புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2018

சுமந்திரனே இனவாதப் பிரசாரம் செய்தார்! - நாமல் கடுப்பு


பொதுஜன பெரமுன இனவாதத்தை தூண்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் இனவாதத்தை பரப்பியது. சுமந்திரன் இனவாத ரீதியான பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார் என கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டினார்
பொதுஜன பெரமுன இனவாதத்தை தூண்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் இனவாதத்தை பரப்பியது. சுமந்திரன் இனவாத ரீதியான பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார் என கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டினார்

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “முட்டுக்கொடுத்து அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது. மக்களின் ஆதரவு யாரிடம் உள்ளது என்பதை அறிய வேண்டுமாயின் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும்.

தேர்தல் இலஞ்சம் மற்றும் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் தாமரை மொட்டுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர் குடங்களை கொடுக்கும் போது, ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர் உரலை கொடுத்தார். இலங்கையின் தேர்தல் வரலாற்றில் தேர்தல் சட்டம் அதிகளவில் இந்த தேர்தலிலேயே மீறப்பட்டது. பொருட்களை விநியோகித்து வாக்குகளை பெற முடியாது என்பதை மக்கள் காட்டியுள்ளனர்.

அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் பிரித்து அறிய முடியாதுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைவரும் ஒன்றாக உள்ளனர். மகிந்தவை விட அதிகமான வாக்குகளை பெற்றதாக அனைவரும் கூறுகின்றனர். நாங்கள் அரசாங்கத்தை கைப்பற்ற பார்ப்பதாக ராஜித சேனாரத்ன கூறுகிறார். நாங்கள் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்க முயற்சிக்கவில்லை என்பதை நாம் முதலில் கூறவேண்டும்.

80 வீதமான மக்கள் வாக்களித்துள்ளனர். பிரதேச சபைத் தேர்தல் ஒன்றில் வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சி வென்றுள்ளது. இனிமேலாவது மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவார்கள் என்று நினைக்கின்றேன்.நாங்கள் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்காது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசாங்கத்தை அமைக்குமாறு கூறினோம்.

கரு ஜயசூரியவை பிரதமராக்குவதா, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் யார் என்பதை தீர்மானிப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரின் வேலையல்ல. திலங்க சுமதிபால நேற்றுமுன்தினம் இரவு ஒன்றை கூறினார். மகிந்த அமரவீர இப்போது வேறு ஒன்றை கூறுகிறார். ஐக்கிய தேசியக்கட்சி மற்றுறொன்றை கூறுகின்றது. இப்படிதான் இவர்கள் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.என்றும் அவர் கூறினார்.

ad

ad