புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014


சிதம்பரத்தில் யார் சாதி கலவரத்தை தூண்டுபவர்கள் என தெரியும்? :க.அன்பழகன்
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.தி ருமாவளவனை ஆதரித்து திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் காட்டுமன்னார்கோயிலில் இன்று நடைபெற்றது. 



கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர், ’’பெரியார் ஊட்டிய உணர்வும், அண்ணா வளர்த்த பகுத்தறிவும்தான் நம்மை வாழ வைக்கிறது. அந்த கொள்கையுடன் வாழுபவர் திருமாவளவன். தாழ்த்தப்பட்ட, ஓடுக்கப்பட்ட, ஓரங்கப்பட்ட தலித் சமுதாய மக்கள் விழிப்புணர் வுக்காக பெரிய குரல் எழுப்பியவர். தன்னலம் கருதாமல் பாடுபடுபவர். சிதம்பரம் நகரில் 44 ஆண்டுகள் வாழ்ந்தவன், படித்தவன் நான். இங்கு யார் சாதி கலவரத்தை தூண்டுபவர்கள் என தெரியும். யார் ஆத்திரப்படுவார்கள், யார் நஷ்டப்படுவார்கள் என்பது தெரியும். ஆனால் திருமாவளவன் மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்ற பிறகு இன்று ஒரு அமைதி.
ஜனநாயக மனப்பாண்மை, ஒரு ஒற்றுமை, நாம் அனைவரும் ஒரு குலம், தமிழர்களாக வாழ வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட திராவிட இயக்கங்களின் நீதிகட்சி தலைவர்கள் தீண்டாமைக்கு எதிராக போராடியவர்கள். தாழ்த்தப்பட்டவர்கள் ஓடுக்கப்படுவது நியாயம் அல்லை என உரிமையை பெற்று தந்தவர் கருணாநிதி. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு உயர்பதவி வழங்கி பெருமைபட்டவர் கருணாநிதி. அப்படிப்பட்ட வரலாற்றை படைத்துள்ள இயக்கம் திராவிட இயக்கங்கள்.
நடைபெறவுள்ள தேர்தலில் மத்தியில் புதிய ஆட்சி மாற்றம் தேவை, மற்றொன்று தமிழகத்தில் நடைபெறும் ஆட்சிக்கு முடிவு கட்டும் என்னத்தை ஏற்படுத்தும் தேர்தலாக திகழ்கிறது. தமிழகம் முழுவதும் திமுகவிற்கு எழுச்சியும், வரவேற்பும் உள்ளதை பார்த்தால், திமுவை இனி தோற்கடிக்க முடியாது என்ற சிறப்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுபாடு உள்ளது. பாசனத்திற்கு நீர் இன்றி விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 7 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வருமானம் இல்லாமலும், இழப்பீடு கிடைக்காமலும் விவசாயிகள் மிகவும் அவதியுற்று வருகின்றனர்.
கருணாநிதி பயிர் இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தினார். அத்திட்டத்தை ஜெயலலிதா அரசு காப்பாற்ற தவறிவிட்டது. வாங்கிய கடனை கட்ட முடியவில்லை என்பதால் விவசாயிகள் பெற்ற 7 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்தவர் கருணாநிதி. புதிய கடளை வட்டியில்லா கடனாக மாற்றினார்.

தமிழகத்தில் திமுகவிற்கும், அதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளுடன் போட்டியில்லை. திமுகவினரி டையேதான், எந்த தொகுதியில் அதிக வாக்குகள் பெறுவது என்ற போட்டி நிலவுகிறது. இந்தியாவில் மோடி அலை வீசவில்லை. மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும்’’ என்று பேசினார்.

ad

ad