பொதுநலவாய நாடுகளின்; மாநாட்டை மொரீஸியசுக்கு! இலங்கைக்கு அதிர்ச்சி!!
கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தப்படவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை மொரீஸியசுக்கு மாற்றும் முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழம்பெரும் நடிகை சுகுமாரி மரணம் |
உடலில் தீக்காயம் பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை சுகுமாரி மாரடைப்பால் காலமானார். |
74 வயதான சுகுமாரி சமீபத்தில் தன் தி.நகர் வீட்டில் விளக்கு ஏற்றும்போது புடவையில் தீ பிடித்து, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகுமாரியை நேரில் சென்று நலம் விசாரித்தார். முதல்வர் ஜெயலலிதாவுடன் பல படங்களில் நடித்துள்ளார். இருவரும், நெருக்கமான நட்பு கொண்டவர்கள். இந்நிலையில் சுகுமாரி இன்று மாரடைப்பால் காலமானார். சுகுமாரியின் இறுதிச்சடங்குகள் நாளை(27.03.13) |
|
காணாமற்போனோர் தொடர்பில் 3,000 முறைப்பாடுகள் ஜெனிவாவில் சமர்ப்பிப்பு |
காணாமற்போனவர்கள் தொடர்பில் எமது அமைப்பிடம் பதிவு செய்யப்பட்ட 5 ஆயிரம் பேர் தொடர்பான முறைப்பாட்டில் 3 ஆயிரம் பேரின் முறைப்பாடுகள் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
|
திருமண வாழ்க்கைக்கு தகுதியில்லாதவர் பாடகர் ராஜேஷ் கிருஷ்ணன்: மனைவி குற்றச்சாட்டு |
தமிழில் ‘வட்டாரம்‘ உள்ளிட்ட சில படங்களில் பாடிய பிரபல சினிமா பின்னணி பாடகர் ராஜேஷ் கிருஷ்ணன். |
கன்னட திரையுலகில் முன்னணி பாடகராக உள்ள இவர் தெலுங்கிலும் சில பாடல்களை பாடி உள்ளார். மூவாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி இவர் கர்நாடக அரசிடம் சிறந்த பாடகருக்கான நந்தி விருது பெற்றுள்ளார். ராஜேஷ் கிருஷ்ணாவுக்கும் கன்னட பாடகி ரம்யாவுக்கும் கடந்த 2011 நவம்பரில் கொல்லூர் முகாம்பிகை கோவிலில் திருமணம் நடைபெற்றது. ராஜேஷ் கிருஷ்ணா ஏற்கனவே இரண்டு தடவை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். மூன்றாவதாக ரம்யாவை மணந்தார். இவர்கள் திருமண வாழ்க்கையும் ஒரு வருடத்தில் முறிந்தது. கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்தனர். இந்த நிலையில் ரம்யா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜேஷ் கண்ணா திருமண வாழ்க்கைக்கு பொருத்தமில்லாதவர். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் பலகீனமாக இருக்கிறார் என்று ரம்யா குற்றம் சாட்டி உள்ளார். |