-
9 அக்., 2013
8 அக்., 2013
தோழர் தியாகுவைக் காவல்துறைக் கட்டாயப்படுத்தி 7வது நாளான இன்று ராயப்பேட்டை பொது மருத்துவமனைக்கு வள்ளுவர் கோட்டம் உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்துச் சென்றது. அவர் நலமுடன் இருக்கிறார், உணவு மருந்து மறுப்பு என்பதில் பின்வாங்காமல் பட்டினப்போரை மருத்துவமனையில் இருந்தபடியேத் தொடர்கிறார்.
நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்! இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசைப் பங்கேற்கவிடாமல் தடுக்க வேண்டும் எனும் அவரது முக்கியக் கோரிக்கையை மக்களிடன், நண்பர்களிடம், மாணவர்களிடம் எடுத்துச் சென்று அதைத் தமிழகத்தின் ஒருமித்தக் கோரிக்கை ஆக்குவது...
இந்தக் கோரிக்கையை வென்று தோழர் தியாகுவின் உயிரைக் காப்போம்...
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் டைரக்டர் சற்குணம் மீது நடிகை நஸ்ரியா புகார்
‘‘நய்யாண்டி படத்தில் என் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியில், நான் கவர்ச்சியாக நடிக்க மறுத்தேன். எனக்குப்பதில் ஒரு ‘டூப்’ நடிகையை பயன்படுத்தி, அந்த பாடல் காட்சியை படுகவர்ச்சியாக டைரக்டர் சற்குணம் படமாக்கியிருக்கிறார்’’ என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகை நஸ்ரியா புகார் செய்து இருக்கிறார்.
புகார்
தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘நய்யாண்டி.’ இந்த படத்தில், தனுஷ் ஜோடியாக நஸ்ரியா நடித்து இருக்கிறார். சற்குணம் டைரக்டு செய்திருக்கிறார். கதிரேசன் தயாரித்துள்ளார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்த நிலையில், டைரக்டர் சற்குணம் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகை நஸ்ரியா ஒரு புகார் கொடுத்து இருக்கிறார். அதில், ‘‘நான் நடிக்க மறுத்த காட்சியில், ‘டூப்’ நடிகையை நடிக்க வைத்து படுகவர்ச்சியாக டைரக்டர் சற்குணம் படமாக்கி இருக்கிறார்’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
பேட்டி
இதுபற்றி ‘தினத்தந்தி’ நிருபரிடம் நடிகை நஸ்ரியா கூறியதாவது:–
‘நய்யாண்டி’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில், கதாநாயகன் என் வயிற்றை தடவுவது போலவும், நான் உணர்ச்சிவசப்படுவது போலவும் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சற்குணம் என்னிடம் கேட்டார். அந்த காட்சியில் நடிக்க நான் மறுத்து விட்டேன்.படப்பிடிப்பு முடிந்து நான் போன பிறகு எனக்கு தெரியாமல், ஒரு ‘டூப்’ நடிகையை அந்த காட்சியில் நடிக்க வைத்து இருக்கிறார்கள். படத்தின் ‘டிரைலரை’ பார்த்தபோதுதான் இதை கண்டுபிடித்தேன். நான் அணிந்திருந்த அதே சேலையை அந்த ‘டூப்’ நடிகை அணிந்திருக்கிறார். அவர் வயிற்றை கதாநாயகன் தடவுவது போலவும், அந்த ‘டூப்’ நடிகை கையினால் ஒரு ‘மைக்’கை பிடிப்பது போலவும் படுகவர்ச்சியாக அந்த காட்சியை படமாக்கி இருக்கிறார்கள்.
மன உளைச்சல்
இதுபற்றி டைரக்டர் சற்குணத்திடம் கேட்டபோது, ‘‘அந்த காட்சியில் நீ நடிக்க மறுத்ததால், டூப் நடிகையை நடிக்க வைத்தேன்’’ என்று கூறினார்.கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் எல்லோரும் பார்க்கிற மாதிரி நாகரீகமாகவே நடித்து வருகிறேன். என்னை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள்.நான் நடிக்காத ஒரு காட்சியில், என் அனுமதி இல்லாமல், ‘டூப்’ நடிகையை பயன்படுத்தி நான் நடித்தது போல் காட்டுவது, மிகப்பெரிய மோசடி. என்னையும் ஏமாற்றி, ரசிகர்களையும் ஏமாற்றுவது போல் ஆகும். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
நீக்க வேண்டும்
டிரைலரிலேயே இந்த அளவுக்கு ஆபாசமாக இருந்தால், படத்தில் அந்த காட்சி எந்த அளவுக்கு இருக்கும்? என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.‘டூப்’ நடிகையை பயன்படுத்தி எடுத்த அந்த படுகவர்ச்சியான காட்சியை படத்தில் இருந்து நீக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் புகார் செய்திருக்கிறேன்.’’இவ்வாறு நஸ்ரியா கூறினார்.
ஆஸி. செல்லவிருந்த 46 பேர் பேருவளை பொலிஸாரால் கைது
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல தயாரார் நிலையில் இருந்த 46 பேரை பேருவளை பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
7 அக்., 2013
கிழக்கில் முஸ்லிம் மக்களின் காணி பிரச்சினை தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மு.காங்கிரஸ்
கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட உள்ளது.
இணையத்தளங்கள் வெளியிடும் செய்தியில் உண்மையில்லை!
இணையத்தளங்கள் சில “அனந்தி, முதலமைச்சர் விக்னேஸ்வரன்அவர்கள் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்ய மாட்டேன் என கூறியதாகவும் அனந்தி 12ஆம் திகதி சமாதான நீதவான் அல்லது சத்தியபிரமாண ஆணையாளர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்ய இருப்பதாகவும் மாகாணசபையில் கலந்து கொள்ளும் முதலாவது கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்க இருப்பதாகவும்” என விசமத்தனமான பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆகவே இந்த செய்தியில் உன்மை இல்லை என்பதனை எமது மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்..
தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் அமரர் ரவிவர்மாவுக்கு புளொட் அமைப்பு தனது அஞ்சலி தெரிவித்துள்ளது.
அவ் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தினக்குரல் பத்திரிகையின் பிரபல ஊடகவியலாளர் ரவிவர்மன் என்கின்ற பரமகுட்டி மகேந்திரராஜா மரணமடைந்த செய்தி எம்மையெல்லாம் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.
விக்கினேஸ்வரனின் பதவிப் பிரமாண நிகழ்வில் குர்சித் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்
இந்தியா முழுவதும் 2½ கோடி பேருக்கு இலவச செல்போன்களை மத்திய அரசு வழங்க இருக்கிறது.
இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கும் இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் 2½ கோடி பேருக்கு இலவச செல்போன்களை வழங்க முடிவு செய்திருக்கிறது.மின்னணு மயமாவதில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் குறைந்த விலையில்,
தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம்: விஜயநகரத்தில் ஊரடங்கு; கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு
தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் விஜயநகரம் பகுதியில் கலவரமாக வெடித்தது. இதனால் அந்த பகுதியில் நேற்று 2–வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அந்த பகுதியில் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
இலங்கையில் இனப்பிரச்சினை இன்னும் தீரவில்லை: திஸ்ஸ விதாரண
இடதுசாரி அரசியல்வாதியான பீட்டர் கொனமனின் 96வது ஜனன தினத்தை முன்னிட்டு மருதானையில் உள்ள அவரது சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
6 அக்., 2013
இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை பெண்ணொருவர் பலி
ஸ்பீட் வெல் மற்றும் மற்றும் பிரிக்பீல்ட்ஸ் வீதி சந்திக்கு அருகில் இந்த விபத்து நேற்று அதிகாலை 6.45 அளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இலங்கையில் பிறந்த 55 வயதான முத்துமனக்கா பின்ஹாமி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
புகைப்படத்தை பார்த்து கொலையா விபத்தா என்பதை தீர்மானியுங்கள் ( படங்கள் இணைப்பு)
இரண்டு பிள்ளைகளின் தந்தை செல்வராசாசிங்கம்.கஜந்தன் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் மர்மமான முறையில் இறந்து கிடக்க காணப்பட்டார். போக்கறுப்பு கேவிலிருந்து நேற்றிரவு 8மணியளவில் அம்பன் பகுதியில் மணல் ஏற்றுவதற்காக தனது உழவு இயந்திரத்தில் புறப்பட்டு சென்றார் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ரெலோ சார்பில் சிவாஜிலிங்கமும் புளொட் சார்பில் சித்தார்த்தனும் ஒரு அமைச்சை இரண்டரை வருடங்களுக்கு என்ற அடிப்படையில் பகிர்வதற்கும் ஈ. பி. ஆர். எல். எவ் சார்பில் ஜங்கரநேசனுக்கும் சர்வேஸ்வரனுக்கும் தலா இரண்டரை வருடங்களுக்கு பகிர்ந்து கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபைக்கான அமைச்சுப் பதவி தொடர்பாக ஏற்பட்டள்ள இழுபறிநிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் சார்பில் குருகுலராஜா கல்வி அமைச்சராகவும,
யாழில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம், பளை, போக்கறுப்பு பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் பேச்சு தொடரும் - சம்பந்தன்
ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு தொடரும். தமிழ் மக்களுக்குத் திருப்தியளிக்கக்கூடிய எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் முடிவுகளை நாம் எடுப்போம்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பதவியேற்பு முடிவுக்கு ஐ.தே.க., ஜே.வி.பி கட்சிகள் பாராட்டுகின்றன
வடமாகாண சபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ள
சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் ரத்து
சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் அனைத்தும் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் போராட்டம் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா சனிக்கிழமை தொடங்கியது. பேருந்து இயக்கப்படாததால் திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவத்துக்கு செல்லும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆரம்பாக்கம் என்ற இடம்வரை மட்டும் தமிழக பேருந்துகள் இயக்கப்பட்டன.
10 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டை: புத்தூரில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளை பிடித்த தமிழக போலீசார்
சேலம் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை, மதுரை பைப் வெடிகுண்டு வைத்த சம்பவங்களில் தொடர்புடைய பிலால் மா-க் ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் மற்றும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை போலீசார் 100க்கும் மேற்பட்டோர் புத்தூரில் முகாமிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து முற்றுகையிட்டனர்.
மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதி விபத்து!- யாழ். பல்கலை மாணவன் அச்சுவேலியில் பலி
விபத்தில் சாவகச்சேரி, கெருடாவில் பிரதேசத்தைச் சேர்ந்த சோதீஸ்வரன் கஜந்தன் என்ற மாணவன் உயிரிழந்துள்ளார்.
யாழ், அச்சுவேலி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
5 அக்., 2013
எதிர்வரும் 7ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9மணிக்கு கொழும்பில் ஜனாதிபதி முன்னிலையில் வடமாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
எதிர்வரும் 11ம் திகதி ஏனைய மாகாண அமைச்சர்களும் உறுப்பினர்களும் வடமாகாண முதலமைச்சர் முன்னிலையில் யாழ்ப்பணத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள்.
வடகிழக்கு வாழ் மலையக மக்களின் அரசியல் அபிலாஷைகளை பாதுகாக்கவென வடமாகாண சபையில் விசேடகுழு நியமிக்கப்பட வேண்டும்!
அடையாளம்,
சமூக ஆய்வு மையம்
மலையக சிவில் அமைப்புக்கள்
02-10-2013
கௌரவ இரா.சம்பந்தன்
தலைவர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இலங்கை.
பெருமதிப்பிற்குறிய கனம் ஐயா,
வட கிழக்கில் வாழும் மலையக மக்கள் தொடர்பானது!
5 மாணவர்கள் கடத்தல்! விசாரணையில் தவராசாவின் வாதத்தால் திடீர் திருப்பம்! ஜப்பான் தூதுவர் வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பாணை
மனுதாரர்கள் சார்பாக ஆட்கொணர்வு மனு விசாரணையில் சாட்சியம் அளிக்க முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்பொழுது ஜப்பான் வெளிநாட்டு தூதுவருமான வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பாணை விடுக்கும்படி நீதவான் நீதிமன்ற நீதிபதி நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்
4 அக்., 2013
250 கடல் மைல் தொலைவில் 65 பேருடன் தத்தளிக்கும் படகு! மீட்பு பணிக்காக இலங்கை கடற்படை கப்பல் அனுப்பி வைப்பு
இலங்கையில் இருந்து 250 கடல் மைல் தொலைவில் தென்கிழக்கு கடற்பரப்பில் இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்து வரும் படகில் உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
யாழ்.மாநகர சபையில் இடம்பெற்ற மோசடிகளுக்கு மேயர் யோகேஸ்வரிக்கும் தொடர்பு!– மனம்திறந்தார் விஜயகாந்த்
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டை வெடி வைத்து தகர்த்துள்ள படையினர்
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்தியதாக கூறப்படும் நிலத்தடி வீடு இராணுவத்தினரால் இன்று மாலை தகர்க்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீவிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
3 அக்., 2013
இத்தாலியில் கப்பல் மூழ்கியது : 100 பேர் பலி- 250 பேரை காணவில்லை
வட ஆப்ரிகாவில் இருந்து இத்தாலி வந்த ஒரு கப்பல் இன்று கடலில் மூழ்கியது. இதில் 100 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 82 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கப்பலில் 500 பேர் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 250 பேர் நிலை தெரியவில்லை என்றும் மீட்புபணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதிகாரப் பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 250 பேர் நிலை தெரியவில்லை என்றும் மீட்புபணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதிகாரப் பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகரை இந்து ஆலயத்தில் இராணுவத்தின் தலையீடு: நிறுத்துமாறுகோரி அரச அதிபருக்கு யோகேஸ்வரன் எம்.பி.மகஜர்
வாகரை ஆலங்குளத்திலுள்ள இந்து ஆலயங்களில் இராணுவம் தலையிடுவதை நிறுத்தி உதவுமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவசர மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
மட்டக்களப்பில் கடனை திரும்ப செலுத்த முடியாத பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் அதிகாரிகள்!- அதிர்ச்சி தகவல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழில் செய்ய கடனை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரிகள் கடனை திருப்பிச் செலுத்த முடியாத பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று அரசசார்பற்ற
கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்ததால் உயிரச்சுறுத்தல்: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஈழத்தமிழர் தகவல்
நடந்து முடிந்த வட மாகாண தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து செயற்பட்டதால் சில சிங்கள கட்சிகள் தன்னை அச்சுறுத்தி வருவதாக அதிவேக படகில் சென்று இந்தியாவில் இறங்கி பரபரப்பை ஏற்படுத்திய நபர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியல் அமைப்பின் 157 (அ) உறுப்புரையையும் அரசியல் அமைப்பிற்கான ஆறாவது திருத்தத்தையும், மீறியுள்ளதாக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த 6 மனுக்களும் இன்று பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ், நீதியரசர்களான சந்திரா ஏகநாயக, ரோகினி மாரசிங்க ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
1. இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி
2 அக்., 2013
முதல்வர் செய்த முதல் பணி

வடக்கு மாகாண முதலமைச்சராக நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட க.வி.விக்னேஸ்வரன் தனது முதல் பணியாக முதியோர் தினமான நேற்று சுழிபுரம் வழக்கம்பரை சிவபூமி முதியோர் இல்லத்துக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடினார்.
செங்கலடி படுகொலை: சந்தேகநபரான மகளை பிணையில் விடுவிக்கக் கோரி மனுத் தாக்கல்
சட்டத்தரணிகளான நிஸாம் காரியப்பர் மற்றும் ஏ.ஏ. றூமி ஆகியோர் இந்த மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர்.
செங்கலடியில் பிரபல வர்த்தகரான சிவகுரு ரகு அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் திகதி நள்ளிரவு படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டி குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
முதலாவது அரசவை நிறைவு! ஒக்ரோபர் 26ல் தேர்தல்! செயற்பாடுகள் விரிவாக்கப்படும்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
இதேவேளை வரும் (ஒக்ரோபர் 26) தேர்தல் மூலம் தெரிவாகும் இரண்டாம் அரசவையானது தனது பணிகளை தொடங்கும் வரை தற்போதைய அமைச்சரவை தொடந்து நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமர்
யாழ்.மாநகர சபையில் ஈ.பி.டி.பி யின் ஆட்சி மோசடிகள் நிறைந்ததே!- பகிரங்கமாக ஒப்புக் கொண்டார் மேயர்
யாழ்.மாநகர சபையில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
யாழ்.மாநகர சபையில் ஊழல் மோசடிகளிலும் நிர்வாக மோசடிகளிலும் ஈடுபட்டவர் ஈ.பி.டி.பி உறுப்பினர் விஜயகாந்த் ஆவார்.
1 அக்., 2013
கோச்சடையான் ‘சிங்கிள்’ அக்டோபர் 7 ரிலீஸ்!
கோச்சடையான் திரைப்படத்தின் டிரெய்லரில் ரஜினியை இளைமைத் துள்ளலுடனும், அதிரடியான வேகத்துடனும் கண்ட ரசிகர்கள் வாயடைத்துவிட்டனர்.
கோச்சடையான் பெரும்பாலும் ரஜினியின் பிறந்தநாளன்று ரிலீஸாகும் என்று ஒரு பேச்சு நிலவிவந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கிறது
யாழ்.மாவட்டத்தில் ஏழாலையைச் சேர்ந்த மாணவன் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம்
நடந்து முடிந்த 2013ம் ஆண்டு தரம்- 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலையில் கல்வி பயிலும் மாணவனான பரமானந்தம் தனுராஜ் 194 புள்ளிகளை பெற்று யாழ். மாவட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)