புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2016

ஜெயலலிதாவை அப்போலோவுக்கு அனுப்பிய 6 'டென்ஷன்'கள்

ன் உடல் நலம் பற்றி எந்த செய்திகளும் வரக்கூடாது என நினைப்பவர் தான் ஜெயலலிதா. உடல் நலம் பற்றி
பேசியவர்கள் மீதும், எழுதிய பத்திரிகைகள் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்தது இதைத்தான் காட்டியது. கொடநாட்டில் ஓய்வு, சிகிச்சை என செய்திகள் வெளியானபோது, அதை மறுத்தவர்கள் எல்லாம், இப்போது சென்னை அப்போலோ மருத்துவமனை வாசலில், உள்ளே சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவுக்காக காத்திருக்கிறார்கள்.
ஜெயலலிதாவுக்கு காய்ச்சல், நீர்சத்து குறைபாடு, மருத்துவர் கண்காணிப்பில் இருக்கிறார் என அடுத்தடுத்து அறிக்கை வந்து கொண்டே இருக்கிறது. உண்மையில் ஜெயலலிதாவுக்கு என்ன தான் பிரச்னை என்பது யாருக்கும் தெரியவில்லை. யாருக்கு தெரியும் என்றும் தெரியவில்லை.
ஜெயலலிதா மாதக்கணக்கில் வீட்டிலேயே முடங்கி இருந்த போதும், கொடநாட்டில் இருந்து அரசு பணிகளை கவனிப்பதாக சொல்லிய போதும்... ஜெயலலிதா உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் பரவின. 'உடல்நலம் சரியில்லாவிட்டால் ஓய்வெடுத்துக்கொள்ளலாம்' என கருணாநிதியே கவலைப்படும் அளவுக்கு ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கவலைகள் பரவின. ஆனால் இது போன்ற தகவல் எழும் போதெல்லாம் " அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்வதெல்லாம் வதந்திதான். நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறார்!" என ஆவேசமாய் முழங்கினர் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள். இப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
சர்க்கரை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இவை எல்லாம் டென்ஷன் அதிகரிப்பால் வரும் பிரச்னைகள். 'ஜெயலலிதாவை சமீபகால நிகழ்வுகள் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றன. அதனால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்' என  சொல்லப்படும் தகவலை சாதாரணமாக கடந்து விட முடியவில்லை. அந்தளவு ஜெயலலிதாவை நெருக்கி துன்புறுத்தி வருகின்றன டென்ஷன்கள். அதில் மிக முக்கியமானவை ஆறு.
சொத்துக்குவிப்பு வழக்கு
ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கடி கொடுப்பது சொத்துக்குவிப்பு வழக்கு தான் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என சமீபத்தில் அறிவித்தது உச்சநீதிமன்றம். இந்த உத்தரவு ஜெயலலிதாவுக்கு நிச்சயம் நெருக்கடியை கொடுத்திருக்கும். தீர்ப்பு எப்படி வருமோ என்ற மன உளைச்சல் நிச்சயம் அவருக்கு அதிகளவில் இருந்திருக்கும். தீர்ப்பு நெகட்டிவ்வாக வந்து விட்டால் அடுத்து என்ன செய்ய முடியும் என்ற யோசனை அவரது டென்ஷனை அதிகரித்திருக்கும்.

காவிரி விவகாரம்
ஆகஸ்ட் மாத இறுதியிலேயே ஜெயலலிதா கொடநாடு சென்றிருக்க வேண்டும்.  அது தான் அவரது திட்டம். திட்டமிட்டபடி அவர் கொடநாடு சென்றிருந்தால் சற்று அவருக்கு மன அமைதி கிடைத்திருக்கும்.  ஆனால் அவரை கொடநாடு செல்லவிடாமல் தடுத்தது காவிரி பிரச்னை. தமிழகத்தில் காவிரி, சிறுவாணி என நதிநீர் பிரச்னைகள் விஸ்வரூபமெடுத்து, காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் கலவரம் ஏற்பட்டது மிகப்பெரிய நெருக்கடியை ஜெயலலிதாவுக்கு ஏற்படுத்தியது.
கர்நாடகாவைப்போல் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியது ஜெயலலிதாவுக்கு கூடுதல் டென்ஷன். நிச்சயம் ஓய்வு தேவை என நினைத்த நேரத்தில், காவிரி விவகாரம் அவரை மிகவும் படுத்தி எடுத்தது.
எங்கும் செல்ல முடியவில்லை...!
அண்மைகாலங்களில் ஜெயலலிதா எங்கும் செல்ல முடியவில்லை. தமிழகத்துக்கு வந்த ஜனாதிபதியை தமிழக முதல்வர் நேரில் சென்று வரவேற்றிருக்க வேண்டும். காவிரி பிரச்னையில் அனைத்துக்கட்சி கூட்டத்தையும், சிறப்பு சட்டமன்றத்தையும் கூட்டியிருக்க வேண்டும். மெட்ரோ ரயில் சேவையை நேரில் சென்று துவக்கி வைத்திருக்க வேண்டும் ஆனால் இதை எதையும் ஜெயலலிதா செய்யவில்லை. செய்ய இயலவில்லை.
காவிரி விவகாரம் உச்சத்தில் இருந்த போது தமிழகம் வந்தார் ஜனாதிபதி. வரவேற்கும் சாக்கில் தமிழக உரிமை குறித்து ஜெயலலிதா தெரிவித்திருக்கலாம். மெட்ரோ ரயிலை துவக்க டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வந்து விட்டார். சென்னையில் உள்ள ஜெயலலிதா வராதது ஏன்? காவிரி பிரச்னையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவதில் ஜெயலலிதாவுக்கு என்ன சிக்கல்? இப்படி ஜெயலலிதாவை சுற்றி, வளைய வந்த கேள்விகளுக்கு ஜெயலலிதாவிடம் பதில் இல்லை. இவை எல்லாம் அவரை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கும்.
அன்புநாதனும், அமலாக்கத்துறை விசாரணையும்
தமிழகத்தில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில் கோடி கோடியாக முதலீடு செய்திருப்பதாக கரூர் அன்புநாதன் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய... இதில் இந்நாள், முந்நாள் அமைச்சர்கள் என எல்லோர் பெயரும் அடிபட துவங்கியது.  தாய்லாந்தில் தனித்தீவு, வெளிநாட்டில் பல கோடி முதலீடு, துபாயில் ஆயிரக்கணக்கான கோடியில் அடுக்குமாடி வர்த்தக வளாகம் என அன்புநாதனின் முதலீடு அதிர்ச்சி அளிக்க...இதன் பின்னனியில் அதிமுக அமைச்சர்களும், தலைமைக்கு நெருங்கியவர்களும் சிக்க வாய்ப்புகள் அதிகம் என வெளியான தகவல் ஜெயலலிதாவுக்கு நிச்சயம் பெரிய டென்ஷன் தான்.
நெருங்கும் உள்ளாட்சி தேர்தல்
சட்டமன்ற தேர்தலின் போது திமுக உடன் கூட்டணி சேர கூட ஆளில்லை... எதிர்கட்சிகள் ஒன்று சேரவில்லை என நிறைய ப்ளஸ்கள் ஜெயலலிதாவுக்கு இருந்தது. ஆனால் அப்போதே ஜெயலலிதாவை தேர்தல் டென்ஷன் பாடாய் படுத்தியது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் தான் என்ற போதும் இப்போது ஜெயலலிதாவுக்கு அதைவிடவே டென்ஷன் அதிகம்.
கடந்த தேர்தலில் மாநகராட்சிகளில் மேயர் பதவிகளுக்கு போட்டியிட்டவர்களை மட்டும் ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். இந்த முறை அதற்கு வாய்ப்பில்லை. வேனில் பயணிப்பதோ அல்லது தமிழகம் முழுக்க ஹெலிகாப்டரில் சுற்றித்திரிந்து அலைவதோ ஜெயலலிதாவால் முடியாது. தமிழக சட்டமன்றத்தில் 89 இடங்களில் வென்று திமுக நெருக்கடி கொடுக்கும் நிலையில், உள்ளாட்சி தேர்தல் டென்ஷன் ஜெயலலிதாவுக்கு நிச்சயம் கூடுதலாகத்தான் இருக்கும்.
சசிகலா புஷ்பாவும், வைகுண்டராஜனும்
ஜெயலலிதா முன்னால் நிமிர்ந்து நின்றாலே பதவி காலியாகி விடும். எதிர்த்து பேசினால் என்னாகும்?. ஜெயலலிதாவை எதிர்த்து பேசியதோடு, அவர் என்னை அடித்தார் என நாடாளுமன்றத்தில் பேசி பரபரப்பை கிளப்பிய

ad

ad