-
13 பிப்., 2013
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெனமேஜெயந் ஆகிய இருவரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்ற இனிய செய்தியை வெளியிடுகின்றோம்
வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்த யாழ். பல்கலைக்கழக இரு மாணவர்களும் சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வடகொரியா வெற்றிகரமாக அணுப் பரிசோதனை: சர்வதேசம் அதிர்ச்சி!
சர்வதேச எதிர்ப்புகளை மீறி வடகொரியா வெற்றிகரமாக அணுப் பரிசோதனையொன்றை நடத்தி முடித்துள்ளது.
நிலத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இப்பரிசோதனையானது சிறிய செயற்கை பூகம்பமொன்றை ஏற்படுத்தியதாக பியங்யொங்கிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பூகம்பமானது ரிச்சட்ர் அளவில் 4.9 ஆக பதிவாகியதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வு மையம் குறிப்பிடுகின்றது.
ஈழத்தமிழரின் வாழ்வுரிமை இந்தியாவின் கரங்களில் தங்கியுள்ளது:- ஜெயா தொலைக்காட்சியில் சி.சிறிதரன்- பார்க்க......
ஜெயா தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் ‘’நேர்முகம்’’ நிகழ்ச்சியில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கலந்துகொண்டு தமிழர் பிரச்சினைகள் பற்றி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசின் அறிவிப்பை நிராகரித்தார் கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா |
வரும் நொவம்பர் மாதம் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு கொழும்பிலேயே நடைபெறும் என்று தான் உறுதிப்படுத்தியுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தை, கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா நிராகரித்துள்ளார். |
எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைவதா? – செயற்குழுவே முடிவு செய்யும் என்கிறார் சம்பந்தன் |
எதிர்க்கட்சிகளின் கூட்டணி புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடுவதா இல்லையா என்பதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழுவே முடிவு செய்யும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். |
வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஒரு கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கொழும்பு-02 கொம்பனி வீதியில் இடம்பெற்றுள்ளதாக கொம்பனி வீதி பொலிஸார் தெரிவித்தனர்.
இனந்தெரியாத நபர்களினாலேயே இந்த பணம் சற்று முன்னர் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு எம்.பி.யை ஏளனம் செய்த டக்ளஸ் மற்றும் ஆளுநர்
யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மீள்குடியேற்றம் குறித்து பேச்சே எடுக்காமல் அதிகாரிகள் மௌனம் காத்திருந்த நிலையில், வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் குறித்து பேச ஆரம்பித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை ஏ
12 பிப்., 2013
ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம்
சென்னை, பிப்.11 (டி.என்.எஸ்) சென்னை, மயிலாப்பூரில் உள்ள குடிசைப் பகுதியில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
மயிலாப்பூரில் உள்ள கபாலித் தோட்டம் என்றப் பகுதியில் ஒரு வீட்டில் தீடீரென தீப்பிடித்தது. அதைத் தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளுக்கும் அந்த தீ மளமளவென்று பரவியது.இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் நான்கு வாகங்களில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். (டி.என்.எஸ்)

சென்னை, பிப்.11 (டி.என்.எஸ்) ஈழத் தமிழர்களுக்காக வரும் பிப்ரவரி 12ஆம் தேதியன்று சென்னை, மெரினா கடற்கரையில் மதிமுக கட்சியினர் சுடர் ஏந்தி போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சுதந்திரத் தமிழ் ஈழ விடியலை நோக்கி வீரத் தியாகி முருகதாசன் நினைவு நாளான பிப்ரவரி 12 ஆம் நாள், இலண்டன் மாநகரில் இருந்து மானமும் தியாக உணர்வும் கொண்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர், மனித குலத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப தியாகப் பயணம் தொடங்குகின்றனர்.

அலகாபாத், பிப்.11 (டி.என்.எஸ்) உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ரயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி பலியாணவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் நேற்று சுமார் 3 1/2 கோடி பேர் புனித நீராடினார்கள். அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலகாபாத் திரிவேணி சங்கமத்துக்கு வந்திருந்தனர். புனித நீராடலுக்குப் பிறகு பக்தர்கள் ஊர் திரும்புவதற்காக சிறப்பு ரெயிலைப் பிடிக்க அலகாபாத் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.

சேலம், பிப்.11 (டி.என்.எஸ்) சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர் விநாயக்நகரை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் சித்ரா என்கிற ஜெயசித்ரா (27), இவருக்கும் சேலம் நாராயண நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சித்ரா இன்று தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து தர்ணா செய்தார்.

குறள் எழுதி, பாடினார் வைரமுத்து
|
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேச நாடுகள் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் போருக்கு பின்னரான இலங்கையின் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ள முடியும் என பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிலையத்தில் , 'யுத்தம் மற்றும் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் சர்வதேச நாடுகளால் எதிர்நோக்கும்
ஒன்லைன் மூலம் வீசா எடுத்து 2012 இல் இலங்கைக்கு சென்ற மில்லியன் பேர்
ஒன்லைன்(online)மூலம் இலங்கை வீசா வழங்கும் (Electronic Travel Authurization) என்றழைக்கப்படுகின்ற ETA முறைமை ஊடாக கடந்த ஆண்டிலே 10 மில்லியன் பேர் இலங்கைக்கு வந்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
விஸ்வரூபம் |
ஹாலிவுட் தரத்திற்கு ஒரு தமிழ் படத்தை தன்னால் இயக்க முடியும் என்று நிருபித்துள்ளார் கமல்ஹாசன். |
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதையை நகர்த்தியுள்ளனர். நியூயார்க் நகரில் பெண்மையும், மென்மையும் கலந்த விஸ்வநாதன் என்னும் கதக் நடனக் கலைஞரான கமலிடமிருந்து விவாகரத்து பெற நினைக்கிறார் மனைவி பூஜாகுமார். இதற்காக இவர் தனியார் துப்பறிவாளர் ஒருவரை நியமிக்கிறார். தான் பணியாற்றும் கம்பெனி முதலாளியுடன் நெருக்கம் அதிகமாவதால் இந்த ஏற்பாட்டை அமைப்பார். நியமிக்கப்பட்ட துப்பறிவாளன் தவறுதலாக தீவிரவாதிகளின் தலைமறைவு பகுதிக்குள் நுழைந்து விட, அங்கு கொல்லப்படுகிறார். தங்களைத்தான் துப்பறிய அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறான் என்று கருதும் தீவிரவாதிகள் அனுப்பியவரைத் தேடிச் செல்ல விஸ்வநாதனும் அவர் மனைவி பூஜாவும் தீவிரவாதிகளின் பிடிக்குள் வருகிறார்கள். |
11 பிப்., 2013
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு எப்போது தண்டனை வழங்குவீர்கள்? கொதிக்கின்றார் ஜம்மு காஷ்மீர் முதல்வர்
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்துக்கு முன்பு நிகழ்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங் படுகொலை சம்பவங்களில் கொலையாளிகளை தூக்கிலிடாமல் அப்சல் குருவை தூக்கிலிட்டிருக்கிறார்களே என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர்
தி.மு.க., நினைத்திருந்தால் ராஜபக்சவின் வருகையை தடுத்திருக்கலாம்! முக்கிய கட்சி பிரபலங்கள்
தமிழக அரசியலையும், இலங்கை விவகாரத்தையும் எப்போதும் பிரிக்க முடியாது. தற்போது, ராஜபக்ச வருகையால், மீண்டும், தமிழக அரசியல் களம் பரபரப்பானது. ராஜபக்சவின் இந்தியப் பயணம் குறித்து, முக்கிய கட்சி பிரபலங்களின் கருத்துக்கள்...
இலங்கையில் மாநாட்டினை நடத்துவது பொதுநலவாய அமைப்பின் நிலைப்பாட்டுக்கு முரணானது!- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சர்வதேச அரங்கில் இலங்கை அரசினை தனிமைப்படுத்தும் நோக்கில் இவ்வாண்டு இலங்கையில் நிகழவிருப்பதாக கூறப்படும் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாட்டினை மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஜேர்மனி சிண்டேல்பிங்கேன் உள்ளரங்க சுற்று போட்டி .செய்தி
__________________________________________________________________
கடந்த 09.02.2013 அன்று நடைபெற்ற சுற்றுப் போட்டியி 19 கழகங்கள் பங்கு பற்றின.அவற்றில் சுவிசில் இருந்து கலந்து கொண்ட 5 கழகங்களான யங் ஸ்டார் ,யங் ஸ்டார் 1,இளம் சிறுத்தைகள் ,யுனைடெட் பயர் ,சுவிஸ் பாய்ஸ்,இளம் ராயல் ஆகிய 5 கழகங்களுமே காலிறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தன.அரையிறுதி ஆட்டத்தில் யங் ஸ்டார் அணி என்னபெற்றல் அணியுடன் மோதியது. ஆரம்பத்திலேயே என்னபெற்றால் ஒரு கோலினை போட்டு ஆட்டத்தை விறுவிறுப்பாக்கியது .இருந்தாலும் அடுத்த 5 நிமிடங்களிலேயே 4 கோல்களை யங் ஸ்டார் அணி போட்டு ஆட்டத்தின் வெற்றியை தன் வசப் படுத்தியது .இறுதியாட்டத்தில் ஸ்டுக்கார்ட் அணியை சந்தித்த யங் ஸ்டார் 4-2 என்ற ரீதியில் வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது . சிறந்த விளையாட்டு வீரன்,அதிக கோல் அடித்த வீரன் ஆகிய 2 விருதுகளையும் யங் ஸ்டார் யசியும்,சிறந்த முன்னணி தாக்குதல் வீரன் விருதையங் ஸ்டார் நிசாத்தும் பெற்றனர்.ச்டூட்கார்ட் வீரர் ஜெனோடன் சிறந்த பந்துக்காப்பாளராக என்னபெற்றால் வீரர் அனித் சிறந்த பாதுகாப்பு வீரராக தெரிவாகினர்
மூன்றாம் இடத்தை என்னபெற்றால் அணி கைப்பற்றியது
யங் ஸ்டார் இரண்டாவது தடவையாக இந்த சுற்றுப் போட்டி கிண்ணத்தை கைப்பற்றுகிறது .யங் ஸ்டார் அணியில் தரமின்,சபேசன்,ஜசிந்தன்,பிரதீஸ் ,ஜெசி,கௌதம்,நிஷத் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்
10 பிப்., 2013
சுவிஸ் சூரிச்சில் சிவராம் நினைவுப் பணிமன்ற ஐந்தாவது நினைவுக் கருத்தரங்கு - மாவை சேனாதிராஜா உரையாற்றினார்
சுவிஸ் சூரிச் மாநகரில் இன்று மாலை இடம்பெற்ற சிவராம் நினைவுப் பணிமன்றம் ஏற்பாடு செய்த 5வது நினைவுக் கருத்தரங்கில் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இனப்பிரச்சினையும் சமகால அரசியலும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு முறுகல் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒருக்கட்டமாக, இலங்கையின் சிரேஸ்ட அமைச்சர் ஏ எச் எம் பௌசி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, புதிய தேர்தல் தொகுதி அமைப்பாளர்களை நியமி;த்தமையை அடுத்தே இந்த தீவிர நிலை ஏற்பட்டுள்ளது.
சுவிஸ் லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகம் மீண்டும் ஜெர்மனியில் ஒரு சாதனை படைத்திருக்கிறது
இன்றைய ஸ்டுக்கார்ட் சிண்டேல்பிங்கேன் உள்ளரங்க சுற்றுபோட்டியில் பங்கு பற்றி முதலாம் இடத்தை அடைந்து கிண்ணத்தை கைப்பற்றி உள்ளது - 7 சுவிஸ் நாட்டுக் கழகங்களும் 13 ஜேர்மனிய கழகங்களும் பங்கு பற்றிய இந்த கடுமையான சுற்றுப் போட்டியி ல் இறுதியாட்டத்தில் மற்றொரு பலம் மிக்க ஜேர்மனிய கழகமான ஸ்டுட்கர்ட் உடன் மோதி வெற்றி பெற்றது.சிறந்த விளையாட்டு வீரர்களாக யசியும் நிஷியும் தெரிவாகி உளார்கள்

9 பிப்., 2013
இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க கோரி புதுவையில் இன்று சீமான் உண்ணாவிரதம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக வருகிற 27-ந் தேதி தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இதனை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் புதுவையில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருந்தனர். இதற்கு புதுவை பொலிஸார் அனுமதி மறுத்தனர்.
""பிப்ரவரி 7-ந் தேதி திருச்சியில் நடந்த தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா வீட்டுத் திரு மணத்தில் கலைஞரும் விஜயகாந்த்தும் சந்திப் பாங்கங்கிற எதிர்பார்ப்பு நிறைவேறாததைத் தானே சொல்றே? திருச்சியில் திருமணம் நடந்த அதே நாளில்
""ஏழு நாள் கஸ்டடி கேட்டோம்.. ஆறு நாள் கிடைச்சிருக்கு.. இவங்கள்ல மூணு நாலு பேரு கத்துக்குட்டி பசங்க.. பகல்ல லோடுமேன் வேலை பார்த்துட்டு ராத்திரி பார்ட் டைம் ஜாப் பார்க்கிற மாதிரி.. கொலை செய்ய வந்தவனுக.. ஒழுங்கா அருவா பிடிக்கத் தெரியாதவனுக.. அதான்.. பொட்டு சுரேஷ போடுறப்ப சந்தானம் கையிலயும் வெட்டு விழுந்திருக்கு..
யாழ்.நாவற்குழியில் பா.உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிங்கள மக்கள்
யாழ்.நாவற்குழி பிரதேசத்திலுள்ள நிலமைகளைப் பார்வையிடச் சென்றிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் அங்கு குடியேற்றப்பட்டிருக்கும் சிங்கள மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
8 பிப்., 2013
ராஜபக்ச வருகை! சென்னை அண்ணாசாலை போக்குவரத்தை முடக்கி ராஜபக்ச உருவபொம்மை எரிப்பு!
இன்று (08/02/2013) காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தை கொடுங்கோலன் இராஜபக்ச இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து "தமிழர் எழுச்சி இயக்கத்தைச் சார்ந்த 70 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் முற்றுகையிட்டனர்.
ஒற்றுமையுடன் போராடியிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்! மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி
இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் கறுப்புடை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, "டெசோ' உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து இன்று டெசோ குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஜனாதிபதி மகிந்த இந்தியா வருகைக்கு எதிர்ப்பு: ஓசூரில் ரயில் மறியலில் ஈடுபட்டோர் மீது பொலிஸார் தாக்குதல்
இந்திய அரசின் உறுதிமிக்கத் துணையோடு, தமிழீழ மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து, இனப்படுகொலையை அரங்கேற்றிய ஜனாதிபதி ராசபக்சவின் இந்திய வருகையைக் கண்டித்து இன்று காலை ஓசூரில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ரயில்
ராஜபக்சே இந்தியா வருகை தமிழர்களை சீண்டிப்பார்க்கும் செயல்: வைகோ ஆவேசம்
-------------------------- -------------------------- -
சென்னை, பிப்.5-
டெல்லியில் ராஜபக்சே வருகையை எதிர்த்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடும் ம.தி.மு.க. தொண்டர்களை வைகோ எழும்பூர் ரெயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களையும், அவர்களின் பிஞ்சு குழந்தைகள், தாய்மார்களையும் ஈவு இரக்கமின்றி கொடூரமாக இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் வர அனுமதிக்கக்கூடாது என்று பலமுறை வலியுறுத்தி கூறினோம். மத்திய பிரதேசத்துக்கு வந்தபோது நேரில் சென்று போராட்டம் நடத்தினோம்.
இப்போது திட்டமிட்டு உலக நாடுகளின் கண்களில் மண்ணை தூவுவதற்காக 7 கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவில் கொடியவன் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு இல்லை என்று காட்டுவதற்காக அழைத்து வருகிறார்கள். ஐ.நா. மன்றத்தில் மனித உரிமை மீறல் விசாரணை விரைவில் வர இருக்கிறது.
அப்போது ராஜபக்சே பற்றிய எண்ணத்தை தடுப்பதற்காக சோனியா இயக்கும் மத்திய அரசு அவரை மீண்டும் இந்தியாவுக்கு வரவழைத்து உள்ளது. 47 உறுப்பு நாடுகளின் தூதர்களுக்கும் இனப்படுகொலை ஆவணங்கள் மற்றும் குறுந்தகடு ஆதாரங்களுடன் கடிதம் எழுதி இருக்கிறோம்.
ஈழத்தமிழர்களை காக்க அன்று தமிழகம் தவறி விட்டது. முத்துக்குமார் உள்பட 17 இளைஞர்கள் தங்கள் இன்னுயிர்களை மாய்த்தார்கள். அவர்கள் ஏற்றி வைத்த தீ இன்னும் அணையவில்லை. இத்தனைக்குப் பிறகும் ராஜபக்சேவை இந்தியாவுக்கு வரவழைத்துள்ளது. அதுவும் தமிழகத்தின் தலைவாசலான திருப்பதிக்கு வரவழைக்கிறது. இது தமிழர்களை சீண்டி பார்க்கும் செயல். எனவேதான் அவரை இந்தியாவுக்கு வரவழைத்ததற்காக டெல்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடுவோம் என்று அறிவித்தோம்.
--------------------------

இந்திய அரசை கண்டித்து தன்னலமற்ற தமிழ் அமைப்புகள் போராட்ட களத்தில் உள்ளன. ம.தி.மு.க. தொண்டர்கள் ஆயிரத்து 500 பேர் இன்றும் நாளையுமாக ரெயில்களில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து புறப்பட்டு சென்று பிரதமர் இல்லத்தை முற்றுகையிடுவார்கள்.
சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒருவரைத் திருமணம் செய்து இந்தியாவில் கணவனின் குடும்பத்தாருடன் வாழ்ந்து வந்த நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் புளியங்கூடலை சேர்ந்த சசீந்தினி என்ற யுவதி கடந்த 2005 ஆம் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தனது ஊரை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்த நிலையில் இந்தியா திருச்சி நகரின் கணவனின் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார்.
"ஆட்சியில் யார் இருந்தால் என்ன? சட்டத்துக்கு பயந்தவர்களா நாங்கள்? வழக்கு நடந்து... என்றோ தண்டனை கிடைத்து..? அட, போங்கப்பா... நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு...'’ எனச் சொல்லாமல் சொல்வது போல, மதுரை மண்ணில் பொட்டு சுரேஷ் குமாரை வெட்டிச் சாய்த்து விட்டு, நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்கள் இளைஞர்கள்
புலம் பெயர்ந்து உலக நாடுகளில் வாழும் தமிழீழ உறவுகளே!கடந்த காலங்களையும்,இன்றய நிகழ்வுகளையும்,ஈழத்தின் நாளைய நிலை பற்றியும்,இப்போதே,சிந்திக்க வேண்டியவர்கள்,நாங்கள்.
புலம்பெயர் மக்களே!
கடந்த காலங்களில் தமிழீழ மீட்பிற்காக நீங்கள் ஆற்றிய பணிகள் எத்தகைய பலம் வாய்ந்தது. ஒரு பெரும் விடுதலை போராட்டம் புலம்பெயர்ந்து வாழும் உங்களைக் கொண்டு,உங்கள் உதவிகளோடு நகர்த்தப்பட்டது என்றால் அதற்கு மாற்றுக்கருத்து

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)