-

10 ஆக., 2026

www.pungudutivuswiss.com
கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொலை!
[Monday 2026-08-10 17:00]

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக் கும்பலின் முக்கிய புள்ளியான 'கஞ்சிபானி இம்ரான் என்பவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக் கும்பலின் முக்கிய புள்ளியான 'கஞ்சிபானி இம்ரான் என்பவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான பகைமையினால் இக்கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், மாளிகாவத்தை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

www.pungudutivuswiss.com
சாகர காரியவசம் கைது!
[Monday 2026-08-10 17:00]


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (10) வந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (10) வந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.

ad

ad