புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2013

சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண், டாக்டர்களின் தவறான அணுகுமுறையால் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை அடுத்த சேலையூர் அக்ரகாரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மோகன். தனியார் கார் நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஹரினி நாச்சியார் (வயது 23).



குழந்தை பேறுக்காக கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 2 மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவருக்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவர் கண் திறக்காமலேயே இறந்தார்.
டாக்டர் அகிலா அவருக்கு சிகிச்சை அளித்தார். அவர் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் பணியாற்றுகிறார்.  இது பற்றி தகவல் அறிந்த நாச்சியாரின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டனர். தவறான சிகிச்சையால்தான் இறந்ததாகவும், இதனால் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவர்கள் முற்றுகையிட்டனர்.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
ராயப்பேட்டை மருத்துவ மனையில் டாக்டர்கள் குழு நாச்சியாரின் உடலை பிரேத பரிசோதனை செய்கிறது. இதன் முடிவில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே அந்த பெண்ணின் உறவினர்கள் பிரேத பரிசோதனை நடத்தப்படும் ராயப்பேட்டை மருத்துவ மனை முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ad

ad