வவுனியா வைத்தியசாலையில் முக மறுசிரமைப்பு சத்திர சிகிச்சை
முக சீரமைப்பு சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் அதனை வவுனியா வைத்தியசாலையில் பெறமுடியும் என வவுனியா பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் மல்லவராட்சி தெரிவித்தார்.
வட பகுதியில் உள்ள முக சீரமைப்பு மற்றும் உதடு அண்ணப்பிளவு தாக்கத்திற்கு உட்பட்டவர்கள் இது வரை காலமும் அனுராதபுரம் அல்லது தென் பகுதி வைத்தியசாலைகளுக்கு சென்றே சிகிச்சைகளை பெற்று வந்தனர்.