புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014


ராஜீவ் கொலை வழக்கு: நீதிபதியின் கருத்திற்கு அமெரிக்கை நாராயணன் எதிர்ப்பு
ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தொடர்பான விடுதலை வழக்கில் ஏப்ரல் 25ம் திகதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறியிருப்பதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் ஒரு செய்தித் தொடர்பாளராக இருந்து வரும் அமெரிக்கை நாராயணன், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் முறைப்பாடு கொடுத்துள்ளார்.
அந்த முறைப்பாட்டை தேவைப்பட்டால் தேர்தல் ஆணையப் பரிசீலனைக்கு அனுப்பி வைப்போம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியுள்ளார்.
அரசியல் தொடர்புள்ள வழக்கின் தீர்ப்பு பற்றி தலைமை நீதிபதி சதாசிவம் தேர்தல் நேரத்தில் பேசியுள்ளார். இது தவறு என அமெரிக்கை நாராயணன் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மையில், ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பாக அறிக்கை விட்ட இவர் தவறுதலாக, ராகுல் காந்தி கொலை வழக்கு என்று எழுதி, வாங்கிக் கட்டிக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad