கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7 மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி வந்த சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹெல்பொட நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
-
10 அக்., 2019
9 அக்., 2019
தேர்தலை பகிஸ்கரிப்பதே எமது கட்சியின் முடிவாகும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
இந்தத் தேர்தல் எங்களுடையது இல்லை. எனவே இத் தேர்தலை பகிஸ்கரிப்பதே எமது கட்சியின் முடிவாகும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணயின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
போர் குற்றம் புரிந்த அனைவரையும் பதவியேற்ற மறுநாள் விடுதலை செய்வேன் கோத்தாபயபு
பொய்க் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போர் வீரர்கள் அனைவரையும் பதவியேற்ற மறுநாள் விடுதலை செய்வேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.
ஒதுங்கினார் மைத்திரி - நடுநிலை வகிக்க முடிவு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்காலிகமாக விலகியிருக்கவும், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலை வகிக்கவும், முடிவு செய்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி, கோத்தாபய ராஜபக்சவுக்கு
சஜித்துடன் போகொல்லாகம - கோத்தாவுடன் துமிந்த, முஸம்மில்
முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகம ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்
|
பொலிசாரின் பொய் வழக்கு - ஆறுதல் அளிக்கும் தீர்ப்பு
மாவீரா் நாளை ஒட்டி மாணவா்களுக்கு புத்தக பைகளை வழங்கியதாக குற்றஞ்சாட்டி, பின்னா் வீடொன்றில் கொள்ளையிட்டதாக குற்றஞ்சாட்டி சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான தமக்கு ஆறுதலளிக்கும் வகையில் நீதி கிடைத்துள்ளதாக புன்னாலைகட்டுவன் பகுதியை சோ்ந்த து.லோகேஸ்வரன் என்பவா் தெரிவித்தார்.
மாதகலில் கைப்பற்றப்பட்ட 8 கிலோ தங்கத்துக்கு நடந்தது என்ன?
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, அனுராதபுரம் ' சந்த ஹிரு சேய' நினைவுத் தூபியில் வைப்பதற்காக தங்கத்தினாலான சமாதி நிலை புத்தர் சிலையை அமைக்க, யாழ்.மாதகல் கடலில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கத்தில்
ரெலோவில் இருந்து நீக்கப்பட்டார் சிவாஜிலிங்கம்!
சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள எம்.கே.சிவாஜிலிங்கம், ரெலோவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
8 அக்., 2019
யாழ். மாநகரசபை உறுப்பினருக்கு கோத்தா ஆதரவாளர்கள் அச்சுறுத்தல்
ள்ளிரவில் தனது வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என தடுத்த யாழ்.மாநகர சபை உறுப்பினருக்கு கோத்தாபய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
வாகனம் மோதி தள்ளியதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பலி-முல்லைத்தீவு
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு முன்பாக நேற்று (07) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.
ஒரே நாளில் 96 முறைப்பாடுகள்
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது என்று கெபே அமைப்பு தெரிவிக்கின்றது.
இவ்வாறு பதிவாகியுள்ள முறைப்பாடுகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட நேற்றைய தினமே அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகிள்ளதாக அந்த அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி
சிவாஜிக்கு மனோ நோய்: சீறும் டெலோ?
எந்த தேர்தல்கள் வந்தாலும் சிவாஜிலிங்கம் போன்றவர்களுக்கு மனநோய் ஏற்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழீழ
7 அக்., 2019
சிவாஜிலிங்கத்திற்கு மீன் சின்னம்.!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு மீன் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தேர்தலில் போட்டியிடும் தனக்கும் அனந்தி சசிதரனிற்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால்
பலாலியிலிருந்து சென்னை விமானசேவை இல்லவேயில்லையாம்
சென்னை விமானசேவை இல்லவேயில்லையாம்?
கட்டுநாயக்காவிலிருந்து சென்னைக்கான விமானசேவையே கூடிய வருவமானத்தை அரசுக்கு தருவதாலேயே அதனை பலாலியிலிருந்து ஆ
6 அக்., 2019
Breaking News
------------------------
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிகோத்தாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்த நிபந்தனைகளும் இன்றி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி
பிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறை ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதைபந்தாட்ட வீரர்களின் தெரிவு அணியின் இளம் வீரர்களான தமிழீழ அணியானது அவ்வப்போது பிரான்சிலும் ஐரோப்பிய ரீதியிலும் போட்டிகளில் பங்கொண்டு வந்திருந்தனர்.
ஊடகவியலாளர் குணரத்தினம் ஜனாதிபதி வேட்பாளரானார்
சுயாதீன ஊடகவியலாளர் சுப்பிரமணியம் குணரத்தினம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
பிரதமர் வி.உருத்திரகுமாரன் - தொல்.திருமாவளவன் அமெரிக்காவில் சந்திப்பு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களுக்கும், தமிழகஎவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தொல்.திருமாவளவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது
ப.சிதம்பரம் வயிற்று வலியால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 21ந்தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், நீதிமன்ற காவலில் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
5 அக்., 2019
சுதந்திரக் கட்சியின் முடிவு இன்று
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நண்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதி தேர்தல், தேர்தல் கூட்டணி மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
4 அக்., 2019
புலிகளை அழிப்பதற்கு ஒத்துழைத்த சர்வதேசம் இனப்பிரச்சினையை தீர்த்துவைக்க வேண்டும் – சம்பந்தன்
விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய நிலையில், இனப்பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு அதிக பிரயத்தனம் கொள்ளவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமையை பெற்றது சட்டபூர்வமானது; கோட்டா தேர்தலில் போட்டியிடலாம்: மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச இலங்கை குடியுரிமையை பெற்றது சட்டபூர்வமற்றதென தீர்ப்பளிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. . இதன்மூலம், ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய
நீதி தோற்றது! கோத்தாவிற்கு வெற்றி
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்க கூடாது எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இடைக்காலத் தீர்ப்பு இன்று (04) சற்றுமுன் வழங்கப்பட்டது.
யாழ். இந்துக்கல்லூரி அதிபருக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலனனின் விளக்கமறியல் வரும் 15ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது
இளையராஜாவுக்கு இடையூறு! பிரசாத் ஸ்டூடியோ மீது காவல் நிலையத்தில் புகார்
இசையமைப்பாளர் இளையராஜாவின் உதவியாளராக இருப்பவர் ஜாபர். இவர் விருகம்பாக்கம் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், "இசையமைப்பாளர் இளையராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 40 வருடங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளரான
எனக்கு செக் வைக்கவில்லை - சிவிகே
இன்றைய உதயன் நாளிதழில் தன்னைப் பற்றி வெளியான செய்தி போலிச் செய்தி என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
கோத்தாவிற்கு பதிலாக சமல் அல்லது சிராந்தி?
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச அவர் மீதான வழக்கு காரணமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை
கோத்தாவின் தலை விதியை தீர்மானிக்கும் தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் இரட்டை குடியுரிமை தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் வழக்கின் தீர்ப்பு இன்று
அமெரிக்கா மீது பாயும் கோத்தா அணி!
இலங்கைக்கான அமெரிக்க பிரதி தூதுவர் மார்டின் டீ கெலி மற்றும் அரசியல் தலைமை அதிகாரி ஆகியோர் இதொகா தலைவர் ஆறுமுகன் தொண்டமானை சந்தித்தமை குறித்து மகிந்த அணி கடும் சீற்றம் அடைந்துள்ளது.
பொதுவேட்பாளரை தேடும் தமிழர் தரப்பு
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் நிறுத்துவதற்காக கட்சி சார்பற்ற பொதுவேட்பாளரை ஒருவரை அடையாளம் காணும் முயற்சியில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் தீவிரமான ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பந்தன் – விக்னேஸ்வரன் ஒருமித்த முடிவு! தமிழர் அரசியலில் திடீர் திருப்பம்?
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளை ஓரணியில் திரட்டி, பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்கள் இன்று வடக்கு முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரனை சந்தித்தனர்.
யாழில் முதியவரின் கைவரிசையால் பாடசாலை மாணவி 03 மாத கர்ப்பம்
யாழில் முதியவரின் கைவரிசையால் பாடசாலை மாணவி 03 மாத கர்ப்பம்
யாழில் 62 வயது முதியவரால் தொடர் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமி 3 மாத கர்ப்பவதியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
3 அக்., 2019
தமிழ் வேட்பாளரை முன்மொழிந்துள்ளேன்சாள்ஸ் நிர்மலநாதன்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் அரசியல் கட்சிகள் பேதமின்றி ஒற்றுமையாக ஒரு நடுநிலையான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவுசெய்ய வேண்டிய தேவை உள்ளதாகவும் அவ்வாறான ஒருவரை தாம் பரிந்துரைத்துள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு அங்கீகாரம்
பலாலி விமான நிலையத்தை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்வதற்கு, அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்ப்பித்த பரிந்துரை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சஜித்துக்கு அதிகாரபூர்வமான அங்கீகாரம்
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கு கட்சி மத்தியசெயற்குழு எடுத்த முடிவுக்கு, கட்சியின் சம்மேளனம் இன்று ஏகமனதாக அங்கீகாரம்
2 அக்., 2019
கோத்தாவின் வாயை மூடி வைத்துள்ள சட்டத்தரணிகள்
ஊடகங்கள் முன் கருத்து தெரிவிப்பதை தவிர்க்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ சட்ட ஆலோசனையின் அடிப்படையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தவிர்த்து வருகிறார் என அவரது பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளா
|
1 அக்., 2019
தமிழீழம் தர மாட்டேன் சஜித் பிரேமதாச திட்டவட்டம்.
தமிழீழம் தர மாட்டேன் சஜித் பிரேமதாச திட்டவட்டம்.
இன மத ரீதியிலான முரண்பாடுகளுக்கு இனிவரும் காலங்களில் இடமளிக்கப்படமாட்டாது. அதேவேளையில் இந்நாட்
சஜித் - மைத்திரி இன்றிரவு சந்திப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று பேச்சு நடத்தவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஜனாதிபதியிடம் விடுத்த எழுத்து மூலமான கோரிக்கையை
ஆனையிறவு, நாவற்குழியில் சோதனைச் சாவடிகள்
ஆனையிறவுப் பகுதியில் மீண்டும் நேற்று தொடக்கம் இராணுவச் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியிலும் இராணுவச் சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
30 செப்., 2019
இன்று ஐதேக- கூட்டமைப்பு முக்கிய சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும்
மொட்டை கைவிட்டால் தான் கோத்தாவுக்கு ஆதரவு
பொதுச் சின்னத்தில் போட்டியிட இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றும், ஸ்ரீ சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கும் நோக்கிற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் கட்சியின் உறுப்பினர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும்
அடையாள அட்டைகள் இரண்டு உள்ளதா?போட்டியில் இருந்து விலகுவார் கோத்தா?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த வாரம் போட்டியில் இருந்து விலகுவார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ராஜித சேனாரட்ன
பிக்பாஸ் 3-வியாபார உத்தியின் பின்னணிமுகின் வெற்றியாளராக்கப்பட வேண்டிய தேவையின் பாதையில் தடைக்கல்லாக இருந்த தர்ஷன் வெளியேற்றப்பட்டான்?!!
பெரிய நிறுவனங்கள் நிலையான வெற்றிக்காக(Sustainable success) காலத்திற்க்கு காலம் வியாபார உத்திகளை( Business strategies) வடிவமைப்பது வழமை.
10 ஆயிரம் ரூபாய் பணத்துக்குகொலை செய்த வித்தியா கொலை குற்றவாளி உட்பட இருவருக்கு மரண தண்டனை!
மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும் மற்றும் ஒருவருக்கு பிறிதொரு கொலை வழக்கில் மரண தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்றம்
29 செப்., 2019
சரிவுகளை சந்தித்துவரும் கனடா ஆளும் லிபரல் அரசு
கனடாவின் மத்திய அரசிற்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 21ந் திகதி நடைபெறவூள்ளது. கனடாவின் பெரும் அரசியல் கட்சிகளும் தமது தேர்தல் பிரச்சாரங்களை முழுவேகத்தில் நடத்தி வருகிறார்கள்.
மாணவி வித்தியா கொலை வழக்கு யாழ்,மேல் நீதிமன்றம் விடுத்துள்ள முக்கிய உத்தரவு
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில்
சிறுமியான சகோதரியை சீரழித்த சகோதரன்
மட்டக்களப்பு - திராய்மடு பிரதேசத்தில் 15 வயது சிறுமியான சகோதரியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 20 வயதுடைய சகோதரனை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு - திராய்மடு பிரதேசத்தில்
தர்சன் வெளியேற்றப்பட்டாரா விஜய் டி வி இன் ஏமாற்று வேலை இந்த வாரம் வாக்கெடுப்பில் சாண்டிக்கும் தர்சனுக்கும் கடும் போட்டி இருந்தது லூசலியாவும் செறினும் 3 ஆம் 4 ஆம் இடங்களிலேயே இருந்து வந்தார்கள் சைக்கிளோடும் போட்டியிலேயே தர்சன் தான் வெல்வார் அல்லது இரண்டாவது இடத்திலாவது வருவார் என்ற முடிவை உணர்ந்து தர்சனின் சைக்கிளில் முகிநின் படத்தை வைத்து மூகினுக்கு கோல்டன் டிகேடடை முறையற்ற முறையில் வழங்கி ஏமாற்றினார்கள் பிஜிபோஸ் சொன்னதன்படியே சைக்கிளில் உட்க்கார வைத்ததினால் இந்த ஏமாற்று திடடம் உண்மை ஆகியுள்ளது
28 செப்., 2019
வேலணை பிரதேசசபையின் தவிசாளரின் ஊழல் வெளிப்பட்டது உறுப்பினர்கள் வெளிநடப்பு நயினாதீவில் 27 கிணறுகளை தூர் வாரியதாக கணக்கு கா ட்டிய த விசாளர் ஈ பி டி பி கருணாகரமூர்த்தியின் கள்ளக்கணக்கினை எதிர்த்து ஈ பி டி பி உறுப்பினர்கள் உட்பட பெரும்பாலானோர் வெளிநடப்பு செய்தனர் மொட்டு உறுப்பினர் போல் சிவராசா மட்டுமே சபையில் இருந்தார் வெறும் மூன்று கிணறுகளை மட்டுமே இறைத்து விட்டு 27 கிணறுகள் என பெரும் ஊழல் கணக்கொன்றை சபையில் சமர்பித்திருந்தார் தவிசாளர்
தொடரும் தமிழ் இனப்படுகொலை' ஆவணக் கையேடு ஜெனிவாவில் வெளியிடப்பட்டது
இலங்கையில் 'தொடரும் தமிழ் இனப்படுகொலை' என்ற பெயரில் சிறு ஆவண புத்தகக் கையேடு ஒன்று மே பதினேழு இயக்கத்தினால் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் பக்க அரங்கிற்குள் வெளியிடப்பட்டது. மே பதினேழு இயக்கம் சார்பாக தோழர் விவேகானந்தன் முன்னின்று வெளியிட்டார்.
சுன்னாகத்தில் பிரதேச சபை உறுப்பினர் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!
யாழ்ப்பாணம்- சுன்னாகம், அளவெட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள, வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினரான யோகாதேவி ரவிச்சந்திரனின் வீட்டின் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்துசம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர்
சொந்த தொகுதியை வெல்ல முடியாதவர் நாடு முழுவதும் வெற்றி பெறுவாரா?
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சஜித் பிரேமதாச பொதுஜன பெரமுனவிற்கு சவாலானவர் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
27 செப்., 2019
தொலைக்காட்சி,வானொலி ஏதேனும் தடை இடம்பெறுமாயின் நடவடிக்கை-தேர்தல்கள் ஆணைக்குழு
இம் முறை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் பொழுது தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகளினால் ஏதேனும் தடை இடம்பெறுமாயின் அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் பேசியே தீர்மானிப்போம்புதிய அரசியல் யாப்பு குறித்து உத்தரவாதம் தருபவருக்கே ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தமிழ் மக்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் பேசியே தீர்மானிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கூட்டமைப்பின் ஆதரவை பெறுவது முக்கியம்- ரணில்
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிகளின் முழுமையான ஆதரவை பெற்றதை போலவே தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் ஏனைய கட்சிகளினதும் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற
தீவிபத்தில் சிக்கிய இளம்பெண் மரணம்
தேநீர் வைப்பதற்காக மண்ணெண்ணெய் அடுப்பினை பற்ற வைத்த போது ஏற்பட்ட தீவிபத்தினால் உடல் முழுவதும் எரி காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் நேற்றுமுன்தினம் மாலை உயிரிழந்தார்
ஒருமித்த நாட்டுக்குள் அதிஉச்ச அதிகாரப்பகிர்வு
ஒருமித்த நாட்டுக்குள் அதிஉச்ச அதிகாரப்பகிர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச, தெரிவித்துள்ளார்.
மல்வத்த பீடத்தின் அனுநாயக்கர் தமிழர்களுக்கு எச்சரிக்கை
முல்லைத்தீவு நீராவியடி பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து, மல்வத்த பீட அனுநாயக்கர் திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்மாபிதான தேரர் தமிழ் மக்களை கடுமையாக எச்சரிக்கை செய்யும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
26 செப்., 2019
வாக்குறுதியை அடுத்து போராட்டம் நிறுத்தம்!
யாழ். பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான நிறுவனத்தின் ஊழியர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் நியமனத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுத்து வந்த சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
ஐதேக வேட்பாளர் இன்று அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்று இறுதி முடிவு எட்டப்படும் என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்று இறுதி முடிவு எட்டப்படும் என அமைச்சர் ரஞ்சித் மத்தும
பார்த்துக்கொண்டிருந்த விட்டு இப்போது காலம் கடந்த உபதேஹஸம் செய்யுமஆளுனர் ஆளுநர் நினைத்தாள் டர்ஹாடுத்திருக்கலாம் எதுவும் செய்யும் அதிகாரம் கொண்டவர் ஆளுநர் எல்லாம் வேஷம் தமிழ் வாக்குகள் வேண்டுமெனின் ஜனநாயகத்திற்கு மதிப்பளியுங்கள்
சமாதானத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான வகையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை புறந்தள்ளி எவரும் செயற்பட முடியாது. நீதிமன்றம் கூறும் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாக இருக்க வேண்டும்.
தலையின்றி முதியவர் சடலமாக மீட்பு
அம்பாறை, திருக்கோவில் நேருபுரம் தாண்டியடி மயானப் பிரதேசத்தில் ஆடு மேய்க்க சென்ற முதியவர் தலையின்றி நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 65 வயதான மாரிமுத்து முனிசாமி எனும் முதியவரே
திருடச் சென்றவர் கிணற்றில் விழுந்து மரணம்
யாழ்ப்பாண நகரில் உள்ள வீடொன்றில், திருடச் சென்றார் என சந்தேகிக்கப்படும் ஒருவர், கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவர் கிணற்றுக்குள் விழுந்த சத்தம் கேட்டதையடுத்து, அங்கு சென்று பார்த்த வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
புலிகளுக்கு பயந்து கோழை போல ஒளிந்தவர் கோத்தா!
விடுதலைப் புலிகளுடனான போரின்போது கோத்தாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி ஒரு கோழை போல் மறைந்திருந்தார் என்றும், அவரது சகோதரர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்தே நாடு திரும்பினார் என்றும் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் துரோகத்தனமே இனப்படுகொலையானது; ஐநாவில் வேல்முருகன்
சுவிற்சர்லாந்து, தமிழ்நாடு
ஐரோப்பிய ஒன்றியத்தின் துரோகச் செயலே தமிழினப்படுகொலைக்கு காரணமானது என தமிழக வாழவுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட முடியாது; ஐ.நா அவையில் விவேகானந்தன்
தமிழீழ விடுதலையை நோக்கிய தமிழர்களின் சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட முடியாது. தமிழீழ விடுதலைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் மே பதினேழு இயக்கம்vவலியுறுத்தியுள்ளது.
24 செப்., 2019
பிக்குகளின் அடாவடி - தலைகுனிவு என்கிறார் ரணில்
“ விகாராதிபதியின் உடலை வைத்து பௌத்த பிக்குகள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளனர் என்றும், நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய இவர்களின் அடாவடியினால், நாம் வெட்கித் தலைகுனிகின்றோம் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
23 செப்., 2019
வடக்கு அதிபர்களுக்கு ஆளுநர் கடும் உத்தரவு!
வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் மாணவர்கள் அனுமதியின் போது, கல்வியமைச்சின் சுற்றறிக்கையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது எனவும்
சட்டத்தரணிகள், பூசகரை தாக்கிய பிக்குகள்
முல்லைத்தீவில், நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்த சமயத்தில், பௌத்த பிக்குகளால் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட மூவர் வைத்தியசாலையில்
|
பொய் சொல்கிறார் ஜனாதிபதி
சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்கவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்குமாறு தான் ஒருபோதும் பரிந்துரை செய்யவில்லை என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் இரகசிய வாக்கெடுப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை வரும் வியாழக்கிழமை கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
22 செப்., 2019
ரணில் - சஜித் இன்று முக்கிய சந்திப்பு
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.
20ஐ நிறைவேற்றுங்கள் - சுமந்திரன் சவால்
ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பிற்பாடு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பீர்களெனின் அதற்கு முன்கூட்டிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் இப்போதே பாராளுமன்றத்தில் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்று சவால் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
21 செப்., 2019
கோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகள்!
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, 2005 ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜையாக இருந்தபோது ஹம்பாந்தோட்டை - மெதமுலன வாக்காளர் இடாப்பில் பெயர் உள்வாங்கப்பட்ட விதம், குறித்த ஆண்டு
இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா -வடமாகாண ஆளுநர் சந்திப்பு
3 ஆவது இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (20) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.
20 செப்., 2019
ஐக்கிய தேசிய கட்சி அழிந்துவிட்டது-மஹிந்த ராஜபக்
தேர்தல்கள் ஆணையகம் ஜனாதிபதி தேர்தலை அறிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்காக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் மோசடி என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
திரு. பொன்னையா தனபாலசிங்கம் அவர்களுக்கு மாமனிதர் என்ற அதியுயர் தேசியவிருது
தமிழீழ விடுதலைப் புலிகள் - பெல்ஜியம் கிளையின் நீண்டகாலப் பொறுப்பாளர் திரு. பொன்னையா தனபாலசிங்கம் அவர்கள், கடந்த 16.09.2019 அன்று உடல் நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம் நெஞ்சங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணநீதிமன்றில் பொலிஸ் அதிகாரியின் கன்னத்தில் அறைந்த கைதி
யாழ்ப்பாண நீதிமன்றக் கட்டடத்துக்குள் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய, சந்தேகநபருக்கு மீது மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்காக நேற்றுமுன்தினம் பிற்பகல்
கனடா நீதிமன்றில் சாட்சியாகும் தர்ஷிகாவின் கதறல் சத்தம்!]
கனடாவில் கணவனால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட தர்ஷிகா ஜெகநாதன் இறக்க முன்ன அவசர தொலைபேசி இலக்கத்துக்கு ஏற்படுத்திய அழைப்பு மற்றும் அவரது கதறல் ஒலிப்பதிவு நீதிமன்றத்தில் முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்படவுள்ளது.
கோத்தாவுக்கும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஷவுக்காக, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் இன்று கட்டுப்பணத்தை, செலுத்தியுள்ளார். பொதுஜன பெரமுன மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களுடன் தேர்தல் செயலகத்துக்குச்
கைதான இந்து கல்லூரி அதிபர்3 திகதி வரை மறியலில் ?
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலன் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்சம் பெற்றுக் கொண்டமைக்கான போதிய ஆதாரங்களுடன் அவர் இன்று நண்பகல் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
|
இந்த விடயம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் அனுமதிக்காக 50 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொண்டதற்கான உரிய ஆதாரத்துடன் அதிபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன
|
இலஞ்சம் வாங்கிய வேளை கையும் மெய்யுமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 50 ஆயிரம் ரூபா
19 செப்., 2019
50 ரிஐடி அதிகாரிகள் மீது சித்திரவதை குற்றச்சாட்டு
இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் 50 அதிகாரிகள் சித்திரவதை சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையின் பயங்கரவாத தடுப்பு
மைத்திரியை வேட்பாளராக நிறுத்துவோம்
பொதுஜன பெரமுனவுடன் நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளராக நிறுத்தும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நவம்பர் 16இல் ஜனாதிபதி தேர்தல்- இன்று தொடக்கம் கட்டுப்பணம்
2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது, இதனை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல்
18 செப்., 2019
இறுதிப்போாில் கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்க்கு சாட்சிகள் உண்டு..! மீனுக்கு பூனை காவலா? யஸ்மின் சூக்கா அதிரடி..
இலங்கை உள்நாட்டு போாில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை. என கொத்து குண் டுகள் தொடா்பான உடன்படிக்கைக்கு தலமை தாங்கும் இலங்கை பாதிக்கப்பட்ட மக்கள் கூறும் உண்மைகளை பொய்களால் மறுக்கின்ற
கவின் திடடம் போடடே நடிக்கிறார் அப்பாவி அல்ல அவர் சேரனும், கவினும் அனுதாபத்திற்கு இப்படி செய்கிறார்கள்...அதிரடி காட்டிய தர்ஷன்
கவின் தெரிந்தே எல்லாம் செய்கிறார் மக்களிடம் தன்பக்க ஈர்ப்பை உண்டு பண்ண தன மீது ஒரு ரொமான்டிக் காதல் கிசு கிசு எதிர்பார்ப்பு சுவாரஸ்யத்தை மக்கள் எதிர்பார்க்க வேண்டும் என்றே அவர் இப்படி
நவம்பர் 16 அல்லது 23இல் ஜனாதிபதித்தேர்தல்
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது 23 ஆம் திகதி இடம்பெறலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
ஜனாதிபதியின் குற்றச்சாட்டு -மறுக்கிறது மகிந்த அணி!
$தாமரைக் கோபுரம் அமைக்கும் பணியில் 200 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது என்று தெரியாதுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது. இன்று நாடாளுமன்றத்திலும் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)