புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2015

அஜிட் நிவாட் கப்ராலிடம் நான்கரை மணிநேரம் விசாரணை! – பந்துலவும் விசாரிக்கப்பட்டார்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலிடம்கொழும்பு, கொள்ளுப்பிட்டி நிதி மோசடி விசாரணைப்பிரிவு சுமார்
நான்கரை மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் உலகச்சந்தையில் மசகு எண்ணெய் விலை கூடி, குறைந்து கொண்டிருந்த போது இலங்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தாமல் சர்வதேச வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன்
செய்துகொண்ட ஹெஜிங் ஒப்பந்தத்தினால் இலங்கைக்கு கோடிக்கணக்கான டொலர்களை செலுத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டது தொடர்பிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
உலக சந்தை எவ்வாறிருப்பினும் ஒரு பரல் மசகு எண்ணெய் 130 ஆகும். டொலர் விலையில் வாங்குவதாக அரசாங்க நிறுவனமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2007ஆம் ஆண்டு 5 உள்நாட்டு, வெளிநாட்டு வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்தது. ஆனால், உலக சந்தையில் பெற்றோலிய விலை 50 டொலரிலும் குறைந்த போது இந்த ஒப்பந்தம் பாரிய நட்டத்துக்கு வழிசமைத்தது.இதனால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 500 மில்லியன் அமெரிக்க டொலரை இழக்க நேரிட்டது. 
இலங்கை உயர் நீதிமன்றம் மத்திய வங்கியின் விசாரணை முடியும் வரையில் சர்ச்சைக்குரிய ஹெஜிங் கொடுப்பனவை 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறுத்தி வைத்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சி.ஐ.ரி.ஐ வங்கி ஸ்ராண்டட் சாட்டட் வங்கி, டொச் வங்கி ஆசிய வெளிநாட்டு வங்கிகள் சிங்கப்பூரிலுள்ள நடுத்தீர்ப்பு குழுவுக்கும் லண்டன் வர்த்தக மேல் நீதிமன்றிலும் வழக்குத் தொடர்ந்தன. 
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் டொச் வங்கியுடனான வழக்கில் தோல்வி கண்டு 60 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்துக்கு உட்பட்டது. ஸ்ராண்டட் சாட்டட் வங்கிக்கு 162 மில்லியன் அமெரிக்க டொலர் வட்டியையும் செலுத்துமாறு ஒரு ஐக்கிய இராச்சிய நீதிமன்று தீர்ப்பளித்தது. அத்தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டில் அரசாங்கம் 2012 ஆம் ஆண்டு ஜ§லை தோல்வி கண்டது. 
அமெரிக்காவிலுள்ள நடுத்தீர்ப்பாளர் டொச் வங்கிக்கு சார்பான தீர்ப்பை வழங்கி அதற்கு 60.3 மில்லியன் அமெரிக்க டொலரை வட்டியுடன் செலுத்துமாறு கட்டளையிட்டது.இந்நிலையிலேயே மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரிடம் நிதி மோசடி விசாரணைப்பிரிவு விசாரணை நடத்தியது. 
அதேவேளை,மஹிந்தோதய தொழிநுட்ப கல்விக்கூட செயற்றிட்டங்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் குறித்து முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நேற்று விசாரணை நடத்தியுள்ளது. தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் துரித விசாரணைகளை நடத்துமாறு கோரி, முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, நேற்றுஇலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்குச் சென்றிருந்தார். 

முன்னாள் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலேயே இதன்போது அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன.

ad

ad