-

26 பிப்., 2013


ஆன்மீக பயணமாக தமிழகத்திலுள்ள புனித வேளாங்கண்ணி மாதா தேவாலயத்திற்கு சென்ற இலங்கையைச் சேர்ந்த 70 பேரைத் தமிழக பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.
புனித வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு செல்வதற்கு நேற்று திருச்சி விமான நிலையத்தினை வந்தடைந்த இலங்கை பக்தர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் விசேட அறிவிப்பொன்றை வழங்கவுள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூனின் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை இராணுவத்துக்குச் சொந்தமான சில புகைப்படங்களை வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு வழங்கியமை தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த சனிக்கிழமை கண்டியிலிருந்து கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் மடிக்கணனிக்கு தனது மடிக்கணனியிலிருந்த பல

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் இலங்கைக் குழுவினர் ஜெனீவா சென்றடைந்துள்ளனர். இந்நிலையில்,நாளை விசேட உரை அமைச்சர் மஹிந்த சமரசிங்க விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டுச் சிறுவர்கள் விவகாரத்தில் அவர்களது பெற்றோர்களை பலவந்தமாக குற்றவாளிகளாக்கி அதன் மூலமான அறிக்கை ஒன்றை ஜெனீவா பேரவையில் சமர்ப்பித்து தமது செயற்பாட்டை சர்வதேசத்தின் முன்னிலையில் நியாயப்படுத்துவதற்கான சூழ்ச்சிகர நடவடிக்கைகளில் நோர்வே அரசாங்கம் இறங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி நோர்வே அரசாங்கத்தி;ன் நேரடி கண் காணிப்பின் கீழ் இயங்குகின்ற சிறுவர் நலன் காப்பகங்களால் வெளிநாட்டுப் பெற்றோரிடமிருந்து பலவந்தமாகவும் அதேநேரம் கடத்தல் பாணியிலும் கொண்டுசெல்லப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் விடயத்தில் உண்மை நிலைமைகளை ஆய்ந்தறியாத வகையில் தயாரிக்கப்பட்டதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட பெற்றோர் நோர்வே சிறுவர் காப்பங்களால் நிர்ப்பந்திக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.
இட்டுக்கட்டி தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெற்றோர் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அந்த ஒப்புதல்களை ஜெனீவா பேரவையில் சமர்ப்பித்து அதனுடாக தமது அரசாங்கத்தின் கீழ் இயங்குகின்ற சிறுவர் காப்பகங்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் சதித்திட்டமாக இருப்பதாகச் கூறப்படுகின்றது.
நோர்வே அரசாங்கமானது சிறுவர்கள் விடயத்தில் சர்வதேசத்தின் முன்னிலையில் இழந்துள்ள நன்மதிப்பினை கட்டியெழுப்பும் நோக்கிலேயே இவ்வாறான சூழ்ச்சித்திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முயற்சித்திருப்பதாக பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் நோர்வே அரசாங்கம் இவ்வாறு செய்யத்துணிவதன் மூலம் தமது பிள்ளைகளின் வாழ்க்கையும் அவர்களது எதிர்காலமும் கலாசார பண்பு நிலைகளும் சீரழிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவர் காப்பகங்களிடமிருந்து தமது பிள்ளைனளை மீட்டுக் கொள்ளும் பொருட்டு டொம் தேவாலயத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டதன் விளைவாகவே இவ்விவகாரம் பூதாகாரமாகி உலகெங்கிலும் பரவியுள்ளது என்பதைக் காரணம் காட்டி குறித்த பெற்றோர் மீது அரசியல் ரீதியிலான மறைமுகப்பழிவாங்கல்கள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
சட்டம், நீதித்துறை மற்றும் பொலிஸார் என சகல தரப்பினருமே சிறுவர் காப்பகங்களுக்கு 

சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று ஜெனீவா பேரவையில் சமர்ப்பிக்கும் முயற்சியில் நோர்வே


சாதகமாக செயற்படுவதால் தாமும் தமது குழந்தைகளும் எதிர்நோக்கிவருகின்ற பிரச்சினைகளான அடிப்படை மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை எங்குமே முறையிட

அண்மைக் காலமாக தமிழகத்தில் ஏற்பட்டு வரும் தமிழீழ ஆதரவு, சிறிலங்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கமைவாக, தமிழகத்தில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் குறித்து கவனிக்கப்பட வேண்டுமென பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரொஹான்

இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்தப் பட்ட 7பிரான்ஸ்பிரஜைகள் கழுத்தறுப்புக்கு காத்திருப்பு video
பிரான்ஸ் நாட்டு பிரஜைகள் கமேரூன் என்ற நாட்டில் வைத்து இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது அனைவரும் அறிந்தது பிரான்ஸ் மக்களிடையே ஒரு பதட்டத்தையும் உண்டு பண்ணி இருந்தது அந்த வகையில் அவர்களை எங்கு வைத்து இருக்கின்றார்கள் என்று

இலங்கையில் மிக மோசமான யுத்தமீறல்கள் இடம்பெற்றுள்ளன: ஜெனீவாவில் நவி.பிள்ளை
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மிகமோசமான யுத்த மீறல்கள் புரியப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டைப் பற்றியே அறிந்த யாழ். இராணுவத் தளபதிக்கு மக்களின் சந்தோசம் பற்றித் தெரியுமா?- சுரேஸ் பிறேமச்சந்திரன்
வலி. வடக்கு மக்களின் காணிகளை விடுவிக்க முடியாதென கூறியிருக்கும் யாழ். இராணுவத் தளபதியின் கருத்து, வடமாகாண சிவில் நிர்வாகத்தில் அதீத இராணுவத் தலையீடு இருப்பதை காட்டுவதாகவும் இதனை த.தே.கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகவும்

புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு ஐ.நா மனிதஉரிமை கூட்டத் தொடரில் பங்கேற்பு
ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடரில் பங்கேற்க புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று பயணமாகியுள்ளது.

தலித் பெண்ணான வித்யாவின் குடும்பம், ஆதிக்க சாதியினைச் சார்ந்த விஜிய பாஸ்கரின் திருமணத்தினை ஒப்புக்கொண்டது.. ஆனால், விஜிய பாஸ்கரின் குடும்பம் இதற்கு ஒப்புதல் அளிக்காததினால், வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்ய அவர் வித்யாவை நிற்பந்தித்துள்ளார். இதற்கு மறுத்த வித்யாவின் மீது, அவர் ஆசிட் ஊற்றியுள்ளார்.

இதில் கொடுமையான விடயம் என்னவென்றால், டெல்லி சம்பவத்திற்கும், ஏன் வினோதினிக்கும் கூட குரல் கொடுத்தவர்கள், வித்யா என்னும் தலித் பெண்ணினை ஏறெடுத்தும் இன்னமும் பார்க்கவில்லை.. 

பன்னிரெண்டு வயது பாலகன் துப்பாக்கி தூக்கினால் அது போர்க் குற்றம் !

அப்பா!
எல்லா அப்பாக்களையும்
போல்
நீயும்
இருந்திருந்தால்
என்
தாத்தாவும்
பாட்டியும்
இந்நேரம்
முசிறியில்
மூச்சோடு
இருந்திருப்பார்கள்!

25 பிப்., 2013


இலங்கை தொடர்பில் சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணை வேண்டும் : ஐ.நா மனித உரிமைச்சபையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


இலங்கைத்தீவினை மையப்படுத்திய அனைவரது பார்வையினையும் நோக்கியதாகவுள்ள ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணையின் அவசியத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்துகின்றது.

சுவிட்ஸர்லாந்தின் தலைநகரான ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடர்  ஆரம்பமாகியது. 
ஐக்கியநாடுகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தலைமையில் இன்று முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை இக் கூட்டத் தொடர் இடம்பெறும்.அத்துடன் இலங்கை தொடர்பில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை மார்ச் மாதம் 20

                       புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் 
                                                   சுவிட்சர்லாந்து
                                           கண்ணீர் அஞ்சலி


                              செல்லத்துரை சத்தியமூர்த்தி
                                                                  (சனார்த்தன் )
                                       தோற்றம் :16.07.1948     மறைவு  24.02.2013

புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த சுவிசில் வசித்து வந்த சத்தியமூர்த்தி இறைவனடி இறந்து விட்டார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம் .அன்னார் ஊரதீவில் பிறந்து சுவிஸ் மண்ணில் சொலிகோவன் ,புரூக்டோர்ப் நகரங்களில் வசித்த காலப்பகுதியில் மக்களோடு அன்பாக பழகி அரிய  சேவைகளை செய்து  வாழ்ந்திருந்தார் .விருந்தோம்பலில் சிறப்புற்று விளங்கிய இவர் எல்லோரையும் அரவணைத்து நடப்பதில் இனிமையானவர் .ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலயம் ,மடத்துவெளி பாலசுப்பிரமணியர்  ஆலயம், கமலாம்பிகை மகா  வித்தியாலயம் போன்றவற்றின் பணிகளை செய்வதில் முன்னின்று உழைத்தவர் .சுவிசுக்கு வந்த புதிதில் எண்பதுகளில் தமிழ் மக்களின் தாயக விடுதலைக்கான சேவையில் முன்னின்று கடுமையாக உழைத்து எமது ஊர் மக்களின் பாரட்டுதலை பெற்றிருந்தார் . இவரது சொந்த உறவினர்களின் தொகையே அதிகமாக இருந்ததனால் இவரை ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து வழிகாட்டியாகவே பார்த்து மகிழ்ந்திருந்தனர் மக்கள் .

அன்னாருக்கு எமது புங்குடுதீவு மக்கள் சார்பில் இதயபூர்வமான அஞ்சலியை தெரிவித்து கொள்கிறோம் .அனைவரையும் இவரது இறுதிக் கிரியைகளில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம் .அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறோம்

புங்குடுதீவு மக்கள்  விழிப்புணர்வு ஒன்றியம்.
சுவிட்சர்லாந்து
24.02.2013






இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையில் மேலும் இரண்டு கண்கண்ட சாட்சிகள் முன்வந்துள்ளதாக தெ இன்டிபென்டன்ட் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இவர்கள் இருவரும் வெள்ளைக் கொடியை ஏந்தி சரணடைய சென்ற விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதான செயலக தலைவர் புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்ட

இலங்கையின் ஊடகஇணையம் மீது ஊடறுப்பு தாக்குதல்! இணையத்தில் போர்குற்ற காட்சிப்பதிவுகள்! அதிர்ச்சியில் இலங்கை
இலங்கை அரச கட்டமைப்பு இணையத் தளங்கள் மீதான இனந்தெரியாத நபர்களின் ஊடறுப்பு தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இந்நிலையில், இன்று இலங்கை அரச ஊடக இணையம் ஊடறுப்பு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கைக் குழு நவனீதம்பிள்ளையை சந்திக்குமா?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ள இலங்கை பிரதிநிதிகள்

இலங்கையில் பொதுமக்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்கிறது; ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு
இலங்கையில் தொடர்ந்தும் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்படும் நிலை தொடர்கிறது என ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்திய வீட்டுத்திட்டம் போரால் பாதிப்படைந்தவர்களுக்கா அல்லது வீடற்ற இலங்கையருக்கா இந்திய உயர்ஸ்தானிகரிடம் பாதிப்படைந்த மக்கள் கேள்வி
வவுனியா நெல்லி ஸ்டார் கோட்டலில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் வவுனியா மீள்குடியேறியோருக்கான நலன்பேணும் அமைப்பு, வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தின்

அமைச்சர் டக்ளஸினால் பிற்போடப்பட்ட அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை அடிக்கல் நாட்டும் நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெற்றது
பிற்போடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. இந்திய தூதுவர் ஆசோக் கே. கந்தா கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைததார்.
ஐ.நாவுக்கு இலங்கை ரகசியமான அறிக்கை; பான் கீ மூனிடம் நேரில் வழங்கினார் பாலித
இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை நிராகரிக்கும் இரகசிய அறிக்கை ஒன்றை ஐ.நா பொதுச் செயலர் பான் கீமூனிடம் இலங்கை அரசு கையளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வலி.வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பகுதிகள் எதுவும் விடுவிக்கப்படமாட்டாது


வலிகாமம் வடக்குப் பகுதியில் இராணுவத்தினரின் வசமுள்ள பகுதிகளை விடுவிக்க முடியாது என மீண்டும் உறுதியாகத் தெரிவித்துள்ளார் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க இராணுவத்தினரின் வசமுள்ள பெரும்பாலான காணிகள்

புலிகளை அழிப்பதற்கு உதவிய இந்தியா இன்று இலங்கைக்கு எதிராகச் செயற்படுகிறது


விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கை அரசுக்கு உதவிய இந்தியா இன்று இலங்கைக்கு எதிராக செயற்படுவதாகத் தெரிவித்த யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.
96ஆவது தடவையாக நடைபெற்ற இப் போட்டி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.


ஆஸி.க்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி வலுவான நிலையில்


சென்னையில் நடைபெற்றுவரும் இந்தியா-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான யாத்திரீகர்கள் நேற்று சனிக்கிழமை வந்திருந்ததாக நுவெரலிய மாவட்ட செயலாளர் டி.பி.ஜி குமாரசிறி தெரிவித்தார்.
சுமார் 20 கிலோமீற்றர் தூரத்திற்கு அட்டன் - மஸ்கெலிய வரை வாகன நெரிசல் நீண்டு காணப்பட்டுள்ளது. சரியான போக்குவரத்து முறையில்லாத காரணத்தினாலேயே இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெருமளவிலானோருக்கு சிவனொளிபாத


இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இரண்டு நாள் விஜயம் மேற்கெண்டு யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் பலாலியில் அமைக்கப்பட்டுள்ள 33 இந்திய படையினரின் நினைவுச் சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.


களைகட்டியது கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால திருநாளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான இந்தியா மற்றும் இலங்கை பக்தர்கள் கலந்துகொண்டு திருநாள் வழிபாடுகளில் ஈடுபட யாழ். ஆயர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை சுவிற்ஸர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.
எமது விசேட செய்தி சேவை 24 மணி நேரமும் வழங்கி கொண்டிருக்கும் 
நாளை ஆரம்பமாகும் இக் கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

மீனவர்களின் உரிமைகளை வலியுறுத்தி இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் கச்சதீவில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்ட இரு நாட்டு மீனவர்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துள்ளதுடன் இப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வருவதாக அமைச்சர் வாக்குறுதி அளித்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

24 பிப்., 2013

South Africa 409
Pakistan 156 & 235 (f/o) (78.0 ov)
South Africa won by an innings and 18 runs

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக் கூடாது: தண்டனையை உறுதி செய்த முன்னாள் நீதிபதி

ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 21.5.1991 அன்று நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
டோனி இரட்டை சதம் - அபார சாதனை
சச்சின்,சேவாக் வரிசையில் 200 ரன் அடித்த 9வது இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் டோனி.74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய டோனி முதல் முறையாக இரட்டைச்சதம் அடித்தார். ஆஸ்திரேலி யாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இரட்டைச்சதம் அடித்துள்ளார். 231 பந்துகளில் 200ரன்களை விளாசினார் இந்திய அணியின் கேப்டன் டோனி.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து யுவராஜ் சஸ்பெண்ட்! காங். மேலிடம் நடவடிக்கை!

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து யுவராஜ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சிப் பணிகளை ஒழுங்காக ஆற்றவில்லை என்ற குற்றச்சாட்டையடுத்து அவர் மீது
ப.சிதம்பரம் வீடு முற்றுகை! இந்து மக்கள் கட்சியினர் கைது!
சென்னை சாஸ்திரிபவன் எதிரில் உள்ள மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டின் முன்பு இந்து மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்துரமேஷ்குமார் தலைமையில்

மத்திய அமைச்சர்கள் வீடுகள் முற்றுகை : ஜி.கே.வாசன் கண்டனம்
இலங்கை விவகாரத்தில் சத்தியமூர்த்தி பவன், மத்திய அமைச்சர்கள் வீடுகளை முற்றுகையிடுவதற்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் விளம்பரம் தேடும் முயற்சியை மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் என கூறி யுள்ளார்
ஜெயலலிதாவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்

இந்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவில் உள்ள புனி

சாத்தூர் ராமச்சந்திரன் மீது 32 லட்சம் மோசடி புகார்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கொடிக்குளத்தை சேர்ந்தவர் கே.எம்.கோஸ். தி.மு.க. பிரமுகரான இவர், முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது உறவினர் சுப்பாராஜ் ஆகியோர் மீது

Australia 380
India 182/3 (52.0 ov)
India trail by 198 runs with 7 wickets remaining in the 1st innings

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என கருதப்படும் இரு சந்தேக நபர்களின் மாதிரி படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

தெஹிவளை மவுன்லெவனியா வீதியில் உள்ள தனது வீட்டில் ஊடகவியலாளரான பராஸ் சவுகதலி இருந்த போது, இனந்தெரியாத நபர்கள் மூவர் கடந்த வெள்ளிக்கிழமை (15) இரவு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.

புத்தளம், கருவலகஸ்வெள பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் வீடொன்றில் பெண்ணொருவருடன் உல்லாசமாக இருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது குறித்த பௌத்த பிக்கு அதிக குடிபோதையில் இருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாலசந்திரனின் புகைப்படங்கள் ஒரு மணி நேர இடைவெளிக்குள் எடுக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது! –டிபிஎஸ்
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலசந்திரன் கொல்லப்பட்ட புகைப்படங்களை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பது கடினமான காரியமாக இருக்கும் என்று டிபிஎஸ் ஜெயராஜின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது


பிரபாகரன் மகன் படுகொலை எதிரொலி! சென்னை காங்கிரஸ் அலுவலகம் முற்றுகை
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று சென்னை காங்கிரஸ் அலுவலகம் மே17 இயக்கம் சார்பில் முற்றுகையிடப்பட்டது.

23 பிப்., 2013



ஒரு இனத்தை ஐநாவும் சேர்ந்து அழித்த கதை
சரணடைதல் என்ற சொல்லைப் பாவிக்க நடேசன் மறுத்தார். ஆனால் அவர் என்னை அழைத்தபோது, அதைத்தான் செய்ய முன்வந்திருந்தார். புலிகளின் பாதுகாப்புக்கு நம்பியாரின் வருகை அவசியம் தேவை என்றும் கூறினார்.

கூட்டமைப்பில் முஸ்லிம் பிரிவு உருவாக்க வேண்டும்; முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் கோரிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முஸ்லிம் பிரிவு உருவாக்கப்பட்ட வேண்டும் என முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரான சி.வே விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு நடத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டியில் விழிப்புலனற்ற மாணவன் ஒருவன் 8 கிலோ மீற்றர் தூரம் ஓடிச் சாதனை படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் உயர்தரம் கற்றுவரும் விஜயகுமார் விஜயலாதன் என்ற மாணவரே இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

சென்னையில் அலுவலகத்தில் புகுந்து மனைவி கழுத்தை அறுத்தகணவன்


சென்னை அருகே உள்ள சோழிங்கநல்லூரில் உள்ள கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் லாவண்யா. அவர் இன்று அலுவலகத்தில் பணியில் இருந்த போது அவரது கணவன் சீனிவாசன் அங்கு வந்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி கழுத்தில் வெட்டியுள்ளார்.இதனை கண்ட மற்ற ஊழியர்கள் அவரை தடுக்க முயன்றனர். அப்போது சீனிவாசன் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டார். அவர்கள் இருருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

ad

ad