புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2018

பிரபல சட்டத்தரணி வீட்டில் இரகசியமாகச் சந்திக்கும் இரு முக்கிய தமிழ் அரசியல் புள்ளிகள்!


வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இரகசியமாக சந்தித்துப் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் உள்ள பிரபல சட்டத்தரணி ஒருவரின் வீட்டிலேயே இந்த சந்திப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இரகசியமாக சந்தித்துப் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் உள்ள பிரபல சட்டத்தரணி ஒருவரின் வீட்டிலேயே இந்த சந்திப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்புகள் தொடர்பில் கூட்டமைப்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் கேள்வியெழுப்பட்டுள்ளதாகவும், எனினும், இரா.சம்பந்தன் அதற்குப் பதிலளிக்க வில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை அறிவிக்க வேண்டும் என புளொட் மற்றும் டெலோ ஆகிய கட்சிகள் இரா. சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து இரா. சம்பந்தன் தீர்க்கமான முடிவொன்றை வெளியிட வேண்டும் என இந்த இருகட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.“முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அதிகளவு மக்கள் செல்வாக்கு இருக்கின்றது. ஆகையினால் அவர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் பட்சத்தில் பாரிய பின்னடைவு ஏற்படும் என இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக” தகவல்கள் வெளியாகியுள்ளன

ad

ad