புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014

 லாஸ்ட் புல்லட்!

வாக்குப்பதிவை முடித்ததும் கொடநாடு செல்லவிருக்கிறார் ஜெ. அங்கு 15 நாட்கள் தங்குகிறார். தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் இருக்கும் என்பதால் ரிவியூ மீட்டிங் உள்ளிட்டவற்றை நடத்த முடியாது என்பதால் இந்தப் பயணம். கொடநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

மோடியே பார்க்கவிரும்பி அழைத்தார். அதனால் அவரை சந்தித்தேன். இதில் அரசியல் எதுவுமில்லை என்று சொல்லியுள்ளார் நடிகர் விஜய்.  அவருடைய ரசிகர்கள் வேலூரில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்திற்கு ஆரம்பத்திலிருந்தே வேலை செய்துவருகிறார்கள். விஜய்யின் அம்மா ஷோபாவும் ஏ.சி.எஸ்.ஸும் ஒரே சமூகத்தவர். அந்த அடிப்படையில்தான் விஜய்க்கும் டைரக்டர் ஷங்கருக்கும் ஏ.சி.எஸ் நிர்வாகத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஏ.சி.எஸ் மூலமாகவே மோடியை சந்திக்கும் திட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து பா.ஜ.கவுக்கு ஆதரவாகப் பணியாற்றும்படி தன் ரசிகர்களுக்கு சொல்லியிருக்கிறார் விஜய். ஆனால், ரஜினி ரசிகர்களுக்கு இதுவரை ரஜினியிடமிருந்து எந்த இன்ஸ்ட்ரக்ஷனும் செல்லவில்லை.

கன்னியாகுமரி வந்த சோனியாவை எப்படியாவது சிவகங்கைக்கு அழைத்து வந்துவிடவேண்டும் என ப.சிதம்பரம் எடுத்த முயற்சிகள் கனியவில்லை. அதுபோலவே, ராகுலின் ராமநாதபுரம் பிரச்சாரத்தைத் தொடர்ந்து அவரை சிவகங்கைக்கு அழைத்த ப.சியின் முயற்சியும் பலிக்கவில்லை. வெற்றிவாய்ப்பே இல்லாத தமிழகத்தில் அதிகளவில் பிரச்சாரம் செய்வது இமேஜை கெடுத்துவிடும் என காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறதாம். தொகுதிக்கு 2சிக்குப் பதிலாக, 1சி தருவது என்ற முடிவும் மாறி, சொற்பத் தொகையே தரப்பட்டுள்ளதாம். வேட்பாளர்கள் கடும் அப்செட்.

தி.மு.கவில் கடலூர் சீட் எதிர்பார்த்திருந்த செஞ்சி ராமச்சந்திரனிடம் மா.செ. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உங்களுக்கு சீட் இல்லையென்று தளபதி சொல்லிவிட்டார் என்று தெரிவிக்க, கட்சி இனி ஸ்டாலின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அங்கே நமக்கு எந்த வாய்ப்பும் இல்லை என முடிவு செய்த சீனியரான செஞ்சியார், ஏற்கனவே கனிமொழி எம்.பி  தேர்தலில் போட்டியிட்டபோது தே.மு.தி.கவின் ஆதரவைப் பெறுவதற்காக அடிக்கடி பண்ருட்டி ராமச்சந்திரனுடன் தொடர்பு கொண்டிருந்தார். தற்போது பண்ருட்டி ராமச்சந்திரன் அ.தி.மு.கவில் உள்ள நிலையில் அவர் மூலமாகவே ஜெ.வை தன் மகனுடன் சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார் செஞ்சி ராமச்சந்திரன்.

தி.மு.க பக்கமுள்ள சிறுபான்மையினர் வாக்குகள்தான் அ.தி.மு.கவுக்குப் பல தொகுதிகளில் சவாலாக இருக்கின்றன என்ற ரிப்போர்ட்டையடுத்து மந்திரிகளை ஜமாத்துகளுக்கு அனுப்பி முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்டச் சொல்லியுள்ளது மேலிடம். ஆனால், அங்கு வரவேற்பில்லையாம். அதுபோல கிறிஸ்தவ அமைப்புகளையும் தொடர்பு கொண்டு வருகிறார்கள். அதேநேரத்தில், தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ள கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் இனிக்கோ இருதயராஜ் தனது தாயார் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் பல கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகளை கலைஞரிடம் அழைத்துச் சென்று ஆதரவை பலப்படுத்தியுள்ளார்.

இடைத்தேர்தலை சந்திக்கும் ஆலந்தூர் தொகுதியில் போட்டி கடுமையாக உள்ளது. பல வேட்பாளர்கள் நிற்கும் இத்தொகுதியில் அ.தி.மு.க வெங்கட்ராமன், தி.மு.க ஆலந்தூர் பாரதி, தே.மு.தி.க காமராஜ் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. ஆளுங்கட்சி என்ற பலத்துடன் வெங்கட்ராமன் நம்பிக்கையுடன் இருந்தாலும், தி.மு.கவின் ஆலந்தூர் பாரதி ஏற்கனவே சேர்மனாக இருந்தபோது செய்த பணிகள் தன்னை வெற்றிபெற வைக்கும் என்ற உறுதியுடன் வாக்குசேகரிப்பில் தீவிரமாக உள்ளார்.

ஒருவழியாக, கூட்டணியில் உள்ள பா.ஜ.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., ஐ.ஜே.கே., கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களின் வெற்றிக்கு பா.ம.கவினர் உழைக்கவேண்டும் என ராமதாஸ் அறிக்கை கொடுத்துவிட்டார். இதனை விஜயகாந்த்திடம் அவரது கட்சியினர் தெரிவித்தபோது, அன்புமணிக்கும் கோ.க.மணிக்கும் அவரவர் தொகுதியில் நான் பிரச்சாரம் செய்தபிறகுதானே ராமதாஸ் இந்த அறிக்கையைக் கொடுத்துள்ளார் என்றாராம் விஜயகாந்த்.


 அரசு ஊழியர்களின் பேரம்!

ஒவ்வொரு எம்.பி தொகுதியிலும் சுமார் 6000 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தபால் மூலமாக வாக்களிப்பார்கள். அரசு ஊழியர்களின் தேர்தல் பணிக்கானப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கான தபால் வாக்குச்சீட்டும் தரப் பட்டுவிட்டது. இந்நிலையில், பயிற்சி முகாமில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் யார் யார் என்ற லிஸ்ட்டைப் பெற்று அவர்களைத் தொடர்பு கொள்ளும் ஆளுந்தரப்பு, எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள். 1000 ரூபாய் தருகிறோம் என்று தூண்டில் போட்டுவருகிறது. பெரம்பலூர் தொகுதியைப் பொறுத்தவரை இந்தப் பணியில் ஆளுந்தரப்பைவிட பா.ஜக.வின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஐ.ஜே.கே. பச்சமுத்து தரப்பு, அரசு ஊழியர்களின் லிஸ்ட்டைப் பெற்று அவர்களின் வீடு தேடிச் சென்று, கேன்வாஸ் செய்து வருகிறது. அன்பளிப்புத் தொகை பற்றியும் உறுதியளிக்கிறதாம். 

ad

ad