புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014

 தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் தர கேரளம் தயார்: உம்மன் சாண்டி
தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் தர கேரளம் தயாராக உள்ளது என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.

கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஆர்.பிரபுவை ஆதரித்து கேரள முதல்வர் உம்மன்சாண்டி பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ''தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து நிற்பது என்ற சிறப்பான முடிவை எடுத்துள்ளது. இது காங்கிரசின் பலத்தை இங்கு மேலும் அதிகரிக்கும். தேசிய அளவில் காங்கிரஸ் முழக்கம், நிலையான அரசையும்,

மதச்சார்பற்ற இந்தியாவையுமே வலியுறுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் இதனை நிரூபித்துள்ளது.

பா.ஜ.க. மக்களிடையே உள்ள பிரிவினையை பயன்படுத்தி வெற்றி பெற முயற்சிக்கிறது. ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறாது. இந்திய மக்கள் நிச்சயம் மதச்சார்பின்மை மற்றும் நாட்டின் ஒருமைப்பட்டையே முக்கியப்படுத்துவார்கள். இந்தியாவில் மோடி அலை என்று எதுவும் இல்லை. வளர்ச்சியில் குஜராத் மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக மோடி கூறுவது உண்மையில்லை. கருத்துக்கணிப்பில் ஆந்திரா இரண்டாமிடத்திலும், தமிழ்நாடு மூன்றாமிடத்திலும், குஜராத் நான்காம் இடத்திலுமே உள்ளது.

யாருமே எதிர்பார்க்காத வகையில் காங்கிரஸ் அரசு ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மத்திய அமைச்சர்கள் கூட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். லோக்பால் சட்டவரைவு கொண்டு வந்தபோது, அனைத்து கட்சிகளும் எதிர்த்தன. ஆனாலும், காங்கிரஸ் அதனை நடைமுறைப்படுத்தியது.

கேரள-தமிழகத்திற்கிடையே தண்ணீர் வழங்குவதில் ஒருசில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நல்ல உறவு நிலவி வருகிறது. தமிழகத்திற்கு அதே கொள்ளளவில் தண்ணீர் வழங்க கேரளா தயாராக உள்ளது. கேரள தண்ணீர் தமிழ்நாட்டிற்கு பயன்படுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் நன்கு அறிந்துள்ளோம்.

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தண்ணீர் வழங்குவதில் எந்த கேள்வியும் இல்லை. அணை மிகவும் பழைய அணை என்பதே பிரச்சினை. 999 வருட ஒப்பந்தத்தின்படி, இந்த அணை சேதமடையாமல் இருக்கும் என யாரும் கூற முடியாது. எனவே, நாம் புதிய அணை கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள ஐந்து மாவட்ட மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை உள்ளது. அதனாலேயே புதிய அணை கட்ட வேண்டும் என தற்போது கேரள அரசு வலியுறுத்துகிறது.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதை எதிர்காலத்தில் தமிழ்நாடும் வலியுறுத்தும். புதிய அணை கட்டுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் விநியோகப்பதில் எந்த குறைபாடும் இருக்காது. தற்போது வழங்கப்படும் அளவு குடிநீரை கேரள அரசு வழங்கும். பலமான அணை என்பது மட்டுமே தற்போதையை தேவை" என்றார்

ad

ad