புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2016

மாணவர்களின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முடங்கியது வடக்கு

யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிஸரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து  இன்றையதினம்
  வட மாகாணத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் நடைபெறாத நிலையில், வியாபார நிலையங்களும்  மூடப்பட்டு சன நடமாட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

யாழ்நகர், திருநெல்வேலி

அத்துடன் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், கல்வி நடவடிக்கைகளும் முற்றாக முடங்கியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி,தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழர் சமூக ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ் கட்சிகள் இன்றைய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.























இதேவேளை யாழ் நகரப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாவகச்சேரி



மன்னார்


ad

ad