புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2013


வடக்கு கிழக்கு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த டெசோ முயற்சி
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த தமிழகத்தின் டெசோ அமைப்பு முயற்சித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாடொன்றின் ஊடாக இந்த யோசனையை முன்வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தி.மு.க துணைத் தலைவர் மு.க. ஸ்டாலின் வடக்கு கிழக்கு சர்வஜன வாக்கெடுப்பு குறித்த யோசனையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் ஒப்படைத்துள்ளார்.
தமிழகத்தின் அரசியல் கட்சி ஒன்றினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக் கொள்வது சட்டவிரோதமானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நவநீதம்பிள்ளை அரசாங்கத்திற்கு எவ்வித அறிவித்தல்களையும் வழங்கவில்லை.
வடக்கு கிழக்கு ஈழக் கோரிக்கை தொடர்பான யோசனை முன்வைக்கப்படுவதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தென் ஆபிரிக்காவிற்கு சென்று ஆலோசனை பெற்றுக்கொண்டுள்ளதாக குறித்த சிங்களப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

ad

ad