அழுத்தகமாக.

பொறையாரில்  கலா என்பவர், ""எங்கே எங்க சின்னமே காணும். இரட்டை இலையை மட்டும் பெரிசா போட்டிருக்கீங்க. எங்க சின்னம் இல்லை'' என்றபடி சீட்டை திருப்பி கொடுத்தார். நாம் அவரிடம் தி.மு.க. கூட்டணியில ம.ம.க. இருக்கு. அவங்க சின்னம் மெழுகுவர்த்தி என்றோம். அதன் பிறகே, அவர் புரிந்து கொண்டு பூர்த்திசெய்து கொடுத்தார். இதேநிலை தொகுதியில் பெரும்பாலான கிராமங்களில் காண முடிந்தது. இதேபோல், வேட்பாளர் யாரா இருந்தாலும் எங்க ஓட்டு இலைக்குத்தான் என்றவர்களும் அதிகம்.

பொறையாரில் மளிகைக்கடை நடத்தும் ஷாஜஹானோ ""ஜமாத்துலெல்லாம் கூப்பிட்டு பேசியிருக்கோம். அ.தி.மு.க. ஜெயித்தாலும், மோடி ஜெயித்தாலும் ஒண்ணுதான். எங்க உரிமை பறிபோகிற அபாயம் இருக்கு. அதனால வீடு வீடா ம.ம.க.விற்கு ஓட்டு சேகரிக்கிறோம்'' என்றார்.

களத்தை ஆய்வு செய்ததில் தி.மு.க. கூட்டணியில் உள்ள ம.ம.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. தி.மு.க. இங்கு நேரடியாகக் களமிறங்காததால் வன்னியர் சமுதாயத்து தி.மு.க.வினர் சீசனுக்கேற்றபடி மாம்பழத்தை விரும்புகிறார்கள். அத்துடன், ம.ம.க.வின் சின்னமும் சரியாகப் போய் மக்கள் மனதில் பதியவில்லை. இதனால் மெழுகுவத்தியைவிட சற்று முன்னேறிச் செல்கிறது இரட்டை இலை.


டைத்தேர்தல் கண்ட ஏற்காடு பகுதியில், பழைய விளம்பரத்தில் சின்ன மாற்றம் மட்டுமே செய்திருந்த கட்சிகளைக் கண்டு வியந்தோம். அங்கே இடைத் தேர்தல் வேட்பாளரான சரோஜா பெயரை மட்டும் அடித்துவிட்டு, காமராஜ் பெயரை இலைத்தரப்பு எழுத, சூரியத் தரப்பும் அப்போது நின்ற தி.மு.க. மாறன் பெயரை, மணிமாறன் என்று திருத்தி விளம்பர செலவில் மிச்சம் பிடித்திருந்தன.

தியாகதுருகத்தில் சர்வே  பேப்பருடன் சென்ற நம் டீமைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கள் நால்வரை, தி.மு.க. பிரமுகர் கனி, மடக்கி ‘"என்ன, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க, இலைத் தரப்புக்காக லிஸ்ட் எடுக்கறீங் களா?'’என உட்கார வைத்துவிட்டார். வேறு பகுதியில் சர்வேயில் இருந்த நமக்குத் தகவல் வர...  நாம், விபரத்தைச் சொல்லி அவர்களை மீட்கும்படியானது. 

ரிஷிவந்தியம் தொகுதி பகண்டை கூட் ரோட்டில், பஸ்ஸுக்காகக் குடும்பத்தோடு காத்திருந்த கலைவாணி ""எங்க வீட்டில 10 ஓட்டு. எல்லாத்தையும் போனமுறை அந்த அம்மாவுக்குதான் போட்டோம். போட்ட பலன், வேலைவெட்டி கிடைக்கலை. தண்ணியில்லாம விவசாயமும் பண்ணமுடியலை. அதனால் வீடு மனையை விட்டுட்டு, பொழைக்க பெங்களூருக்கு  மூட்டை முடிச்சை கட்டிட்டோம்''’என்றார் கலக்கமாய்.

ஏற்காடு தம்பதிகளான அர்ச்சுனனும் சாந்தியும் ""இடைத்தேர்தல்ல ஏரியாவே களைகட்டுச்சி. மந்திரிமாரெல்லாம் டீ கடையிலும் வீட்டுத் திண்ணையிலும் உட்கார்ந்திருந்தாங்க. பொட்டிக்கடைகள்ல கூட ஆயிரம் ஐநூறாப் பொழங்குச்சு. எங்க பார்த்தாலும் பிரியாணி போட்டாங்க. இப்ப ஒண்ணையும் காணோம். எல்லாம் கனவு மாதிரி இருக்கு. இப்ப தேர்தலே சூடுபிடிக்காத மாதிரி இருக்கு. ஆனாலும் பணம் கொடுப்பாகன்னு எல்லோரும் எதிர்பார்க்கறாங்க''’ என்றார்கள் சுரத்தில்லாமல். 

காமக்காபாளையம் சித்திரை யோ ""என்ன சார் அக்குறும்பா இருக்கு. இங்க தண்ணிப் பிரச் சினைய வச்சி ஆளும்கட்சிக்காரங்க எங்களுக்கு விளையாட்டு காட்ட றாங்க. ஊராட்சியில் தண்ணிவிடற நேரத்தில் எல்லாப் பொம்பளைகளும் தண்ணிப்பிடிக்கப் போய்டுவாங்க அதனால், மத்த கட்சிக்காரங்க பிரச்சாரத்துக்கு வரும்போது தண்ணியை தொறந்துவிட்டுர்றாங்க. அப்ப கூட்டமே இருக்காது. அதேசமயம் ஆளும் கட்சிக்காரங்க பிரச்சாரத்துக்கு வரும்போது, விடற தண்ணியையும் நிறுத்திவச்சிடு றாங்க''’என்று கிறுகிறுக்க வைத் தார். 

-சிவசுப்ரமணியன், எஸ்.பி.சேகர் &  சர்வே டீம்


""எம்.ஜி.ஆர். சின்னங்க இரட்டை இலை. அதை யார் வைத்திருந்தாலும் அந்த இலைக் குத்தான் போடுவோமே தவிர மாற்றுக் கட்சிகளுக்கெல்லாம்  போடமாட்டோம்'' என்றார் மீனாட்சிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த மருதமுத்து.

""அம்மா ஆடு கொடுத் தாங்க, மாடு கொடுத்தாங்க, ஆனால் அதுக மேயறதுக்கு புல்லு கிடைக்காததால பட்டினியில் வாடுதுங்க'' என்றார் செட்டிநாயக் கன்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ்.

குரும்பப்பட்டியைச் சேர்ந்த மாரிக்கண்மணியோ, ""பிள்ளைக்குப் பால் வாங்கக்கூட தினசரி ஐம்பது, நூறு ரூபாய் வேண்டியதிருக்குங்க. அந்த அளவுக்கு விலைவாசி ஏறிப்போச்சு. வரக்கூடிய ஆட்சியில யாவது விலைவாசி குறையணும்ங்க'' என்றவாறே டிக்கடித்துக் கொடுத்தார். ""நீங்க யாருக்கு ஓட்டுப் போடுவம்னு சொல்லுங்க. அதுக்கப்புறம் நாங்க யாருக்கு போடுவோம்னு சொல்லுறோம்'' என்றனர் மன்னார் கோட்டையைச் சேர்ந்த மக்கள் சிலர்.

""முழுக்கால் சட்டை போட்டவங்கதான் பணம் கொடுக்க வரு வாங்க என்று சொன்னாங்க. அதனால நீங்க ஏது பணம் கொடுக்க வந் தீங்களானு பார்த்தேன்'' என்றார் மகளுடன் பழைய சோறு சாப்பிட் டுக்கொண்டிருந்த தெப்பக்குளத்துப்பட்டியைச் சேர்ந்த குப்பம்மாள்.

முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராதாவோ, எங்க ஊரச் சுத்தி இருக்கிற ஊர்களுக்கெல்லாம் கிரைண்டர், மிக்சி, ஃபேன் எல்லாம் கொடுத்துட்டாங்க. எங்க ஊருக்கு மட்டும் கொடுக்கலைங்க. கேட்கப் போனா பெரிய ஊருக்கு அப்புறம்தான் தருவோம்னு பொறுப்பில் லாம பேசுறாங்க. அதனால பெரிய ஊர்ல இருக்கிறவங்க ஓட்டெல் லாம் வேணானு நினைச்சிட்டாங்க போலிருக்கு. அதனால நாங்க விருப்பப்பட்ட கட்சிக்குத்தான் ஓட்டுப்போட இருக்கிறோம்'' என்றார்.

""நீங்க கேட்கிறீங்கன்னு நான் ஓட்டுப் போட்டுட்டு அந்தக் குடிகார மனுசன்கிட்ட இந்த கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டேன்னு சொன்னேன்னா அதுக்கு நாலு சாத்து சாத்துவான். எதுக்கு சாமி இந்த வம்பு'' என்றார் கன்னிவாடியைச் சேர்ந்த ராஜாத்தியம்மாள்.

"துணி துவைக்கற அக்கா ரெண்டெ நிமிஷம்க்கா... ஒரேயொரு கேள்வி... அவ்வளவுதான்க்கா.'

""அய்யோ கேள்வியெல்லாம் கேட்டா எனக்குப் பதில்சொல்லத் தெரியாது.''

"அக்கா, ஸ்கூல்ல மாஸ்டர் கேக்கிற மாதிரி கேள்வியில்லை. நீங்களே உங்களைப் பார்த்து கேட்டுக்கிற கேள்விதான். யாருக்கு ஓட்டுப் போட்டா நாம நல்லா இருப்போம்னு நீங்க நினைச்சுக்கிட்டு இருப்பீங்கள்ல? அதை மட்டும் சொல்லுங்க.'

""இந்தத் துணியில இருக்கிற அழுக்க எடுக்கிற மாதிரி ஈஸியா இங்கே எங்க ஊர்ல இருக்கிற அசிங்கங்களை எடுத்துப் போடறதுக்கு யாருமே இல்லை கண்ணு. அதனால யார் நமக்கு நல்லது செய்வாங்கன்னு நான் நினைக்கிறதும் இல்ல. வீட்டுக்காரரை ஏதோ ஒரு கட்சிக்காரங்க ஃபுல்லா கவனிச்சுவிடுவாங்க. நல்லா கவனிக்கிற கட்சிக்காரனுக்கு ஓட்டுப் போடுன்னு எனக்கு உத்தரவு போடுவாரு கண்ணு. அந்த உத்தரவுக்குத்தான் என் ஓட்டு'' என துணியை கும்மத் தொடங்கிவிட்டார் கவுண்டம்பாளையம் தொகுதிக்குள் வரும் கீரணத்தம் பகுதி ரத்தினம்மாள்.

""யார்பா நீங்க? அதென்ன நோட்டீஸ்?'' என நம் டீமிலிருந்தவரின் கைகளில் இருந்த சர்வே பேப்பர்களைப் பிடுங்கிய, சூலூர் தொகுதியில் ரோந்துப் பணியில் இருந்த எஸ்.ஐ.யிடம் நாம் யார் எனச் சொன்னோம். வழிந்தபடியே சர்வே பேப்பர்களைத் திரும்பக் கொடுத்தவரிடம், "சார்... உங்க ஓட்டு யாருக்கு?' என நாம் அவரையே மடக்க... ""நான் முதல்ல இந்த இடத்தைக் காலிபண்ணிர்றேன்'' என என வேகமாக நடந்தார் அந்த போலீஸ் எஸ்.ஐ.

"அக்கா கொஞ்சம் தண்ணி குடுங்கக்கா தாகமா இருக்கு.'

""ஏய் சரசு... முன்னப் பின்ன தெரியாதவங்ககிட்டல்லாம் பேசிக்கிட்டு நிக்காத. தண்ணி குடுக்குற சாக்குல கழுத்து சங்கிலிய அத்துட்டுப் போறதுக்காக கழுத்தையே அறுத்துருவாங்க...'' என எதிர் வீட்டிலிருந்த ஒரு அக்கா உசுப்பிவிட்டது.

"ஏக்கா... அந்தளவுக்கா இந்தப் பகுதியில கொள்ளைக நடக்குது?' ""ஏன் பேப்பரே பார்க்கறதில்லையா? பேப்பரே பார்க்காம கையில எதுக்கு பேப்பர தூக்கிட்டு நடந்துக்கிட்டி ருக்க...''. "விடுக்கா... தண்ணியே வேணாம். சரி உங்க ஓட்டாவது யாருக்குன்னு சொல்லுங்க?'

""ஏப்பா இப்ப என்கிட்டயே பேச்சு கொடுக்கிறியா? ஆளை விடு'' என உசுப்புக் குரல். அக்கா வீட்டை படார் என சாத்திக்கொள்ள... நல்லவேளை ""உசுப்புக்குரல் அக்கா ஊரை உசுப்பிவிடாம விட்டுச்சே...'' என றெக்கைகள் முளைத்த பறவை களாய் மாறி அடுத்த ஸ்பாட்டுக்கு பறந்தது நமது டீம். 





ஞ்சை நாடாளுமன்றத் தொகுதிக்குள் சர்வே எடுக்கச் சென்றபோது கிடைத்த அனுபவங் கள் அலாதியானவை.

பேராவூரணி டவுனுக்குள் சென்றபோது வீட்டு வாசலில் இருந்த ஒரு பெண்... ""என்னய்யா போன வாரம் டோக்கன் கொடுத் தாகளே, அந்தக் கட்சிக்காரகளா நீங்க. இப்ப பணம் கொடுக்க வந்தீகளா? அய்யோ, இந்த நேரம் பாத்து என் வீட்டுகாரர் கடைக்கு போயிட் டாரே... அவர்கிட்ட தானே அந்த சீட்டு இருந்துச்சு. அதைக் கொடுத்தாதான் பணம் கொடுப்பீகளாய்யா. எங்க வீட்ல 3 ஓட்டு. அன்னக்கி சொன்ன சின்னம், எலையோ தழையோன்னு சொன்னாக. அதுக்கே போட்டுடுவோம். இப்ப பணத்தை கொடுங்கய்யா'' என்று படபடவென்று பேசி முடித்தார். 

"அம்மா... நாங்க சர்வே எடுக்க வந்தோம்' என்று சொன்னபடி, சின்னங்கள் அச்சிடப்பட்ட சர்வே படிவத்தை எடுத்தபோது, ""எங்க வீட்டுக்காரர் சொல்லாம இதுவரைக்கும் ஓட்டு போட்டதில்லை. நீங்க வேற வந்து ஓட்டு கேக்குறீகளே... என்ன செய்றது, எப்படி போடுறது? அவர் என்ன சொல்வாரோ?'' என்று முனங்கினார். இந்த ஓட்டு... யாரு ஜெயிப்பாகன்னு கணிப்பு பார்க்கத்தான் சும்மா போடுங்க'' என்று சொன்ன பிறகே வாக்களித்தார்.

பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குள் வரும் சித்தாதிக்காடு கிராமத்தில் தனியாக உள்ள வீட்டு வாசலில் விறகு வெட்டிக் கொண்டிருந்தவரிடம் "அய்யா சர்வே எடுக்க வந்திருக்கோம். நீங்க யாருக்கு ஓட்டு போடுவீங்க' என்று கேட்டதுதான் தாமதம்... ""அண்ணே சுப்பிரமணியண்ணே சீக்கிரம் வாவே. நம்மகிட்ட யாருக்கு ஓட்டு போடுவேன்னு கேட்க வந்துட்டாக'' என்று அலற... வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த சுப்பிரமணி ""நாங்க யாருக்கோ ஓட்டு போடுறோம். உங்களுக்கு என்ன வந்திருக்கு. உங்ககிட்ட வெளிச்சம் போட்டு காட்டி ஓட்டு போடமுடியாது'' என்று நம்மை அடிக்காத குறையாக விரட்டினார்.

மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் நாம் சந்தித்த பெரியவர் நம்மிடம்... ""படிக்கிற பசங்க மாதிரி தெரியுறீங்க. ஆனா ஓட்டு கேட்டு வந்திருக் கீங்க. நீங்களும் அரசியல் பத்தி நல்லா தெரிஞ்சுக்கணும். இப்ப நடக்கிறதை வச்சு சின்ன கதை சொல்றேன் கேளுங்க. அப்ப ஓட்டு போடுறேன்'' என்றவர், ""அந்தம்மா ஜெ. விமானத்துல போறாரே ஏன் தெரியுமா? ஏன்னா கீழே எங்க டி.ஆர்.பாலு போட்ட ரோடுதான் இருக்குது. அதனால் தி.மு.க. டி.ஆர்.பாலு போட்ட ரோட்ல அந்தம்மா போக மாட்டாங்க. அதனாலதான் மேலேயே பறக்குறாங்க தம்பி. கலைஞர் கட்டிய சட்டமன்றதிற்குள் போனாங்களா... அதுபோலத்தான் இதுவும்'' என்றார் அரசியல் அனுபவத்தில் முதிர்ந்திருந்த அந்தப் பெரியவர்.

இளநீர் வியாபாரி ஒருவரோ, ""இப்ப நீங்க வேகாத வெயில்ல வந்திருக்கீங்க. அதுக்கு இதமா இளநி குடிக்கலாம். என்னால முடிஞ்சது ஏழைகளை குளிர்விக்கிறதுதான். நான் யாருக்கு ஓட்டு போட்டாலும் அவங்க வந்து எனக்கு அரிசி கொடுக்கப் போறதில்லை. அந்த நேரம் யாருக்கு ஓட்டு போடலாம்னு தோணுதோ, நிக்கிறதுல நல்லவரா பார்த்து ஓட்டு போடுவேன். ஆனா யாருகிட்டயும் பணம் வாங்கிட்டு உரிமை யை விக்கமாட்டேன் தம்பி'' என்று சுயமரியாதை உணர்வுடன் சொல் லிக்கொண்டே தன் வாக்கை பதிவு செய் தார்.

ஒரத்தநாட்டில் நாம் சந்தித்த சிறு விவசாயி... ""தம்பி ஒரே ஒரு செம் மறி ஆடு நிக்கிது. அதுக்கு புல் அறுக்க வெகுதூரம் போறேன். என்கிட்ட இருக்கிற ஒரு ஏக்கர் நிலத்தில் ஆத்துல தண்ணி வந்தா விவசாயம் இல்லைன்னா இல்லை. பெரும் விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு போட்டு விவசாயம் செய்றாங்க. எங்களைப் போல சின்ன சின்ன விவசாயிகள் தரிசாத்தான் போட்டிருக்கோம். அதனால யார் ஜெயிச்சாலும் அரசாங்கமே பொது ஆழ்குழாய் கிணறு அமைத்து கொடுத்தா நல்லா இருக்கும்னு ஜெயிக்கிற எம்.பி.கிட்ட சொல்வீங்களா? இது இந்த ஏழை விவசாயியோட கோரிக்கை'' என்று கோரிக்கை வைத்த பிறகே, தன் வாக்கை பதிவு செய்தார்.

தஞ்சை நகரில்... ""அண்ணா நானும் போனவாரம் இதுபோலத்தான் ஊர் ஊரா போனேன். எதுக்கு தெரியுமா நோட்டோ பத்தி தெரியுமா. உங்க தொகுதியில் நிக்கிற வேட்பாளரை பிடிக்கலைன்னா நோட்டோ பட்டன்ல அழுத் துங்கன்னு பிரச்சாரம் செஞ்சோம். அதுக்கு நல்ல பலன் கிடைச்சிருக்குண்ணே...'' என்றபடி வாக்களித்தார் சமூக அக்கறையுள்ள அந்த இளைஞர்.

இப்படி தொகுதி முழுவதும் பல அனு பவங்கள் நமக்குக் கிடைத்தன. மக்களின் விரக்தி, அதிருப்தி, கோபம், சலிப்பு இவற்றுக் கிடையேயும் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. தஞ்சை தொகுதி மக்களின் எண்ணப்படி அ.தி.மு.க வேட்பாளரைவிட தி.மு.கவின் டி.ஆர்.பாலு சற்று முன்னேறியிருப்பதை சர்வே முடிவுகள் காட்டு கின்றன.

ad

ad