ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை
, இலங்கையின் உள்வீட்டு விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் தலையீடு என வர்ணிப்பது, துரதிர்ஷ்டவசமானதும் நியாயமற்றதும் ஆகும் என, ஐக்கிய இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான இராஜாங்க அமைச்சரான மார்க் பீல்டே, இக்கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு, இலங்கையை நேற்று (04) வந்தடைந்த அவர், தனது விஜயத்துக்கு முன்னராக, தமிழ் மிரர் பத்திரிகையின் சகோதரப் பத்திரிகையான டெய்லி மிரரில் எழுதிய விசேட பத்தியிலேயே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனது விஜயத்தின் நோக்கம் தொடர்பாகத் தெளிவுபடுத்திய அவர், குறித்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவதற்கு, இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவை, இலங்கையின் ஏனைய நண்பர்களைப் போல, ஐ.இராச்சியமும் வரவேற்கிறது என்று குறிப்பிட்டதோடு, சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நல்லிணக்கத்துக்கும், முக்கியமான சட்ட வேலைப்பாடாக, அந்தத் தீர்மானம் அமைகிறது என்றும் தெரிவித்தார்.
ஜெனீவா தீர்மானம் தொடர்பாக இலங்கையால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக, அடுத்தாண்டு மார்ச்சில் ஆராயப்படவுள்ளமையை நினைவுபடுத்திய அவர், நல்லிணக்கத்துக்கான செயற்பாடுகளைத் தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறு, அரசாங்கத்தை வலியுறுத்தவுள்ளதாகத் தெரிவித்தார்