புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014

பெங்களூருவுக்கு 2-வது வெற்றி; மும்பைக்கு மீண்டும் அடி

மும்பைக்கு எதிரான 7-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெ
ற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு சாம்பியனான மும்பை அணி தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தோல்வியும், பெங்களூரு அணி தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் வெற்றியும் பெற்றுள்ளன.
இரு அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டம் துபையில் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. பெங்களூரு அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. முதுகு வலியில் இருந்து அவர் குணமடைந்து விட்டார். இருப்பினும், இந்த ஆட்டத்தில் அவர் ஆட மாட்டார் என கோலி தெரிவித்திருந்தார்.
மும்பை அணியின் தொடக்க வீரரான மைக்கேல் ஹஸி இரண்டு பவுண்டரிகள் அடித்து மோர்கல் பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் ஆதித்யா தாரே 17 ரன்கள் எடுத்திருந்தபோது வருண் ஆரோன் வேகத்தில் வீழ்ந்தார். மும்பை கேப்டன் ரோஹித் சர்மா லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹால் பந்தில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி வீரர் பொல்லார்டு 3 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
பின்னர், அம்பாடி ராயுடு மற்றும் கோரி ஆண்டர்சன் இருவரும் நிதானமாக ஆடினர். 35 ரன்கள் எடுத்திருந்த ராயுடுûவுயம், 18 ரன்கள் எடுத்திருந்த ஆண்டர்சனையும் 17-வது ஓவரை வீசிய மிச்செல் ஸ்டார்க் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினார். ஜாகிர் கான் டக் அவுட்டிலும், ஹர்பஜன் 8 ரன்களிலும், மலிங்கா 2 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இதனால் மும்பை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சுலபமான இலக்கை விரட்டிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் மேடின்சனை மலிங்கா தன் பிரத்யேக "யார்க்கர்' பந்து மூலம் வெளியேற்றினார். அடுத்த ஓவரை ஜாகீர்கான் வீசினார். ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்ட நேரம் அது. பெங்களூரு கேப்டன் விராட் கோலி ஸ்லிப்பில் பந்தை "கட்' செய்ய முயன்றார். ஆனால், ஹர்பஜன் அதை அற்புதமாக "கேட்ச்' செய்தார். விளைவு விராட் கோலி டக் அவுட்.
அடுத்த பந்தை கடந்த ஆட்டத்தில் அதிரடி அரைசதம் அடித்த யுவராஜ் எதிர் கொண்டார். பந்து யுவராஜ் பேட்டில் பட்டு தெறிக்கிறது. பந்து கீப்பர் ஆதித்ய தாரே கையில் பட்டு கீழே விழுகிறது. கேட்ச் மிஸ். அதிருப்தி அடைந்த ஜாகீர் அடுத்த பந்தை வீசுகிறார். அதை தட்டுத் தடுமாறி எதிர்கொள்கிறார் யுவராஜ். ஆனால், இம்முறை பந்து யுவராஜின் கால் பேடில் படுகிறது. மும்பை இண்டியன்ஸ் வீரர்கள் கோரஸாக "அவுட்டுக்கு அப்பீல்' செய்கின்றனர். கண நேர தாமதத்துக்குப் பின் நடுவர் கை விரலை மேலே உயர்த்துகிறார். டக் அவுட் ஆன விரக்தியில் யுவராஜ் தலையைக் குலுக்கியபடி ஏமாற்றத்துடன் வெளியேறுகிறார். 17 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நின்றது பெங்களூரு. இதனால் வெற்றி மும்பை பக்கம் திரும்பியதுபோல ஒரு பிரமை ஏற்பட்டது.
ஆனால், அடுத்து வந்த டி வில்லியர்ஸ் மற்றும் பார்த்திவ் படேல் தவறேதும் நிகழாமல் பார்த்துக் கொண்டார். குறிப்பாக டி வில்லியர்ஸ் தனக்கே உரிய பாணியில் பொறுப்புடன் ஆட மறுமுனையில் பார்த்திவ் படேல் பயமின்றி வெளுத்துக் கட்டினார். இதனால் பெங்களூரு அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து நிர்ணயிக்கப்பட்ட 116 ரன்கள் இலக்கை எட்டியது.
பார்த்திவ் படேல் 57 ரன்களுடனும் (45 பந்துகள்), டி வில்லியர்ஸ் 45 ரன்களுடனும் (48 பந்துகள்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பார்த்திவ் படேல் ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

நம்ப முடியவில்லை
கோலியின் அவுட் குறித்து ரசிகர் ஒருவர் கிரிக்இன்ஃபோ இணையத்தில், "ஆட்டம் முடிந்த பின்பு ஸ்கோர் போர்டைப் பார்த்தேன். விராட் கோலி டக் அவுட் என்று இருந்தது. இது தவறாக இருக்கும் என மீண்டும் மீண்டும் "செக்' செய்தேன். உண்மையிலேயே அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார் எனத் தெரிய வந்தது. இதை என்னால் நம்பவே முடியவில்லை. ஒருநாள் ஆட்டம் என்றால் 50 ரன்களும், இருபது ஓவர் ஆட்டம் என்றால் 30 ரன்களுக்கு குறைவில்லாமலும் எடுக்கக் கூடியவர் கோலி' எனக் குறிப்பிட்டிருந்தார்.
மும்பைக்கு எதிரான 7-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு சாம்பியனான மும்பை அணி தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தோல்வியும், பெங்களூரு அணி தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் வெற்றியும் பெற்றுள்ளன.

ad

ad