-

23 ஜூலை, 2026

www.pungudutivuswiss.comமிஸ்டர் கழுகு: இறுகும் வழக்கு... சிக்கலில் மாஜி!
கழுகார்
செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது, ராஜேஷ் லக்கானிதான் அந்தத் துறையின் செயலாளராக இருந்தார். பிறகு, மத்திய அரசுப் பணிக்குத் திரும்பியவரை மீண்டும் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

Pர். நேரடியாகச் செய்திகளுக்குள் நுழைய எத்தனித்தவரிடம், “நீர் கேட்கும் பாடல் நிஜத்தில் நடந்துவிடும்போலவே...” என்று கொக்கி போட்டோம். புன்முறுவலுடன் தயாராக வைக்கப்பட்டிருந்த அப்பளத்தை நொறுக்கிக் கொறித்த கழுகார், அச்சுக்குத் தயாராகிக்கொண்டிருந்த பக்கங்களில் பார்வையை ஓட்டியபடியே செய்திகளுக்குள் நுழைந்தார்.

“அது தொடர்பாகத்தான் உமது நிருபர் விலாவாரியாக எழுதியிருக்கிறாரே... தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், ஏழு மாநில முதல்வர்களை சென்னைக்கு வரவழைத்து கூட்டுக் குழுக் கூட்டம் நடத்திய தி.மு.க., இப்போது ஒரு நிலைப்பாட்டைச் சொல்ல மறுக்கிறது. அந்த தடுமாற்றத்தை வைத்துத்தான், ‘பா.ஜ.க பக்கம் தி.மு.க சாய்கிறது’ என்ற பேச்சு வலுவாக எழுந்திருக்கிறது. மேகதாது அணை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி, காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுக்கத் திட்டமிடும் தி.மு.க., பா.ஜ.க-வுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய சோனம் வாங்சுக்குக்கும் ஆதரவு தெரிவித்திருக்கிறது. மாநிலங்களவை, மக்களவை இரண்டையும் சேர்த்து மொத்தம் 30 எம்.பி-க்களை வைத்திருக்கும் தி.மு.க-வின் நிலைப்பாட்டை அறிய, தேசிய அளவில் பலருமே பரபரப்போடுதான் காத்திருக்கிறார்கள்.”

Advertisement

“அது சரி... ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’யைச் சேர்ந்த இளைஞர்கள் ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள்போலவே!”

“டெல்லியை ஸ்தம்பிக்க வைத்துவிட்டனர் அந்த இளைஞர்கள். ‘நீட் தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்’ என்ற கோரிக்கையோடு போராடுகிறார்கள். அந்தப் போராட்டம், இளைஞர்கள் மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துத் தந்திருப்பதால், ‘தர்மேந்திர பிரதானின் அமைச்சர் பதவி பறிக்கப்படும்’ என்றே டெல்லியில் பேசுகின்றனர். இவ்வளவு களேபரங்களுக்கு இடையே, த.வெ.க தரப்பு அந்தப் போராட்டக்காரர்களைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.”

“அமைச்சர்களையாவது அனுப்பி வைத்திருக்கலாமே..?”

“ ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும்வரை, டெல்லியை உஷ்ணப்படுத்தும் எந்த விவகாரம் குறித்தும் வாய் திறக்க விரும்பவில்லையாம் முதல்வர் அலுவலகம். கடந்த ஜூன் மாதம் காவிரியில் இருந்து தரவேண்டிய 9.19 டி.எம்.சி தண்ணீருக்கு பதில், 2.91 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டிருக்கிறது. இந்த ஜூலை மாதம், 31.24 டி.எம்.சி நீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்றுவரை முழுமையாகத் திறக்கப்பட வில்லை. அதைக் கண்டித்து, மாநிலத்தின் முதல்வர் என்கிற அடிப்படையில் குறைந்தபட்சம் ஓர் அறிக்கையாவது முதல்வரிடமிருந்து வந்திருக்க வேண்டும். ஆனால், எதுவும் வரவில்லை.”

Advertisement
“டெல்லியைப் பகைத்துக்கொள்ளாததைப் புரிந்துகொள்ள முடிகிறது. கர்நாடகாவுக்கு எதிராகக்கூடக் குரல் கொடுக்க முடியாதா?”

“எதிர்த்து பேசினால், ‘ஜனநாயகன் படத்தின் கர்நாடகா ரிலீஸில் பிரச்னை வந்துவிடக் கூடுமாம். அதனால், அமைதியாக இருக்கிறார்களாம்...” என்றவருக்கு, தித்திப்பான பாயசத்தைக் கொடுத்தோம். சுவைத்தபடியே, புதுச்சேரி செய்திகளுக்குள் நுழைந்தார்.

“புதுச்சேரியிலும் ஏகப்பட்ட குழப்பங்கள் வெடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பா.ஜ.க-வுடன் அணி சேர்ந்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி. முதல்வராகப் பொறுப்பேற்று இரண்டு மாதங்களாகியும்கூட, இதுவரை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கவில்லை அவர். உள்துறை போன்ற முக்கியத் துறைகளை எதிர்பார்க்கும் பா.ஜ.க., ரங்கசாமியின் நடவடிக்கைகளால் கடும் அப்செட்டாகியிருக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு சீனியரைக் கையிலெடுத்து, கட்சியை உடைக்கும் வேலையை ஆரம்பித்திருக்கிறார்களாம். இந்த ஆபரேஷனுக்கு ஒரு மிகப்பெரிய தொழில் நிறுவனம் நிதியுதவி செய்கிறதாம்.”

Mobile

4.7 / 5 Rating

3.5M+ Downloads

Audio Magazines

Instant News Summary

Free 500+ Audio Books

Low Data Usage
App Store
Play Store
INSTALL APP & GET 30 DAYS FREE TRIAL
Install App
கழுகார்
கழுகார்
இது ஒரு பிரீமியம் ஸ்டோரி

ad

ad