புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014

தென் கொரிய கப்பல் கடலில் மூழ்கிய போது அதிக அனுபவமில்லாத இளம்பெண் கேப்டன் ஓட்டியது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
தென் கொரிய தலைநகர் சியோலுக்கு அருகே உள்ள இன்செயான் துறைமுகத்தில் இருந்து, ஜெஜூ
தீவுக்கு கடந்த 16ம் திகதி சென்ற கப்பல் நடுக்கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மாயமான பலரைத் தேடும் பணி வானிலை காரணமாக தொய்வாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கப்பலின் கேப்டன் மற்றும் இரண்டு உதவி கேப்டன்களைக் கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், சம்பவம் ஏற்பட்ட போது கப்பலை ஆறு மாதங்களே அனுபவம் உடைய 25 வயது பெண் மாலுமி ஓட்டியது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அரசு வக்கீல் யாங் கூறுகையில், பார்க் ஹகில்ம்ஸ்மன் என்ற 25 வயது இளம் பெண் கப்பலை ஓட்டியுள்ளார்.
அவருக்கு அப்பணியில் வெறும் ஆறு மாதங்கள் மட்டுமே முன் அனுபவம் இருந்துள்ளது.
முன்னதாக அவர் கப்பல் எதையும் ஓட்டவில்லை, அப்போது தான் முதல் முறையாக கப்பலை ஓட்டியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
PrintSendFeedback

ad

ad