-

23 ஜூலை, 2026

www.pungudutivuswiss.com
இன்று 11 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
[Wednesday 2026-07-22 18:00]


செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40 ஆவது நாளான இன்று, 04 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40 ஆவது நாளான இன்று, 04 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 94 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 471 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 455 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை இன்றைய தினம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பேர் கொண்ட குழுவினர் அகழ்வு பணியை நேரில் பார்வையிட்டதுடன், அகழ்வு பணிகளில் ஈடுபட்ட நிபுணர் குழுவினருடன் அகழ்வு பணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர் என சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்தார்

ad

ad