-

19 நவ., 2012


போர்க்காலத்தில் ஐ.நா. தன் கடமைகளைச் செய்ய தவறியது :- கருணாதிலக அமுனுகம
ஐ.நா.அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள உள்ளக அறிக்கை குறித்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எந்த விளக்கத்தையும் அளிக்கப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து 340/5
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடை பெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 521 ரன் குவித்தது. புஜாரா இரட்டை சதமும் (206), ஷேவாக் சதமும் (117)
தி.மு.க. மட்டும் தான் பொதுபிரச்சினைக்கு ஐ.நா.வரை சென்றுள்ளது: டி.ஆர்.பாலு பெருமிதம்
மறைந்த புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க செயலாளர் பெரியண்ணனின் 16-வது ஆண்டு நினைவு நாள் தி.மு.க.பொதுக்கூட்டம் புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர்


அரசு மரியாதையுடன் பால்தாக்கரே உடல் தகனம் 


பால்தாக்கரேவின் மறைவால் மும்பையில் கார், ஆட்டோக்கள் முற்றிலுமாக இயங்கவில்லை
86 வயதான சிவசேனா தலைவர் பால்தாக்கரே மும்பையில் 17.11.2012 மாலை மரணம் அடைந்தார். இதையடுத்து மும்பை நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பால்தாக்கரேயின் இறுதிச்சடங்கில் அத்வானி, சுஷ்மா, அம்பானி, சினிமா நட்சத்திரங்கள்
சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரேயின் இறுதிச்சடங்குகள் இன்று மாலை சிவாஜி பூங்காவில் நடைபெறுகிறது. பால் தாக்கரேவின் உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்த மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான சரத்பவார், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, சுஷ்மா சுவராஜ் ,அருண் ஜெட்லி ,மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா ,தொழில் அதிபர் அம்பானி மற்றும் சினிமா நட்சத்திரங்கள் சிவாஜி பூங்காவிற்கு வந்துள்ளனர், 

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 221 ஓட்டங்களைப் பெற்றுள்ளது
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
ஆஸி.யிலிருந்து 50 புகலிடக் கோரிக்கையாளர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்
அவுஸ்திரேலியாவிலிருந்து 50 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

போலி ஏ.ரி.எம். அட்டைகள் மூலம் தொடரும் பண மோசடி : ரஷ்ய நாட்டவர் ஐவர் கைது
போலி எ.ரி.எம் அட்டைகளைப் பயன்படுத்தி வெள்ளவத்தைப் பகுதியிலுள்ள எ.ரி.எம் இயந்திரங்களிலிருலிருந்து பணமெடுத்த 5 ரஷ்ய நாட்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்

18 நவ., 2012


பால்தாக்கரே இறுதி ஊர்வலம்



பால் தாக்கரே இறுதி ஊர்வலம்


கேணல் பரிதி அவர்களின் வித்துடல் விதைப்பு நிகழ்வு 24 சனிக்கிழமை பிரான்சில் !
கேணல் பரிதி அவர்களின் இறுதி நிகழ்வு தொடர்பாக பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்:
துப்பாக்கி திரைப்பட சரச்சை : தமிழக முஸ்லிம்களை பார்த்து இலங்கை முஸ்லிம்கள் பாடம்கற்க வேண்டும் என உலமா கட்சி தெரிவிப்பு
முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்காக இத்திரைப்பட குழுவினர் முஸ்லிம்களிடம் மன்னிப்புக்கேட்டதை வரவேற்பதோடு இதற்காக ஜனநாயக

17 நவ., 2012


ராஜீவ் காந்தியைக் கொல்லும்படி பிரபாகரன் எனக்கு கட்டளையிடவில்லை : தீபாவளி சிறப்பு பேட்டியில் கேபி
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவாளராக செயற்பட்டு வந்து, தற்போது இலங்கை அரசுடன் கைகோர்த்து நடமாடும் ஐம்பத்தேழு வயது நிரம்பிய மயிலிட்டியைச் சேர்ந்த கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தீபாவளி சிறப்பு பேட்டியளித்திருந்தார்.

LATEST NEWS SWISS TIME 11.20
பால் தாக்கரே காலமானார்

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே 17.11.2012 சனிக்கிழமை மாலை 3.30 மணி அளவில் காலமானார். 86 வயதான பால்தாக்கரே கடந்த ஒரு மாதமாக உடல்நிலை குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.பால்தாக்கரேவின் வீட்டை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்கள் அவரது வீட்டில் குவிந்துள்ளனர். மும்பையில் ரயில் நிலையங்கள் உட்பட பல இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

18.11.2012 காலை 10 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. மாலை 3 அளவில் பால்தாக்கரேவின்  உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு: தொண்டர்கள் கண்ணீர்

சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால்தாக்கரே. 86 வயதான அவர் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை இரவு அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மூச்சுவிட திணறியதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. 

சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு: தொண்டர்கள் கண்ணீர்

அவர் உடல்நிலை மோசமானதை அறிந்ததும், பல்வேறு கட்சி தலைவர்கள், நடிகர்கள் மும்பை பந்த்ராவில் உள்ள அவர் வீட்டுக்கு சென்று உடல் நலம் விசாரித்தனர். தொண்டர்களும் திரண்டனர். இதன் காரணமாக மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவியது. 
பால்தாக்கரே இன்று பகல் 3.33 மணிக்கு மரணம் அடைந்தார் .அவரது கட்சித் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் .இதை ஒரு காரணமாக வைத்து வன்முறை விதைக்க முற்படாமல் அமைதி காக்க வேண்டும் .
இந்த செய்தியை தந்தி டிவி முதலில் சொன்னது

இலங்கை இராணுவம் என்று கூறி உலகில் பெருமைபடலாமாம்! 109 தமிழ் பெண்கள் மத்தியில் உரை

இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட பின்னர் உலகில் எந்த நாட்டுக்கும் சென்று இலங்கை இராணுவம் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ள முடியும் என கிளிநொச்சி படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.

109 தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைப்பு: பாரதிபுரத்தில் நிகழ்வு

இலங்கை இராணுவத்துக்கு 109 தமிழ்ப் பெண்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு தற்போது கிளிநொச்சி - பாரதிபுரத்தில் இடம்பெற்று வருகிறது.

கேணல் பரிதி படுகொலை தொடர்புடன் சம்பந்தப்பட்ட விநாயகம் பிரான்ஸில் கைது

விடுதலைப் புலிகளின் மற்றும் ஒரு பிரிவின் தலைவர் என கருதப்படும் விநாயகம் இவ.இவரைப் பற்றி தமிழ்த்தாய் இணையம் இவ்வாறு கூறுகிறது (புலம்பெயர் தேசத்தில் தமிழ் மக்களை பிரிவு படுத்தி தேசவிடுதலையை மழுங்கடிக்கவும் தேசிய மாவீரர் நாளையும் குழப்புவதற்கும்  கோத்தபாயவினால்  தயார்படுத்தப்பட்டு தலைமைசெயலகம் 

ad

ad